News Today: புதிய கல்வி கொள்கை- மாநிலங்களின் ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை. வரும் 7-ந்தேதி , காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்.
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தனிமைப்படுத்துதல் விதிகளை மீறி, வெளியே சுற்றுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசத்தை முறையாக அணியவில்லை எனில், 200 ரூபாயும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே, பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கவுள்ளது. சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். பொதுப்பேருந்து மற்றும் ரயில் சேவைகளை மக்கள் பயன்படுத்தும்போது நோய் தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.
Web Title: Tamil news today live teachers day corono updates indian railways ipl admk
கொரோனா பாதிப்பில் இந்தியா உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது
செப்டம்பர் 7ம் தேதி முதல் ஏ/சி வசதியுடன் உணவகங்கள் இயங்கலாம் என தமிழக அரசு தெரிவித்தது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி செமஸ்டர் தேர்வுகள் இம்மாதம் 21-ஆம் தேதியிலிருந்து நடைபெறும் என பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் அறிவித்துள்ளார்
அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ரயில்வேயில் பல்வேறு பதவிகளில் உள்ள 3 பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வுகள் டிசம்பர் 15 முதல் தொடங்கப்படும்.
இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 40 பெரும் இதில் அடங்குவர். கொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,748-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா: சென்னையில் இன்று மட்டும் 965 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, சென்னையின் மொத்த பாதிப்பு 1,40,685 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில், தற்போது 11,412 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது
செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என்று தகவல் தவறானது என்று தெற்கு ரயில்வே தெளிவிபடுத்தியுள்ளது. முன்னதாக, அன்றைய நாளில் இருந்து சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன.
தமிழகத்தில் வரும் 14-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பரவும் செய்தி தவறானது என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியது.
கொரோனா பரிசோதனைச் செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தி இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளின் மூலம், மாநில முகமைகளுக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டு, அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக ஒரு நாளைக்கு 11.70 லட்சம் பரிசோதனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடெங்கிலும் தற்போது 1647 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது வரை நாடு முழுவதும் 4 கோடியே 77 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளை சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றம் கூடும் முன்பே புது கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல்! PMOIndia இதனைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் இருந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு புறப்பட்டார்.
சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு குறித்து திருநங்கைகள் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். நாடித்துடிப்பு, வெப்ப நிலை ஆகியவற்றை சோதிக்கும் அவர்கள் மக்களுக்கு கொரோனா குறித்த சந்தேகங்களையும் விளக்குகின்றனர்.
கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருகின்ற 8ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட உள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகள் 19ம் தேதி துபாயில் துவங்க உள்ளது. கொரோனா நோய் தொற்றின் காரணமாக மிகவும் தாமதமாக இவ்விளையாட்டுகள் துவங்க உள்ள நிலையில் ஐ.பி.எல். தொடருக்கான அட்டவணை நாளை வெளியாக உள்ளது
திரையரங்குகள் திறப்பது குறித்து நாளை மறுநாள் திரைத்துறையினர் முதல்வரை சந்திக்கும் போது முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.
சென்னை கோட்டம் ரயில்வே எஸ்.பி.யாக தரும்புரி மாவட்ட எஸ்.பி. பி.ராஜன் மாற்றம். தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யாக பிரவேஷ் குமார் நியமனம். காத்திருப்போர் பிரிவில் இருந்த வருண் குமார் சென்னையிலுள்ள காவல் நவீனமய கணினி பிரிவு கண்காணிப்பாளராக நியமனம். சென்னையில் உரிமைப் பிரிவு துணை அதிகாரிய இருந்த திருநாவுக்கரசு சட்டம் ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக நியமனம். தலைமையிட துணை ஆணையராக இருந்த விமலா, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யபட்டுள்ளார்.
சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில்களில் கட்டண மாற்றங்கள் ஏதும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் உள்நுழையும் போது உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகு தான் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியக் கூறு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடை மற்றும் ஹோட்டல்களுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன், இணையச்செயலாளர் பி.டேனியல் தங்கராஜ், மதுரை மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர், இ-பாஸ் ரத்துக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தில் மெட்ரோ ரயில் கட்டணங்களில் மாற்றங்கள் இருக்காது .எனவும் பயணிகள் உள்நுழையும் போது உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்திய பின்னரே அனுமதி என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளனார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 888 ரூபாயாக உள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 39 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி 69 ஆயிரத்து 300 ரூபாயாக உள்ளது.
தியாகத்தின் திருவுருவான வ.உ.சிதம்பரனாரின் நினைவை நெஞ்சில் ஏந்தி போற்றுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிமைக்காகப் போராடவும் வாதாடவும் சிறை செல்லவும் தயங்காத தியாகத்தின் திருவுருவம் வ.உ.சி என்று கூறியுள்ளார்.
மருத்துவர்களின் பரிந்துரை இன்றி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பரிசோதனை செய்ய விரும்பும் நபர்களும் பயணம் செய்பவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும்.
கமல்ஹாசன் ஆசிரியர் தின வாழ்த்து..!
ரஜினி வாழ்த்தியதால் எங்களுக்கு எந்த வரமும் இல்லை; செலவும் இல்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்
எல்லைப்பகுதிகளில் சீன ராணுவத்தினரின் செயல்பாடு இருநாட்டு ஒப்பந்தங்களை மீறுவதாக உள்ளது. எல்லைப் பிரச்சனைகளில் மிகவும் பொறுப்பான அணுகுமுறையையே மேற்கொண்டுள்ளது நம் நாடு என்று ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் சீன பாதுகாப்புத்துறை அமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்ட ராஜ்நாத் சிங் கருத்து
திருச்சி மாவட்டத்திலும் பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தில் முறைகேடு நடந்தது அம்பலம் . வெளிமாவட்டத்தினர், விவசாயிகள் அல்லாதோர் திட்டத்தில் பயன்பெற்றது விசாரணையில் கண்டுபிடிப்பு.
திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஆலோசனை . திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினருடன் 8ஆம் தேதி கலந்தாலோசனை.
அந்தந்த மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பாஸை பெற்றுக்கொள்ளலாம். சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் வழங்கும் இலவச பயண அட்டை பற்றி மேலாண் இயக்குநர் கணேசன்