Advertisment

Tamil News Updates: மக்களவை தேர்தல் : தமிழகத்தில் 664 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Tamil News Live Updates- 28 March 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha Elections 2024 schedule Phases wise polling states Tamil News

IE Tamil Updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் லிட்டர் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

ஐ.பி.எல்- இன்றைய போட்டி 

2024 ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Mar 28, 2024 23:23 IST
    மக்களவை தேர்தல் : தமிழகத்தில் 664 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

    தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு 1,749 வேட்பு மனுக்களில் 664 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு 1,085 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது



  • Mar 28, 2024 23:22 IST
    தனியார் மதுபான விடுதி விபத்து : மெட்ரோ பணிகள் காரணமல்ல என விளக்கம்

    சென்னை, ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபான விடுதி விபத்துக்கு மெட்ரோ பணிகள் காரணமல்ல விபத்து நடந்த கட்டிடத்திற்கு 240 அடி தொலைவில் தான் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது என மெட்ரோ ரயில் விளக்கம் அளித்துள்ளது.



  • Mar 28, 2024 21:11 IST
    புதுச்சேரியில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் பிரச்சாரம்

    புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நமச்சிவாயத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார். பிரசார வாகனத்தில் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் அனைத்தும் இடம்பெற்றிருந்த நிலையில், த.மா.கா. கொடி மட்டும் இல்லாதது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாமல், வாகனத்தில் ஏறி நமச்சிவாயத்துக்காக வாக்குகளை சேகரித்தார் ஜி.கே.வாசன்.



  • Mar 28, 2024 21:10 IST
    கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து : பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!



  • Mar 28, 2024 20:54 IST
    இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்; அமைச்சர் பொன்முடி

    “நடைபெறவுள்ள தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும். ‘பானை’ சின்னத்தை முடக்குவதற்காக யார் என்ன செய்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் விசிக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என பொன்முடி கூறினார்.



  • Mar 28, 2024 20:51 IST
    மு.க. ஸ்டாலின் உடன் இயக்குனர் ஷங்கர் திடீர் சந்திப்பு

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் இயக்குனர் ஷங்கர் திடீர் சந்திப்பு நடத்தினார். அப்போது தனது மகளின் திருமண அழைப்பிதழை அவர் வழங்கினார்.



  • Mar 28, 2024 20:50 IST
    மதுபான விடுதி விபத்தில் இருவர் உயிரிழப்பு?

    சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி மணிப்பூரை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Mar 28, 2024 20:48 IST
    மேற்கு தொடர்ச்சி மலையில் வெடித்து சிதறிய பாறைகள்?

    கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பலத்த சத்தத்துடன் பாறைகள் உருண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



  • Mar 28, 2024 20:01 IST
    வைகோவின் வாரிசு அரசியலால் எம்.பி படுகொலை; தமிழிசை குற்றச்சாட்டு

    “வைகோவின் வாரிசு அரசியலால் ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி படுகொலை செய்யப்படுள்ளார்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டினார்.



  • Mar 28, 2024 19:30 IST
    சாதி, மதவாதம் அதிகரிப்பு; பா.ஜ.க ஆட்சியில் வளர்ச்சி இல்லை: தொல். திருமாவளவன்

    “10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை, பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைத்து பிரதமர் நரேந்திர மோடி நாடகமாடுகிறார்.
    தனியார் முதலாளிகளுக்காக பிரதமர் மோடி பாடுபடுகிறார்; சாதி, மத வெறி உணர்வுகளை தூண்டுவது தான் பாஜகவின் செயல்பாடுகளாக உள்ளது” என தொல். திருமாவளவன் விழுப்புரத்தில் பரப்புரையாற்றினார்.



  • Mar 28, 2024 18:57 IST
    பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின்... எனக்கா முதுகெலும்பு இல்லை... வா ஸ்ட்ரென்த் பார்க்கலாம் - இ.பி.எஸ் சவால்

    விருதுநகரில் தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஸ்டாலின் எனக்கு முதுகெலும்பு இல்லை என்று கூறுகிறார். மு.க. ஸ்டாலின். எனக்கு முதுகெலும்பு வலுவாக இருக்கிறது. வா ஸ்ட்ரென்த் பார்க்கலாம். எல்லை மீறி பேசினால், எங்கள் இயக்கம் அதைவிட பலமடங்கு பதிலடி கொடுப்பார்கள்” என்று கூறினார்.



  • Mar 28, 2024 18:42 IST
    ஆளுநர் நடுநிலையோடு செயல்பட்டிருந்தால் சட்டமன்றத் தேர்தல் வந்திருக்கும் - இ.பி.எஸ்

    விருதுநகரில் தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  “நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் ஆளுநரிடம் ஊழல் புகார் அளித்தார்கள். இப்போது ஆளுநர் நடுநிலையோடு செயல்படவில்லை என்று கூறுகிறார். நாங்கள் தி.மு.க மீது ஊழல் புகார்களை அளித்தோம். அந்த புகார்களை ஆளுநர் விசாரித்து நடுநிலையோடு செயல்பட்டிருந்தால், மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வந்திருக்கும்” என்று கூறினார்.



  • Mar 28, 2024 18:31 IST
    நமது வேட்பாளரைவிட கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற அதிகம் உழைக்க வேண்டும் - இ.பி.எஸ் பிரச்சாரம்

    விருதுநகரில் தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நமது வேட்பாளரைவிட கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற அதிகம் உழைக்க வேண்டும். கூடுதலாக நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டும். தி.மு.க-வில் கூட்டணி வேட்பாளரை அழ வைத்துள்ளார்கள்” என்று ம.தி.மு.க வேட்பாளர் கண்ணீர் விட்டதை சுட்டிக்காட்டிப் பேசினார்.



  • Mar 28, 2024 18:23 IST
    கரும்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சியின் வேட்பாளர் கந்தன் வேட்பு மனு நிராகரிப்பு

    நாம் தமிழர் கட்சி வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னத்தை, இந்த தேர்தலில் பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கந்தன் என்பவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

    அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டிருந்ததாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் கோரிக்கை வைத்ததால் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



  • Mar 28, 2024 18:16 IST
    கிருஷ்ணகிரியில் உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்த அ.தி.மு.க வேட்பாளர்

    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் முஸ்லிம்பூர் எனும் பகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபிரகாஷ் உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்தார். உங்கள் நண்பனான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர்களிடம் பேசினார்.



  • Mar 28, 2024 18:14 IST
    சூர்யா நடிக்கும் 44வது படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்

    நடிகர் சூர்யா நடிக்கும் 44வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.



  • Mar 28, 2024 18:13 IST
    அமைச்சர் ஐ. பெரியசாமியின் மனு தள்ளுபடி - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

    வீட்டு வசதி வாரியத்தின் வீட்டுமனையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு வழக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க கோரிய அமைச்சர் ஐ பெரியசாமி மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Mar 28, 2024 18:12 IST
    ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தின் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தின் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.



  • Mar 28, 2024 18:03 IST
    இந்தியில் பேசி வாக்கு சேகரித்த சௌமியா அன்புமணி

    பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சௌமியா அன்புமணி இந்தியில் பேசி வாக்கு சேகரித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



  • Mar 28, 2024 17:57 IST
    உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் முஸ்லிம்பூர் எனும் பகுதியில் உருது மொழியில் பேசி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் வாக்கு சேகரித்துள்ளார் . உங்கள் நண்பனான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர்களிடம் பேசினார்.



