Advertisment

News Highlights: இட ஒதுக்கீடு முடிவு வரும்வரை கூட்டணி பற்றிய பேச்சுக்கே இடமில்லை- ராமதாஸ்

Tamil News : கொரோனா தடுப்பூசி தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

author-image
WebDesk
New Update
News Highlights: இட ஒதுக்கீடு முடிவு வரும்வரை கூட்டணி பற்றிய பேச்சுக்கே இடமில்லை- ராமதாஸ்

Tamil News Today : ஒடிசாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று

Advertisment

கடந்த 8-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 31 பேருக்கு தொற்று உறுதி.

கொரோனா தடுப்பூசி தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.

கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்கிறதா? - மக்கள் நீதி மய்யத்தின் பேனர்கள் அகற்றப்பட்ட நிலையில் கமல்ஹாசன் ட்வீட்

கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கும் அரசின் முடிவிற்கு கமல்ஹாசன் வரவேற்பு.

அமித்ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பாஜக தேசிய தலைவர் ஜேபிநட்டாவும், கர்நாடக பாஜக மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர். வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் அமித்ஷா கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல் தொடர்பாக இந்த சந்திப்பு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Live Blog

Tamil News Updates : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.



























Highlights

    22:01 (IST)11 Jan 2021

    முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி

    திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி: “தமிழகத்தில் பெரிய கட்சி அதிமுகதான். எங்களுடைய கூட்டணியில் இருக்கும் மிகப்பெரிய கட்சி. அதனால், முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மாணிக்கும். தமிழகத்தில் அவர்கள் பெரிய கட்சி. நாங்கள் இங்கே சிறிய கட்சி” என்று தெரிவித்துள்ளார்.

    21:55 (IST)11 Jan 2021

    தட்கல் முறையில் குறைந்த விலையில் சினிமா டிக்கெட் - அமைச்சர் கடம்பூர் ராஜு

    அமைச்சர் கடம்பூர் ராஜு: “அதிக விலையில் சினிமா டிக்கெட்டுகள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக தட்கல் முறையில் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை விற்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

    21:04 (IST)11 Jan 2021

    தமிழகத்தில் இன்று புதிதாக 682 பேருக்கு கொரோனா; 6 பேர் பலி

    தமிழகத்தில் இன்று புதிதாக 682 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 869 பேர் குணமடைந்தனர்.

    21:01 (IST)11 Jan 2021

    வாடிவாசலில் திருமணம் நடத்த அனுமதி வேண்டும் - மதுரை காதல் ஜோடி மனு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்பு தமிழ் மரபு வழியில் திருமணம் நடத்த அனுமதி வேண்டும் என்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மதுரையைச் சேர்ந்த காதல் ஜோடி மனு அளித்தனர்.

    20:58 (IST)11 Jan 2021

    இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை - ராமதாஸ்

    பாமக நிறுவனர் ராமதாஸ், “வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. வன்னியர்களின் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

    19:31 (IST)11 Jan 2021

    பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் ஜன. 25 வரை நீட்டிப்பு

    தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் ஜனவரி 18 முதல் ஜனவரி 25ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    18:30 (IST)11 Jan 2021

    கொரோனா விதிமுறை மீறல்: இதுவரை ரூ.3.48 கோடி அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி

    கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.3.48 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    17:59 (IST)11 Jan 2021

    அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதே இலக்கு - பிரதமர் மோடி

    பிரதமர் மோடி: “இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே மத்திய அரசின் இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.

    17:06 (IST)11 Jan 2021

    பிப்ரவரி 4ம் தேதிக்குள் அரியர் தேர்வு தேதி தாக்கல்- சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அரியர் தேர்வுகளை நடத்துவது தொடர்பான அட்டவணையை அடுத்த மாதம் நான்காம் தேதிக்குள் தாக்கல் செய்ய மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    16:24 (IST)11 Jan 2021

    அனுஷ்கா சர்மாவுக்கு பெண் குழந்தை: விராட் கோலி நெகிழ்ச்சி

    விராட் கோலி, அனுஷ்கா சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.  

    15:54 (IST)11 Jan 2021

    வழிபாட்டுத் தலங்கள் குறித்த கருத்தில் அரசியல் நோக்கமில்லை - ஜக்கி வாசுதேவ்

    வழிபாட்டுத் தலங்கள் நியாயத்துடன் நடத்தப்படவேண்டும் எனக் கேட்பது எப்படி அரசியல் நகர்வாக முடியும்? என் தாழ்மையான வேண்டுகோள் - ஆன்மீகம் தோய்ந்த இக்கலாச்சாரத்தில், வழிபடுவோர் கோயில்களை நிர்வகித்து வளர்க்கட்டும். இதில் அரசியல் நோக்கமில்லை. அவர்கள் 1947லேயே வெளியேறிவிட்டனர்.

    சில நாட்களுக்கு முன்னதாக ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் குறிப்பில், " தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல" என்று தெரிவித்திருந்தார்.     

    15:06 (IST)11 Jan 2021

    96.42 சதவீதம் பேர் குனமடைந்துள்ளனர்

    நாடு முழுவதும் கோவிட் - 19 பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 96.42 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    14:56 (IST)11 Jan 2021

    பதவிநீட்டிப்பு வழங்கும் ஆளுநர் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் - பொன்முடி

    பெரியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் முடிந்து - பிரிவு உபசார விழாவும் நடத்திய பிறகு பதவிநீட்டிப்பு வழங்கும் ஆளுநர் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்" என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி தெரிவித்தார்.    

    13:58 (IST)11 Jan 2021

    அரசாங்கம் பெண்கள் பாதுகாப்புக்காக என்ன செய்துள்ளது - கனிமொழி

    பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. நேற்று தாம்பரம் ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன்பாக இதே போன்ற ஒரு சம்பவம் நாகப்பட்டினத்தில் ஒரு கோயிலில் நடந்துள்ளது.  இந்த அரசாங்கம் பெண்கள் பாதுகாப்புக்காக என்ன செய்துள்ளது? அதிமுகவை சேர்ந்த குற்றவாளிகளை பாதுகாப்பது தான் அவர்களது ஒரே நோக்கமா?

    13:56 (IST)11 Jan 2021

    முள்ளிவாய்க்கால் நினைவு தூண்: இலங்கை துணை தூதரக முற்றுகை போராட்டத்தில் வைகோ கைது

    யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இலங்கை துணை தூதரக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது.    

    13:44 (IST)11 Jan 2021

    பறவை காய்ச்சல் நோய் பற்றிய கூடுதல் விழிப்புணர்வு தேவை - மத்திய அரசு

    பறவை காய்ச்சல் நோய் குறித்துத் தவறான தகவல்கள் பொதுமக்களிடையே பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நோய் பற்றிய கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.   

    13:39 (IST)11 Jan 2021

    நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி இந்தியா வரவுள்ளார்

    நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி வரும் 14ஆம் தேதி அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ளார்.  

    13:38 (IST)11 Jan 2021

    விளம்பரத்திற்காக அதிகமாக செலவிடுகிறது - முத்தரசன்

    தமிழக அரசு விளம்பரத்திற்காக அதிகமாக செலவிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

    12:50 (IST)11 Jan 2021

    கனமழைக்கு வாய்ப்பு.!

    தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.  தென் தமிழகமான தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். ராமநாதபுரம்,விருதுநகர்,நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு.  அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும என சென்னை வானிலை மையம் தகவல். 

    12:49 (IST)11 Jan 2021

    டிராவில் முடிந்த சிட்னி டெஸ்ட்

    சிட்னி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    12:47 (IST)11 Jan 2021

    வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்!

    முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வருகிறது. 

    12:47 (IST)11 Jan 2021

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு!

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்ப்ட்ட  ஹெரன்பால் என்பவருக்கு 2 நாள் சிபிஐ காவல் அளித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    11:58 (IST)11 Jan 2021

    மு. க ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து!

    தமிழ்ப்பெருமை காத்திடும் விழா, பொங்கல். ’ தமிழர் திருநாளை தமிழ்நாடெங்கும் சமத்துவப் பொங்கல் விழாவாக கொண்டாடுவோம் என்று மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். 

    11:57 (IST)11 Jan 2021

    வேதனை அளிப்பதாக ரஜினிகாந்த் ட்வீட்!

    அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் வற்புறுத்தாதீர்கள் . தலைமையின் உத்தரவை மீறி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது" ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு எனது நன்றி. அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணத்தை ஏற்கனவே விளக்கிவிட்டேன்  என்று ரஜினி ட்வீட் செய்துள்ளார். 

    11:17 (IST)11 Jan 2021

    கொரோனா தடுப்பூசி!

    தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை தயாராகி வருகிறது இன்றைய தினம், 45 சுகாதார மாவட்டங்களுக்கு 28 லட்சம் ஊசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசி,  அதிகபட்சமாக சென்னை மண்டலத்திற்கு 6.01 லட்சம் ஊசிகள் வழங்கப்பட்டுள்ளது . கோவை மண்டலத்திற்கு 3.79 லட்சம் ஊசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    11:09 (IST)11 Jan 2021

    24 மணி நேரமும் சென்னை மாநகரப் பேருந்துகள்!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றுமுதல் நாளை மறுநாள் வரை 24 மணி நேரமும் சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

    10:32 (IST)11 Jan 2021

    மீண்டும் சோதனை!

    சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பாண்டியனின் வீடு மற்றும் வங்கி லாக்கரில் சோதனை நடைப்பெற்று வருகிறது.

    சென்னையில் இருந்து 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் .வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    10:20 (IST)11 Jan 2021

    சென்செக்ஸ் புதிய உச்சம்!

    49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சென்செக்ஸ் புதிய உச்சம் .  மும்பை பங்குச்சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் 49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சம் . மும்மை பங்குச்சந்தை சென்செக்ஸ் 483 புள்ளிகள் அதிகரித்து 49,265 புள்ளிகளில் வர்த்தகம் நடைப்பெற்று வருகிறது. 

    10:02 (IST)11 Jan 2021

    டெல்லியிலும் பறவைக் காய்ச்சல்!

    டெல்லியிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  டெல்லியில் உயிரிழந்த 8 பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுல்ளது. 

    09:24 (IST)11 Jan 2021

    மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்!

    யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் அமைக்கப்படும் என துணைவேந்தர் உறுதி அளித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களின் கோரிக்கை மற்றும் அரசின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் அரசின் அங்கீகாரத்துன், மீண்டும் பழைய வடிவத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என துணைவேந்தர் உறுதி அளித்தார்.

    08:53 (IST)11 Jan 2021

    பொங்கல் சிறப்பு பேருந்துகள்!

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு அரசு பேருந்துகளுக்கான சேவை தொடங்கியது . சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் என இன்று 2,226 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போல், சென்னையிலிருந்து ஜன.13 வரை வெளியூர்களுக்கு 3 நாள்களுக்கு 10,228 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன . பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோருக்காக ஜன.17 முதல் 19ஆம் தேதி வரை 9,120 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    08:52 (IST)11 Jan 2021

    ராமதாசுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இன்று சந்திப்பு!

    பா.ம.க நிறுவனர் ராமதாசுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இன்று சந்திப்பு தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் நண்பகல் 12 மணிக்கு சந்திப்பு. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் . 20% தனி இடஒதுக்கீடு தராவிட்டால் அரசியல் முடிவு எடுப்போம் என பா.ம.க அறிவித்திருந்த நிலையில் முக்கிய சந்திப்பு. 

    Tamil News Today : ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்.1 ஆம் தேதி உண்ணாவிரதம் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.

    News Highlights: மோடி பெயரைக் கேட்டால் அதிமுக அரசுக்கு நடுக்கம்- ப.சிதம்பரம்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி : 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் மிஞ்சியுள்ள நிலையில் இந்தியா வெற்றி பெற மேலும் 309 ரன்கள் தேவை

    ரேஷன் கடைகளில் பனங்கருப்பட்டி கிடைக்க தமிழக அரசு பரிசீலனை செய்யும் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment