scorecardresearch

News Highlights: 2-வது நாளாக பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்; பொதுமக்கள் பாதிப்பு

Tamil News Today : வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு அறிகுறி இருந்தால், கொரோனா பரிசோதனை கட்டாயம்

New board for SETC bus to Coimbatore and Madurai from Velachery and T.nagar.

Tamil News Today Live : தமிழகம் முழுவதும் 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கூறின.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கம்யூ. கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுல்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியீடு. கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க அறிவுறுத்தல்

போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தொமுச, சிஐடியு உள்ளிட்ட ஒன்பது சங்கங்கள் இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகிறது, நீண்ட நேரக் காத்திருப்பால் பொதுமக்கள் அவதி.

சென்னையில் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல்.

பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு.

பிப்ரவரியில் 3ஆம் முறையாக ரூ.25 விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.785லிருந்து ரூ.810ஆக அதிகரிப்பு.

Live Blog

Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.


23:44 (IST)25 Feb 2021

திமுகவின் வெற்றியை தடுக்க சூழ்ச்சி – ஸ்டாலின்

திமுகவின் வெற்றியை தடுக்க சூழ்ச்சி நடக்கிறது. திமுக வெற்றியை எதிர்ப்பது அதிமுக மட்டுமல்ல, பாஜகவும்தான் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

23:43 (IST)25 Feb 2021

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக குடியரசுத்தலைவர் அறிவிப்பு. புதுச்சேரியில் அரசு கலைக்கப்படுவதாகவும், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் என அரசிதழில் வெளியீடு

23:41 (IST)25 Feb 2021

மார்ச் 7ம் தேதி திமுக பொதுக்குழு

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7ம் தேதி கூகாலை 10 மணிக்கு கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் டுகிறது திமுக பொதுக்குழு. நடைபெறுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு  விடுத்துள்ளார்.

23:40 (IST)25 Feb 2021

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளை சந்தித்த மோடி

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

20:20 (IST)25 Feb 2021

இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

18:59 (IST)25 Feb 2021

சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை வெடி விபத்து

சிவகாசி அருகே காளையார் குறிச்சியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  6 பேர் படுகாயமடைந்துள்ளனர். பட்டாசுகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

18:55 (IST)25 Feb 2021

திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து பிரதமர் மோடி விமர்சனம்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, திமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது என கடுமமையாக விமர்சித்துள்ளார். மேலும் ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா என தெரிவித்துள்ளார்.

18:22 (IST)25 Feb 2021

வெற்றி வேல்… வீர வேல்… – பிரதமர் மோடி பரப்புரை

தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கோவையில், வெற்றி வேல்… வீர வேல்… என கூறி பரப்புரையை தொடங்கினார்

18:11 (IST)25 Feb 2021

திமுக சார்பில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு

திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

17:31 (IST)25 Feb 2021

இந்திய தொழில் வளர்ச்சிக்கு தமிழகத்தின் பங்கு அளப்பரியது – பிரதமர் மோடி

கோவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “இந்திய தொழில் வளர்ச்சிக்கு தமிழகத்தின் பங்கு அளப்பரியது. அனல் மின் நிலையங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி. மிகப்பெரிய திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளோம். இந்த திட்டங்கள் தமிழகத்திற்கு நன்மை பயக்கும்” என்று கூறினார்.

17:18 (IST)25 Feb 2021

ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகளைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி

ரூ.107 கோடி செலவில் 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டி கட்டுப்பாடு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்ட குடியிருப்புகளைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

17:15 (IST)25 Feb 2021

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சாலை பாலம் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழிச்சாலை கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலம் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

17:13 (IST)25 Feb 2021

கீழ் பவானி திட்டம் விரிவுபடுத்துதலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

17:11 (IST)25 Feb 2021

நெய்வேலியில் ரூ.8,000 கோடி செலவில் புதிய அனல்மின் திட்டத்தை அர்ப்பணித்தா பிரதமர் மோடி

நெய்வேலியில் ரூ.8,000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

17:07 (IST)25 Feb 2021

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு

ரூ.14,000 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் லண்டனில் உள்ள தொழிலதிபர் நீரவ் மோடியை நாடு கடுத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17:06 (IST)25 Feb 2021

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; மீட்புபணி தீவிரம்

சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

16:57 (IST)25 Feb 2021

கோவையில் திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேச்சு

கோவையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி 
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

16:47 (IST)25 Feb 2021

தமிழக மக்கள் மீது தனி அன்புகொண்ட தனிப்பெரும் தலைவர் மோடி – ஓ.பி.எஸ் வரவேற்பு

கோவையில் பிரதமர் மோடியை வரவேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “தமிழகத்தின் மீதும் தமிழக மக்கள் மீதும் தனி அன்புகொண்ட தனிப்பெரும் தலைவர் பிரதமர் மோடியை தமிழக மக்கள் சார்பில் வரவேற்கிறோம்” என்று வாழ்த்தி வரவேற்றார்.

16:22 (IST)25 Feb 2021

கோவையில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

கோவையில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு; முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோரும் பங்கேற்கிறார்கள். அரசு விழாவுக்கு பிறகு கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். 

16:02 (IST)25 Feb 2021

கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றுள்ளனர்

15:29 (IST)25 Feb 2021

உலகிலேயே இணைய சேவை வேகத்தின் தரவரிசையில் இந்தியாவுக்கு 131வது இடம்!

உலகிலேயே இணைய சேவை வேகத்தில் இந்தியா (12.41 Mbps) 131 வது இடத்தில் உள்ளது. 181.03 Mbps வேகத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது. 

15:23 (IST)25 Feb 2021

ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை சான்று அவசியம் – மத்திய அரசு

13+, 16+, A என திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்களை சுயமாக குறிப்பிட்ட வேண்டும் என்று ஓடிடி தளங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

14:55 (IST)25 Feb 2021

மத்திய அரசின் சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகள்

புகார்களை கையாள்வதற்காக ஒவ்வொரு சமூகவலைதள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் புகாரளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளம் நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

14:53 (IST)25 Feb 2021

இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு, அதிமுக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு, வருகிற மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

14:50 (IST)25 Feb 2021

மின்சார ரயில் நிலையங்களில் குவிந்த மக்கள்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து மின்சார ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்துள்ளனர்.

13:58 (IST)25 Feb 2021

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ள காரணமாக கோவை, நீலகிரி, தேனீ, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லெஸ்ஸான் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

13:54 (IST)25 Feb 2021

அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் – தொழிற்சங்க கூட்டமைப்பினர்

சென்னையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியுவின் சவுந்திரராஜன், “கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததால் வேலைநிறுத்தம் தொடரும். அரசு அறிவித்த 1000 ரூபாய் இடைக்கால நிவாரணம் ஏற்க கூடியதாக இல்லை” என கூறினார்.

13:29 (IST)25 Feb 2021

காங்கிரஸ் ஆட்சியிலிருந்து புதுச்சேரி மக்களுக்கு விடுதலை – பிரதமர் மோடி

புதுச்சேரியில் உரையாற்றிய மோடி, முந்தைய காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீர்குலைத்தது என்றும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து புதுச்சேரி மக்களுக்கு விடுதலை என்றும் தெரிவித்தார். அடுத்து அமையப் போகும் அரசு மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், வணிகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா ஆகியவற்றின் மையம் புதுச்சேரி என்று குறிப்பிட்ட அவர் புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே தனது முதல் தேர்தல் வாக்குறுதி என கூறினார். 

12:43 (IST)25 Feb 2021

புதுச்சேரி மக்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் – பிரதமர் மோடி

விழுப்புரம்-நாகை இடையே 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிறகு, காரைக்காலில் ரூ.491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருக்கிறது என்றும் புதுச்சேரி மக்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்றும் புகழாரம் சூடினார்.

11:36 (IST)25 Feb 2021

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் – முதல்வர் அறிவிப்பு

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

11:00 (IST)25 Feb 2021

இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்!

சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கியது இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார். 

10:59 (IST)25 Feb 2021

துணை ராணுவப் படை வருகை!

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படை  4,500 பேர் சென்னை வந்தடைந்தனர். 

10:57 (IST)25 Feb 2021

தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை !

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது . பொது செயலாளர் துரைமுருகன் , எம்பி கனிமொழி  மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, உம்மன் சாண்டி  ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர். 

10:12 (IST)25 Feb 2021

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தக்கலை ஷேக் பீர் முகமது சாஹிப் ஒலியுல்லாஹ் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப்ரவரி 26ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. 

10:10 (IST)25 Feb 2021

ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கடிதம்!

திமுக -காங்கிரஸ் இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகள் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. 

Tamil News : | இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு சுருண்டது

நேற்றைய செய்திகள்

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil news today live tha pandiyan health condition bus strike vk sasikala modi tamilnadu news tamil