Tamil News Today: இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பாக இந்த ‘லைவ் ப்ளாக்’ அமைகிறது. முக்கியத் தகவல்களை உடனுக்குடன் இந்தத் தளத்தில் நீங்கள் காணலாம். அரசியல், சமூகம், விளையாட்டு, வானிலை உள்பட அத்தனை அப்டேட்களுடன்!
திங்கட்கிழமை நடைபெற்ற அதிமுக செயற்குழுவின் தொடர் காட்சிகளை இன்னும் காண முடிகிறது. சென்னையில் செவ்வாய்க் கிழமை காலை பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், ‘அதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்படும்’ என நேற்று கே.பி.முனுசாமி கூறியதை உறுதி செய்தார். வேளாண் மசோதாக்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு செவ்வாய்க்கிழமை காலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றனர். செயற்குழு நிகழ்வுகள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட நகர்வை ஓபிஎஸ் தரப்பு எப்படி செயல்படுத்துவது? என்பது குறித்தும் பேசியிருக்கலாம் என தெரிகிறது.
Live Blog
Tamil Nadu, Chennai Latest News: முக்கியத் தகவல்களை உடனுக்குடன் இந்தத் தளத்தில் நீங்கள் காணலாம். அரசியல், சமூகம், விளையாட்டு, வானிலை உள்பட அத்தனை அப்டேட்களுடன்!
ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியில் மீதமுள்ள இடங்களில் அகழாய்வு நடத்தப்பட வேண்டும். முந்தைய ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும். வாக்குறுதி அளித்தபடி மத்திய அரசு உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
The Vice President of India who underwent a routine COVID-19 test today morning has been tested positive. He is however, asymptomatic and in good health. He has been advised home quarantine. His wife Smt. Usha Naidu has been tested negative and is in self-isolation.
— Vice President of India (@VPSecretariat) September 29, 2020
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
What happened in #Hathras is inhumane and goes beyond cruelty. Hope the culprits of this heinous crime will be brought to justice. #JusticeForManishaValmiki
— Virat Kohli (@imVkohli) September 29, 2020
ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது. இந்த கொடூர குற்றத்தை செய்த குற்றவாளிகள் அனைவரும் நீதிக்கு முன் கொண்டு வரப்படுவார்கள் என்று நம்புகிறேன் என விராட் கோலி தனது ட்விட்டரில் தெரிவித்தார்
செப்டம்பர் 14 ஆம் தேதிஉத்திரபிரேதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நான்கு உயர் சாதி ஆண்களால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட 19 வயது தலித் பெண் புதுடெல்லி மருத்துவமனையில் இன்று பலியானார்.
மேலும், விவரங்களுக்கு
தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை நீட்டிக்கப்படுகிறது. மேலும், திரையரங்கு, நீச்சல்குளம், சுற்றுலாத்தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீட்டிப்பு.
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,501 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது. அதாவது,கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 90.58% குணமடைந்துள்ளனர்.
இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு 2,290 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பாதுகாப்பு கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனையாளர்களிடமிருந்து இவற்றை கொள்முதல் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று 70 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று 70 பேர் உயிரிழந்தனர்.
2 ஜி மேல்முறையீடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ, அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்பதாக அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இந்த வழக்கில் திமுக.வை சேர்ந்த கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் 2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது. டிடிவி தினகரன் உள்பட 9 பேர் குற்றம் சாட்டப்பட்ட அந்த வழக்கில் 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டசுகேஷ் சந்திரசேகர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் குறித்து காலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடந்த நிலையில், பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடந்தது. இதன் முடிவில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதில்லை என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், இடைத்தேர்தலை தவிர்க்கிறது தேர்தல் ஆணையம்.
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸை கடந்தாண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் இன்று சந்தித்தார். சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஓபிஎஸ் மூத்த நிர்வாகிகள் சிலருடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன் தனது ஆதரவாளர்களுடன் வந்து சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மருத்துவக் குழுவுடனான ஆலோசனைக்குப் பிறகு 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளித் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என அண்மையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் இன்று தெரிவித்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் நடத்திய அதிகாரபூர்வமற்ற ஆலோசனை நிறைவு பெற்றது. நேற்றைய செயற்குழு நிகழ்வுகள் குறித்து இதில் பேசியதாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொது முடக்கம் முடிந்து மற்றப் பணிகள் சகஜமான பிறகும் சென்னை மெரினா கடற்கரை இன்னும் பொதுமக்களுக்கு திறந்து விடப்படவில்லை. மெரினா கடற்கரை திறப்பு எப்போது? என அக்டோபர் 5-ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
பொதுமுடக்கம் நாளையுடன் முடியவிருக்கும் சூழலில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். பொதுமுடக்க தளர்வுகளால் கொரோனா பரவல் அதிகரிக்கிறதா? மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் எந்த அளவில் உள்ளன என்பது குறித்து இந்த ஆலோசனை நடக்கிறது.
துணை முதல்வர் ஓபிஎஸ் இதில் பங்கேற்கவில்லை. அவர், தனது இல்லத்தில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஆலோசித்து வருகிறார்.
ஓபிஎஸ் தரப்புக்கு செயற்குழுவில் பெரிதாக ஆர்வம் இல்லை. கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ‘அக்டோபர் 7-ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு உறுதி’ என்றார். அதற்கு முன்பாக செப்டம்பர் 30-ல் மூத்த தலைவர்கள் கலந்து பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights