Tamil News Live :தருமபுரிக்கு நேற்றிரவு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை கூடுதல் கட்டடத்தை இன்று காலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து ஒகேனக்கல்லில் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார். மாலை, 4:30 மணிக்கு வத்தல்மலைக்கு செல்லும் அவர், அங்கு பழங்குடியினருக்கு நலத்திட்டங்களை வழங்குகிறார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதையொட்டி, முன்னேற்பாடு பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஐபிஎல் போட்டிகள் குறித்து லைவ் அப்டேட் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்
இந்தியா கொரோனா நிலவரம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 311 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 28,718 பேர் தொற்றில் இருந்கு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு
நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.15 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 94.17 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ 99.36 ஆகவும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ 94.45 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மூன்று தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
மேற்கு வங்காளத்தில் மூன்று தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பவானிபூர் தொகுதியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வருகிற 3-ந்தேதி (ஞாயிறு) வாக்குகள் எண்ணப்படும். பவானிபூரில் மம்தா பார்னஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:14 (IST) 30 Sep 2021தமிழகத்தில் மேலும் 1,612 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு்ளளது. இதனால் இங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,63,789 ஆக உயர்ந்துள்ளது.
- 20:08 (IST) 30 Sep 2021அக்டோபர் 4-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக வகுப்புகள் தொடக்கம்
தமிழகத்தில் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நிறைவடைந்த நிலையில், வரும் அக்டோபர் 4-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவி்கப்பட்டுள்ளது.
- 18:24 (IST) 30 Sep 2021விவசாயத்தை காப்பாற்ற 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும் - சீமான்
விழுப்புரம் மாவட்டம் கோலியனுரில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விவசாயத்தை காப்பாற்ற 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- 18:23 (IST) 30 Sep 2021புதுச்சேரியில் ஊரடங்கு நீடிப்பு
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 15 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
- 18:21 (IST) 30 Sep 2021துரைமுருகன் கருத்துக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் பதில்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்த அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக தலைமை கண்டனம் "எம்ஜிஆர் எந்தக் காலத்திலும் யாருக்கும் துரோகம் செய்ததில்லை; துரோகம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை" என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூறியுள்ளனர்.
- 17:22 (IST) 30 Sep 2021தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை
மதுரை, நாகை, திருவண்ணாமலை, திருச்சி, அரியலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமாரி, சிவகங்கை, விழுப்புரம், ஈரோடு உட்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் திடீர் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவு என தகவல் வெளியாகி உள்ளது.
- 16:38 (IST) 30 Sep 2021505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம் - முதலமைச்சர் ஸ்டாலின்
தருமபுரிம் மாவட்டம், வத்தல்மலையில் மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சியவைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்று கூறினார்.
- 16:32 (IST) 30 Sep 2021வட மாநிலத்தவரை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கை முறியடிப்பு - சு. வெங்கடேசன் எம்.பி
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேக்கு பணியமர்த்தும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. கோரக்பூர் தேர்வாணையத்தில் இருந்து அனுப்பப்பட்ட பட்டியலை திருப்பி அனுப்பிய தெற்கு ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி.
- 15:54 (IST) 30 Sep 2021சுய உதவி குழுவினருடன் முதல்வர் கலந்துரையாடல்
கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம், முந்தைய ஆட்சியால் முடக்கி வைக்கப்பட்டிருந்தது என சுய உதவி குழுவினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- 15:52 (IST) 30 Sep 2021சுய உதவி குழுவினருடன் முதல்வர் கலந்துரையாடல்
கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம், முந்தைய ஆட்சியால் முடக்கி வைக்கப்பட்டிருந்தது என சுய உதவி குழுவினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- 15:46 (IST) 30 Sep 2021கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம்; மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சபாநாயகர் அப்பாவு
கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க அனுமதித்ததை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளார்.
- 15:46 (IST) 30 Sep 2021கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம்; மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சபாநாயகர் அப்பாவு
கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க அனுமதித்ததை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளார்.
- 15:06 (IST) 30 Sep 2021தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அதிகம் - பாலச்சந்திரன்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளது என்றும், தமிழக உள்மாவட்டங்களில் காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- 14:45 (IST) 30 Sep 2021புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் - நீதிமன்றம் எச்சரிக்கை
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும், என புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 14:44 (IST) 30 Sep 2021புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் - நீதிமன்றம் எச்சரிக்கை
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும், என புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 14:42 (IST) 30 Sep 2021காந்தி ஜெயந்தி; நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்றும், வரும் 19ஆம் தேதி மிலாதுநபி நாளன்றும் விடுமுறை என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- 14:07 (IST) 30 Sep 2021சிலைக்கடத்தல் வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
சிலைக்கடத்தல் வழக்குகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
- 14:05 (IST) 30 Sep 2021702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும்
கொரோனா தொற்று காரணமாக குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில், தமிழகத்தில் நாளைமுதல் அரசின் 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- 13:56 (IST) 30 Sep 2021702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும்
கொரோனா தொற்று காரணமாக குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில், தமிழகத்தில் நாளைமுதல் அரசின் 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- 13:40 (IST) 30 Sep 202117 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழையும், அக்டோபர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மிக கனமழையும் பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தி.மலை, செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
- 13:38 (IST) 30 Sep 2021உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பற்றி தமிழக அரசு பதில்தர ஆணை
உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தலை நடத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்உதாரணமாக இருக்கவேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
- 12:59 (IST) 30 Sep 2021கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் - ஒப்புதல்
கூடங்குளத்திலேயே 3-வது, 4ஆவது அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவுக்கு அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- 12:57 (IST) 30 Sep 2021கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஸ்டாலின் ஆய்வு
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் அளவை மேலும் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். மேலும், நீரேற்று நிலையத்தில் உள்ள புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
- 12:56 (IST) 30 Sep 2021உள்ளாட்சி தேர்தல் - மது விற்க தடை
உள்ளாட்சி தேர்தலின்போது 4, 9 மற்றும் 12-ம் தேதிகளில் 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மது விற்க தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
- 11:56 (IST) 30 Sep 2021உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதார துறை ஊழியர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு பணி
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
- 11:56 (IST) 30 Sep 2021கீழடி 7 ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு
கீழடியில் பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்த 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. அகழாய்வு குழிகள் மூடப்பட்டு, 10 நாள்களில் நிலத்தின் உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 11:45 (IST) 30 Sep 2021சென்னை விமான நிலையத்தில் பிடிஆரை அனுமதிக்க மறுத்த பாதுகாப்பு அதிகாரி
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இரண்டு லேப்டாப்கள் வைத்திருந்த காரணத்திற்காக விமான நிலைய அதிகாரிகள் அவரை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சிஐஎஸ்எப் அதிகாரிக்கும் பிடிஆருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், உயர் அதிகாரிகள் விரைந்து வந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பயணம் மேற்கொள்ள அனுமதித்தனர்.
- 11:44 (IST) 30 Sep 2021கமல்ஹாசனுடன் இணையும் வெற்றிமாறன்
நடிகை ஸ்ரீப்ரியாவிடம் பாபநாசம் 2 பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், கமலால் மட்டுமே பாபநாசம் 2 படத்தில் நடிக்க முடியும். ஆனால் அவருக்கு நேரமில்லை. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல், பிக் பாஸ் 5 என பிஸியாக இருக்கிறார். தவிர விக்ரம், வெற்றிமாறன் படம் என இரண்டு படங்களும் இருக்கின்றன என்றார். இதன் மூலம் வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிப்பது உறுதியாகியுள்ளது.
- 11:21 (IST) 30 Sep 2021சென்னை விமான நிலையத்தில் பிடிஆரை அனுமதிக்க மறுத்த பாதுகாப்பு அதிகாரி
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இரண்டு லேப்டாப்கள் வைத்திருந்த காரணத்திற்காக விமான நிலைய அதிகாரிகள் அவரை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், சிஐஎஸ்எப் அதிகாரிக்கும் பிடிஆருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், உயர் அதிகாரிகள் விரைந்து வந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பயணம் மேற்கொள்ள அனுமதித்தனர்.
- 11:13 (IST) 30 Sep 2021உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதார துறை ஊழியர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு பணி
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
- 10:29 (IST) 30 Sep 2021பள்ளிக்கு திடீர் விசிட் - மாணவிகளிடம் நலம் விசாரிப்பு
தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் புறப்பட்ட முதல்வர் மு.க ஸ்டாலின், பாதி வழியில் காரை நிறுத்தி, அங்கிருந்த பள்ளி ஒன்றில் மாணவிகளை சந்தித்து பேசினார்.
பள்ளி செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.