  • Mar 28, 2024 17:53 IST
    மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாக கூடிய வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும் மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



  • Mar 28, 2024 17:12 IST
    சொந்தமாக ஒரு கிராம் தங்கம், வெள்ளி கூட கிடையாது - திருமாவளவன் வேட்புமனுவில் தகவல்

    திருமாவளவனுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி கூட கிடையாது என தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மேலும், கோடிக் கணக்கில் சொத்து வைத்திருக்கும் வேட்பாளர்கள் தங்கள் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை என்று வேட்புமனுவில் கூறியுள்ள நிலையில், திருமாவளவன் தனக்கு சொந்தமாக 4 வாகனங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.



  • Mar 28, 2024 17:09 IST
    எல்.முருகன், தமிழிசைக்கு ஒரு நியாயம்.. ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமனுக்கு ஒரு நியாயமா? செல்வப்பெருந்தகை கேள்வி

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,  “எல்.முருகன், தமிழிசைக்கு ஒரு நியாயம்.. ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமனுக்கு ஒரு நியாயமா? இதற்கு பாஜக பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று கேள்வ் எழுப்பியுள்ளார்.



  • Mar 28, 2024 16:53 IST
    பிரபுல் படேல் மீதான ஊழல் வழக்கு முடித்து வைப்பு

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணியில் கடந்தாண்டு தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் இணைந்த நிலையில், அவர் உடன் சென்ற எம்.பி. பிரபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ முடித்து வைத்தது



  • Mar 28, 2024 16:30 IST
    பீட்டர் அல்போன்ஸ் புத்தகம்; மு.க.ஸ்டாலின் வெளியீடு

    "வீழட்டும் பாசிசம், வெல்லட்டும் ஜனநாயகம் - ஒன்றியத்திலும் அமையட்டும் திராவிட மாடல் அரசு" என்ற தலைப்பில் பல்வேறு ஆளுமைகள் எழுதியுள்ள கட்டுரைகளைத் தொகுத்து பீட்டர் அல்போன்ஸ் தயாரித்துள்ள புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். புத்தகத்தின் பிரதிகளை அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஆலந்தூர் பாரதி, NR இளங்கோ, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.



  • Mar 28, 2024 16:02 IST
    அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்-க்கு அமலாக்கத்துறை விசாரணைக் காவலை ஏப்ரல் 1 வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Mar 28, 2024 15:46 IST
    டி.டி.வி தினகரன் வேட்புமனு ஏற்பு

    தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. முன்னதாக தாமதமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.



  • Mar 28, 2024 15:33 IST
    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு

    தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்றுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.



  • Mar 28, 2024 15:13 IST
    மக்களவை தேர்தல் பிரசாரம்; ஏப்.4ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா

    உள்துறை அமித்ஷா மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக ஏப்ரல் 4ல் தமிழகம் வருகிறார். வரும் 5ம் தேதி சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார். மதுரை, சிவகங்கை தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Mar 28, 2024 14:59 IST
    தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

    காரைக்கால் ஒட்டு மொத்த மீனவ கிராமங்களும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு படகோட்டி முருகானந்தத்திற்கு இலங்கை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு



  • Mar 28, 2024 14:59 IST
    ஏப்ரல் 4ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

    ஏப்ரல் 4ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 29வது கூட்டத்திற்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அழைப்பு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு.



  • Mar 28, 2024 14:32 IST
    மக்களவை தொகுதி - வேட்புமனு ஏற்பு

    தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் வேட்புமனு ஏற்பு.



  • Mar 28, 2024 14:32 IST
    மக்களவை தொகுதி - வேட்புமனு ஏற்பு

    சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனின் வேட்புமனு ஏற்பு.



  • Mar 28, 2024 13:42 IST
    மக்களவை தொகுதி - வேட்பு மனுக்கள் ஏற்பு

    நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன், திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனுக்கள் ஏற்பு.



  • Mar 28, 2024 13:40 IST
    கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி

    அமலாக்கத்துறையின் காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரி தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 



  • Mar 28, 2024 13:31 IST
    மக்களவை தொகுதி - வேட்பு மனுக்கள் ஏற்பு

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அவருக்கு எதிராக மனு தாக்கல் செய்த 5 பன்னீர் செல்வங்களின் வேட்பு மனுக்களும் ஏற்பு. 



  • Mar 28, 2024 13:30 IST
    மக்களவை தொகுதி - வேட்பு மனுக்கள் ஏற்பு

    தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு ஏற்பு ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் வேட்பு மனு ஏற்பு.



  • Mar 28, 2024 13:27 IST
    செந்தில் பாலாஜி மனு- அமலாக்கத்துறைக்கு உத்தரவு

    அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு அமலாக்கத்துறை பதிலளிக்க, சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய மனு புதிய மனு மீதான விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு. 



  • Mar 28, 2024 13:25 IST
    விருதுநகர் தொகுதி - வேட்பு மனுக்கள் ஏற்பு

    விருதுநகர் மக்களவை தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் ராதிகா சரத்குமார், தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் வேட்பு மனுக்கள் ஏற்பு. 



  • Mar 28, 2024 12:46 IST
    டிடிவி தினகரனின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு

    தேனி தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு



  • Mar 28, 2024 12:45 IST
    ஆ.ராசா வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

    நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசா, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரது வேட்புமனுக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு



  • Mar 28, 2024 12:45 IST
    தமிழச்சி தங்கபாண்டியனின் வேட்புமனு ஏற்பு

    தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனின் வேட்புமனு ஏற்பு



  • Mar 28, 2024 12:44 IST
    தேர்தலின் போது பணத்துடன் பயணம்? நினைவில் கொள்ள வேண்டிய தேர்தல் கமிஷன் விதிகள் இதோ

    லோக்சபா தேர்தல் மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, நாடு முழுவதும் மாதிரி நடத்தை விதிகள் (MCC) அமலில் உள்ளன. வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த பயன்படுத்தக்கூடிய பணம், மதுபானம், நகைகள் மற்றும் பிற இலவசப் பொருட்களைக் கொண்டு செல்வது குறித்து சட்ட அமலாக்க அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.

    தேர்தலின் போது பணத்துடன் பயணம்? நினைவில் கொள்ள வேண்டிய தேர்தல் கமிஷன் விதிகள் இதோ



  • Mar 28, 2024 12:33 IST
    நெல்லை வேட்பு மனுவை வாபஸ் பெற்ற ராமசுப்பு

    நெல்லை மக்களவை தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவை வாபஸ் பெற்றார், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு

    எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்பு மனு தாக்கல் செய்தேன்

    காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக நான் செயல்பட மாட்டேன்

    - ராமசுப்பு நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை எதிர்த்து நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் இன்று வாபஸ்



  • Mar 28, 2024 12:32 IST
    வினோஜ் பி செல்வம் வேட்பு மனு ஏற்பு - திமுக எதிர்ப்பு

    மத்திய சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தின் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு

    வினோஜ் பி செல்வத்தின் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என குற்றச்சாட்டு

    மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தல் 



  • Mar 28, 2024 12:29 IST
    வேட்புமனுக்கள் ஏற்பு

    விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களான தேமுதிகவின் விஜய பிரபாகர், காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், நாதகவின் கெளசிக் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்பு



  • Mar 28, 2024 12:28 IST
    கனிமொழியின் வேட்புமனு ஏற்பு

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழியின் வேட்புமனு ஏற்பு



  • Mar 28, 2024 12:27 IST
    அண்ணாமலையின் வேட்புமனு ஏற்பு

    கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்பு



  • Mar 28, 2024 12:27 IST
    செந்தில் பாலாஜி மனு

    அமலாக்கத்துறை வழக்கில் இருந்து  விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு.

    அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!

    இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களைக் கேட்டு வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளது.

    வழக்கு விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்குத் தள்ளிவைப்பு



  • Mar 28, 2024 12:25 IST
    வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைப்பு

    வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வேட்புமனு  பரிசீலனை தற்காலிகமாக நிறுத்திவைப்பு



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment