Tamil News Today Live : தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம். நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு ஆகியவற்றை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம்.
நீட் தேர்வு விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்குமாறு, திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில். இது குறித்து மக்களவையில் விவாதிக்க திமுக வலியுறுத்தியுள்ளது. அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து தீர்மானம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசை மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வழங்கியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு தெளிவாக ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Tamil News : திருச்செங்கோட்டில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் மோதிலால் குடும்பத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். மோதிலாலின் சகோதரர் சுபாஷை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பின்னர் மோதிலால் படத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு அக்குடும்பத்திற்கு திமுக இளைஞரணி சார்பாக 5 லட்சம் ரூபாயை நிதியுதவியாக உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கொரோனா காலகட்டத்தால், கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.இதனால், கலைவாணர் அரங்கம் முழுவதும் காவல்துறையும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. சட்டப்பேரவை வளாகத்தில் 150 அவைக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல வளாகத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் கிருமிநாசினிகள் கொண்டு தொடர்ச்சியாக சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அரங்கில் தனி நபர் இடைவெளியுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்காக மூன்றாவது தளத்தில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
Web Title:Tamil news today live tn assembly parliment monsoon session neet protest actor suriya corona vaccine
எதிர்காலத்தில் நோய் தொற்று சவால்களை எதிர்கொள்ளும் ஆராய்ச்சிக்கு 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார் .
திரையரங்குகளை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தவறானவை என்று மத்திய அரசு தெரிவித்தது.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்படும் யுஜிசி-தேசிய தகுதித் தேர்வு (யுஜிசி-நெட்)-செப்.24 முதல் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test-NET) இந்தியாவிலுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் ஆவதற்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறுவதற்கானத் தகுதியையும் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படுகிறது
விவசாயிகள் உற்பத்தி பொருள் விற்பனை மற்றும் வணிக (மேம்பாடு மற்றம் வசதி) மசோதா, 2020
விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகளின் விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் மசோதா, 2020
அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, 2020
ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார்
நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என்றும், நீட் தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாட்டையே சூர்யாவும் பிரதிபலித்துள்ளார் என்று அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்தார்.
சுயச்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 42 லட்சம் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 226 கோடி ரூபாய் கடன்களை வழங்க, வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் புதிதாக 5,752 (நேற்றைய எண்ணிக்கை 5,693) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
2021 ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்காக, தேசிய பயிற்சி முகாம்கள் முழு பாதுகாப்பு விதிமுறைகளுடன் செயல்பட தொடங்கியுள்ளன என்று விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிச்சு தெரிவித்தார்
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை மையம், M.E, M.Arch போன்ற பொறியியல் பட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதியை இம்மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது
அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், எந்த மொழியையும் திணிக்க கூடாது அல்லது எதிர்க்க கூடாது என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். இந்தி தினம் - 2020-ஐ முன்னிட்டு மதுபன் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
2021-ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான மனுக்கள்/பரிந்துரைகளை நாளை (செப்டம்பர் 15) வரை சமர்ப்பிக்கலாம்.
பத்ம விருதுகளுக்கான இணையதளத்தில் (https://padmaawards.gov.in) மட்டுமே மனுக்கள்/பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மாநிலங்களவையின் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு செய்யப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு அறிவித்தார். மாநிலங்களவை துணைத் தலைவருக்கான குரல் வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது.
தமிழகத்தில் , செம்மரக் கட்டை கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்தி தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தி மொழியையும், தங்களது தாய்மொழியையும் மேம்படுத்தவும், பாதுகாக்கவும், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அமித்ஷா நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார் .
தாய் மொழியுடன், இந்தியையும் வளர்ப்போம் – அமித் ஷா
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. மாதிரி ஆன்லைன் தேர்வு 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், இறுதி செமஸ்டர் தேர்வில் 40 கேள்விகள் கேட்கப்படும், அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதிலளித்தால் போதுமானது எனது அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் மூலம் ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கின் விசாரணை கண்காணிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மோசடி செய்யப்பட்ட பணம் குறித்து பொருளாதார குற்றவியல் பிரிவு போலீசார் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 5 பேர் நாளை ஆஜராக கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்வப்னா சுரேஷ் நெஞ்சுவலி காரணமாக திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட பரிசோதனையில் 17 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி லேக்கி, ஆனந்த் குமார் ஹெக்டே, பர்வேஷ் ஷாஹிப் சிங் உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டுவந்த விவகாரத்தில், புதிய நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கோரி தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு. தொடர்புடைய நீதிபதியிடம் முறையிடுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தல். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முறையீடு.
நீதிபதிகளை அவதூறாக பேசியதாக நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
ஜூலையில் 0.58% ஆக இருந்த நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஆகஸ்ட்டில் 0.16% ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் பொருளாதாரம் மீண்டு வருவதன் அறிகுறியாக பணவீக்கம் உயர்ந்துள்ளது.
ஒன்றிணைவோம் மாணவர்களோடு துணை நிற்போம் என நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
நீட் தேர்வு தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம். மாணவர்களின் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி
செப்டம்பர் 21 முதல் திறன் பயிற்சி நிறுவனங்கள், ஆய்வகங்களில் டெக்னிக்கல் ப்ரோகிராம் நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என்று அறிவித்த மத்திய அரசு அதற்கென சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது
வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்பு . திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
நீட் தேர்வு விவகாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு . சட்டப்பேரவையில் நாளை எதிர்க்கட்சிகள் நீட் பிரச்சினையை எழுப்பலாம் என்பதால் ஆலோசனை
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டனத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட கோரிய வழக்கு தள்ளுபடி. கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கையை அரசு தான் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து.
தேமுதிக கட்சி துவங்கி 16ம் ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தடுப்பூசி குறித்து மக்களுக்கு ஏதாவது நம்பிக்கையின்மை இருந்தால் அதை போக்க தாமே முதல் நபராக தடுப்பூசியை போட்டுக் கொள்ளத் தயார் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தடுப்பூசி வரும் மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும் என்றார்.
நீட் தேர்வின் காரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் . திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மக்களவையில் பேச்சு . நீட் பாடத்திட்டத்தின் காரணமாகவே தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் டி.ஆர்.பாலு கூறினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால் . மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின் சட்டப்பேரவை ஒத்திவைப்பு.
தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாஸ்க் அணிந்து பேரவையில் பங்கேற்பு
Ban NEET, Save TN Students - நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய மாஸ்க்குடன் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைவுக்கு வந்தனர்.
கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் . கொரோனாத் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி
நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம். நீட்டுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய மாஸ்க்கை அணிந்து நூதன போராட்டம்.
நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடிதம்
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. மறைந்த கன்னியாகுமரி எம்.பி., வசந்தகுமாருக்கு மக்களவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது