Advertisment

Tamil News Today : பல்கலைக்கழகங்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர்கல்வித்துறை அனுமதி

Tamil News Today : டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி

author-image
WebDesk
New Update
Tamil News Today : பல்கலைக்கழகங்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர்கல்வித்துறை அனுமதி

Tamil News Today : மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள். அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை

Advertisment

அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை. சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல். சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.

வேலூர் மாவட்டத்தில் போலியான முகவரி கொடுத்து கிசான் நிதி உதவி திட்டத்தில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் முறைக்கேடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 33 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு 60 லட்சம் ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள தொகையை விரைவில் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவருவதாக வேளாண் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையேற்றத்தை தடுக்கவும் உள்ளூர் சந்தைகளில் போதுமான இருப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:41 (IST)15 Sep 2020

    அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா காண்டுவிற்கு கொரோனா தொற்று உறுதி

    அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா காண்டுவிற்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    21:24 (IST)15 Sep 2020

    பல்கலைக்கழகங்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர்கல்வித்துறை அனுமதி

    தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தை தவிர 12 பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தப்படும் என அறிவித்துள்ளன.

    19:34 (IST)15 Sep 2020

    நீட் தேர்வை அமல்படுத்தியது பாஜக ஆட்சியில்தான் - காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பதில்

    தமிழக சட்டப் பேரவையில், நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சிதான் என்று முதல்வர் பழனிசாமி கூறிய நிலையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், நீட் தேர்வை அமல்படுத்தியது பாஜக ஆட்சியில்தான் என்று முதல்வர் பழனிசாமிக்கு பதில் அளித்துள்ளார். நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ்தான் என்று முதல்வர் பழனிசாமி சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    19:29 (IST)15 Sep 2020

    நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் முதல்வர் பழனிசாமிதான் - மு.க.ஸ்டாலின்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று திமுக மும்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் முதல்வர் பழனிசாமிதான் காரணம் என்று கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    18:39 (IST)15 Sep 2020

    நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின், நடிகர் சூர்யா யாரும் அரசியல் செய்ய வேண்டாம் - எல்.முருகன்

    செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன், 2ஜியில் ஊழல் செய்வதையே சிந்தனையாகக் கொண்டிருந்ததால் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின்போது நீட் தேர்வு குறித்து திமுக வாய்திறக்கவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில், ஸ்டாலின் நடிகர் சூர்யா உள்ளிட்ட யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறினார்.

    18:36 (IST)15 Sep 2020

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா

    திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. முப்பெரும் விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் விருதை முன்னாள் எம்.எல்.ஏ உபயதுல்லாவுக்கு வழங்கினார். பெரியார் விருது மீனாட்சி சுந்தரத்திற்கும், அண்ணா விருந்து ராமசாமிக்கும் வழங்கினார்.

    18:14 (IST)15 Sep 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 5,697 பேருக்கு கொரோனா; 68 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோன பாதிப்பால் 68 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:58 (IST)15 Sep 2020

    முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வை நீட்டிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

    முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரி தமிழக அரசு மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு, முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது என்று பதில் அளித்துள்ளது.

    16:03 (IST)15 Sep 2020

    கொரோனாவை எதிர்கொள்ள தமிழகத்துக்கு ரூ. 511.64 கோடி

    கொரோனாவை எதிர்கொள்ள தமிழகத்திற்கு ரூ. 511.64 கோடி இதுவரை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கேள்விக்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    15:56 (IST)15 Sep 2020

    மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி விவகாரம்

    மத்திய அரசுக்கு பல வழிகள் இருப்பதால் மாநிலங்களுக்கு தேவையான நிதியை திரட்டி வழங்க இயலும். ஆனால் மாநிலங்கள் ஏற்கனவே கடன் சுமையில் உள்ள நிலையில் அவசர தேவைக்கு கூட கடன் பெற இயலாத நிலை உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

    15:55 (IST)15 Sep 2020

    சீனாவுடனான எல்லை பிரச்சனை இன்னும் தீரவில்லை - ராஜ்நாத் சிங்

    சீனாவுடனான எல்லை பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக இந்திய - சீன உறவில் தாக்கம் ஏற்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

    15:44 (IST)15 Sep 2020

    வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை - ராஜ்நாத் சிங்

    மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி வருகிறார். சீன-இந்திய எல்லை பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளித்து வருகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர்.

    15:43 (IST)15 Sep 2020

    மாணவர்கள் ஏ4 தாளில் தேர்வுகள் எழுதி அனுப்பி வைக்கலாம் - மெட்ராஸ் யுனிவர்சிட்டி

    இறுதி செமஸ்டர்கள் தேர்வு ஆன்லைனில் இல்லை என்று அறிவித்துள்ளது சென்னை பல்கலைக்கழகம். மேலும் 18 பக்கங்களுக்கு மிகாமல் விடைகளை ஏ4 தாள்களில் எழுதி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவு.

    15:01 (IST)15 Sep 2020

    உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் - கேரளாவில் ஆர்பாட்டம்

    கேரளா மகிளா மோர்ச்சா மற்றும் மாணவர்கள் சங்கத்தினர் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டீ. ஜலீல் பெயர் அடிபட்டிருப்பதால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    14:59 (IST)15 Sep 2020

    சென்னையில் ஓட்டுநர்கள் போராட்டம்

    சாலை வரி மற்றும் ஐந்து மாத தவணைகள் மீதான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி உரிமை குரல் ஓட்டுநர்கள் சங்கத்தினர் சென்னையில் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக நாங்கள் வண்டியே ஓட்டவில்லை. நிறுவனங்கள் இ.எம்.ஐ. செலுத்த கூறுகிறார்கள். எங்கிருந்து நாங்கள் பணம் செலுத்துவோம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

    14:22 (IST)15 Sep 2020

    மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு

    மருத்துவப்படிப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மருத்துவ படிப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

    14:22 (IST)15 Sep 2020

    நீட் விவகாரத்தில் திமுகவின் யோசனையை ஏற்க தயார் - விஜயபாஸ்கர்

    8 மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் எப்படி ரத்து செய்வீர்கள் என்ற வழியை சொல்லுங்கள் நாங்கள் உங்களின் யோசனையை ஏற்றுக் கொள்கிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் பேச்சு.

    14:18 (IST)15 Sep 2020

    இந்திய கலாச்சாரம் குறித்த ஆய்வு குழுவில் ஏன் சிறுபான்மையினர் இடம் பெறவில்லை? -கனிமொழி

    இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் சிறுபான்மையினர் ஏன் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் கனிமொழி.

    13:53 (IST)15 Sep 2020

    பேரவையில் முதல்வர் ஆவேசம்!

    நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது? யார் அறிமுகப்படுத்தினார்கள்? பதில் சொல்லுங்கள்.காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது.ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் கொண்டு வந்து வரலாற்று பிழை செய்தது திமுக.

    நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம் என்று முதலமைச்சர் ஆவேசமாக கூறினார்.

    13:53 (IST)15 Sep 2020

    இந்திய கலாசாரத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வு!

    இந்திய கலாசாரத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த முழுமையான ஆய்வு செய்ய திட்டம் . புதிய ஆய்வு நடத்துவதற்கு ஒரு நிபுணர் குழு அமைத்தது மத்திய அரசு . மத்திய கலாசாரம், சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் 6 பேர் கொண்ட குழுவில் தென்னிந்தியர் யாரும் இடம்பெறவில்லை .  மத்திய அரசின் 16 பேர் கொண்ட குழுவில் ஒரு பெண் ஆய்வாளர் கூட இடம்பெறவில்லை . 

    13:22 (IST)15 Sep 2020

    துணைவேந்தர் நடவடிக்கை.!

    சென்னை பல்கலையில் தமிழ்ப்பாட வேளை குறைப்பு நடவடிக்கை வாபஸ் . அரசியல் ரீதியிலான கடும் எதிர்ப்பால் துணைவேந்தர் நடவடிக்கை.  

    13:21 (IST)15 Sep 2020

    கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை!

    கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல் . மாவட்ட மருத்துவமனையில் உள்ள தொழில் நுட்பத்தை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை. 

    12:28 (IST)15 Sep 2020

    ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்!

    நீட் தேர்வு குறித்து பேரவையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்.  நீட்-க்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது . அந்த தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் வாங்கவில்லை என ஸ்டாலின் குற்றச்சாட்டு. 

    12:27 (IST)15 Sep 2020

    காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றம்!

    நீட் தேர்வு தொடர்பான கவனஈர்ப்பில் பேச காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு . காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு. சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

    11:31 (IST)15 Sep 2020

    முதல்வர் மரியாதை!

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலர்தூவி மரியாதை செய்தார். இதைதொடர்ந்து, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அண்ணா படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 

    11:30 (IST)15 Sep 2020

    பாடத்திட்டங்கள் கணிசமாக குறைப்பு!

    1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் கணிசமாக குறைப்பு , பணிகளை முடித்தது கல்வித்துறை  குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் நடப்பு கல்வி ஆண்டில் அமல். 

    11:29 (IST)15 Sep 2020

    கமல்ஹாசன் ட்வீட்!

    பேரறிஞர் அண்ணா - திராவிடப் பெருங்கனவு கண்டு, தமிழர் நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

    11:29 (IST)15 Sep 2020

    கனிமொழி எம்.பி ட்வீட்!

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று, அவரது கருத்துகளையும் லட்சியங்களையும் நினைவு கொள்வோம் - கனிமொழி எம்.பி.

    10:12 (IST)15 Sep 2020

    திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை!

    ன்னாள் முதல்வர் அண்ணா 112ஆவது பிறந்த நாள் - அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

    Tamil News Today : மாநிலங்களவையிலும் கேள்வி நேரம், தனிநபர் மசோதாவை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றம்.

    நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என்றார். அமைச்சர் பாண்டியராஜன். நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டையே சூர்யாவும் தெரிவித்துள்ளார், இதில் தவறேதுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சூர்யா மீது நடத்தப்படும் தாக்குதல் உள்நோக்கம் கொண்டது , நடிகர் சூர்யா குறி வைக்கப்பட்டால் காங்கிரஸ் துணை நிற்கும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    ஒத்திவைக்கப்பட்ட நெட் தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது

    நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க

    அடுத்த ஊரடங்கு செப்டம்பர் 25 லிருந்து அமலுக்கு வரும் என சமூக ஊடகங்களில் பரவிவந்த அறிக்கை போலியானது என அரசு தெரிவித்துள்ளது .

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment