News Highlights: 7பேர் விடுதலை; ஆளுநர் முடிவுக்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு

Today Live : அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கம்

Tamil News Highlights : 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே முடிவு எடுக்கும் அதிகாரம் இருப்பதாக தமிழக ஆளுனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தடுப்பூசிகளை வழங்கும் பணியில் இந்தியா தொடர்ந்து மிக வேகமாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 745 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக வீரர்கள் அறிவிப்பு . விஜய் ஹசாரே போட்டியில் நடராஜன் தமிழக அணிக்காக விளையாடுகிறார்.

திருவாரூர் – காரைக்குடி இடையே ரயில் சேவையை அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பியிருந்த கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாளான இன்று, ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் நடைபெறும்.

சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவவரும் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பால் நடவடிக்கை. இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்த உத்தரவு

Live Blog

Tamil News Live : தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil


23:09 (IST)04 Feb 2021

எது நாடகம் – மு.க.ஸ்டாலின் கேள்வி

அமைச்சரவை தீர்மானத்தை ஆதரித்து, ஆளுநரை வலியுறுத்தி-அவர் கிடப்பில் போட்டதைக் கண்டித்து, உரையையும் புறக்கணித்தது திமுக! எல்லாவற்றிலும் திமுக வெளிப்படை! ஆனால் ஆளுநரை எதற்கோ சந்தித்து விட்டு வந்து 7 பேர் விடுதலை பற்றிப் பேசினேன் என்கிறார் முதல்வர் இதில் எது நாடகம் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

23:02 (IST)04 Feb 2021

வேல்முருகன் கண்டனம்

ஏழுபேர் விடுதலையில் ஆளுநரின் நயவஞ்சகமான கருத்துகள் கண்டனத்துக்குரியது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம்தெரிவித்துள்ளார்.

22:26 (IST)04 Feb 2021

திருமாவளவன், எம்.பி. 

7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றியுள்ளனர் என திருமாவளவன், எம்.பி.  தெரிவித்துள்ளார்.

21:43 (IST)04 Feb 2021

வைகைச்செல்வன் பேட்டி

7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இல்லை; சட்டத்துறையுடன் கலந்தாலோசித்து தமிழக அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் – வைகைச்செல்வன் 

20:36 (IST)04 Feb 2021

பேரறிவாளனின் கருணை மனு

பேரறிவாளனின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகவல் தெரிவித்துள்ளார்.

20:08 (IST)04 Feb 2021

எழுவர் விடுதலையில் திமுக நாடகம் போடுகிறது: முதல்வர் பழனிசாமி சாடல் 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலையில் திமுக நாடகம் போடுகிறது: முதல்வர் பழனிசாமி சாடல் 

20:06 (IST)04 Feb 2021

ஸ்டாலின் பேட்டி

நமது பிரசார கூட்டத்தில் வைக்கப்படும் கோரிக்கையை அரசு உடனுக்குடன் நிறைவேற்றுகிறது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

20:05 (IST)04 Feb 2021

ச‌சிகலா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது

12.9.2017 அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என ச‌சிகலா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என ச‌சிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

20:04 (IST)04 Feb 2021

இந்தியாவை அவமதிக்க செய்த சதி – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

வெளிநாட்டு பிரபலங்கள் பகிர்ந்த சர்ச்சை இணையதள முகவரி, இந்தியாவை அவமதிக்க செய்த சதி என்பது தெளிவாகிறது என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

18:09 (IST)04 Feb 2021

விவசாயிகள் பிரச்சினை குறித்தும் பேசினோம் – விராட்கோலி

இந்திய அணியின் ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினை குறித்தும் பேசினோம் என தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் விராட்கோலி, நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் கருத்து தெரிவித்துள்ளோம்  என தெரிவித்துள்ளார்.

18:08 (IST)04 Feb 2021

முதல் டெஸ்ட் போட்டிக்கு ரிஷப் பண்ட் களமிறங்குவதாக தகவல்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குகிறார் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

18:07 (IST)04 Feb 2021

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

7 பேர் விடுதலை விவகாரத்தில்,”ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

18:07 (IST)04 Feb 2021

எம்பி சு.வெங்கடேசன் கேள்வி

சொந்த நாட்டு விவசாயிகளை முள்வேலி அமைத்து தடுப்பது மனித உரிமையா?  என்று எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

18:06 (IST)04 Feb 2021

ஸ்டாலின் பேட்டி

7 பேர் விடுதலையை வைத்து திமுக அரசியல் செய்வதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் அதிமுக எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் நாங்கள் பேசுகிறோம் என்று ஸ்டாலின் தெரிவித்துளளார்.

18:05 (IST)04 Feb 2021

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு – கிரேட்டா தன்பெர்க்

டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன்; அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கிரேட்டா தன்பெர்க் உறுதியளித்துள்ளார்.

17:58 (IST)04 Feb 2021

திமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது புகார்

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அதிமுக மூத்த நிர்வாகிகள் புகார் டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

17:04 (IST)04 Feb 2021

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காசிப்பூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்

ஷிரோமணி அகாலிதள எம்.பி. சுக்பீர் சிங் பாதல்  தலைமையில் 10 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.பி.க்கள் குழு காசிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற போது டெல்லி  காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

16:34 (IST)04 Feb 2021

சிறுமி கிரேட்டா தன்பர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு

தேசிய தலைநகர் டெல்லி எல்லையில் 2 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.   

15:55 (IST)04 Feb 2021

38  வழக்குகளைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்- கே.எஸ் அழகிரி

உயர்மின் கோபுரங்கள் பிரச்சினையில்  மின்துறை அமைச்சர் தங்கமணி அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  அறவழியில் போராடிய பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 38  வழக்குகளைத் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ் அழகிரி தெரிவித்தார்.  

15:04 (IST)04 Feb 2021

பகைவர்களை அணுகுவதுபோல விவசாயிகளை அணுகுவது கண்டனத்துக்குரியது – திருமாவளவன்

அந்நியநாட்டு எல்லையொரத்தில் குவிக்கப்படுவதுபோல  தில்லி எல்லையில் துணைஇராணுவத்தினர் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். 
மோடி அரசு மிகமோசமான முறையில் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கிவருகிறது பகைவர்களை அணுகுவதுபோல விவசாயக் குடிமக்களை அணுகுவது கண்டனத்துக்குரியது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.   

14:54 (IST)04 Feb 2021

புரட்சித்தலைவி ஜெயலலிதா படப்பிடிப்பு தளம்

செங்கல்பட்டு-பையனூரில் MGR நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் “புரட்சித்தலைவி ஜெயலலிதா” படப்பிடிப்பு தளம் அமைக்க தமிழக அரசின் சார்பில் ரூ.3.50 கோடிக்கான காசோலையினை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணியிடம் முதல்வர் வழங்கினார்.  

14:28 (IST)04 Feb 2021

44,49,552 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது 

நாடு முழுவதும் கோவிட்-19 க்கான தடுப்பு மருந்து இதுவரை 44,49,552 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது 

14:27 (IST)04 Feb 2021

உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 28 கோடியே 90 லட்சம்

நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கை 28 கோடியே 90 லட்சமாக அதிகரித்துள்ளது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், நாடு முழுவதும் 70 லட்சத்து 75 ஆயிரம்  நுகர்வோர் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். 

14:22 (IST)04 Feb 2021

சவுரி சவுரா சம்பவத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சி

கோரக்பூரில் சவுரி சவுரா சம்பவத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சியை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

13:54 (IST)04 Feb 2021

8-ம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா !

சசிகலா வரும் 8-ம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா 7-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், சசிகலாவின் வருகை 8ம் தேதிக்கு மாற்றம் என தகவல். 

13:26 (IST)04 Feb 2021

முதல்வர் பழனிசாமி விளக்கம்!

2018 ஆம் ஆண்டு 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விஷயத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை திமுக பரப்பி வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

13:22 (IST)04 Feb 2021

தமிழக அரசு பதிலளிக்க  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது .வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

எத்தனை தலைவர்களுக்குதான் நினைவிடங்களை உருவாக்கிக்கொண்டிருக்க போகிறீர்கள்? எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

12:40 (IST)04 Feb 2021

கொரோனா தடுப்பூசி போட அனுமதி!

முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி கோரப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல். 

12:39 (IST)04 Feb 2021

பேரறிவாளன் விடுதலை வழக்கு!

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 9ஆம் தேதி விசாரணை .  கெடு முடிந்தும் ஆளுநர் முடிவெடுக்காத சூழலில், விசாரணை பட்டியலில் வழக்கு . தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது 21ஆம் தேதிக்குள்ஆளுநர் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

12:28 (IST)04 Feb 2021

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் துணை முதல்வர்!

11:30 (IST)04 Feb 2021

தேர்தல் பணி குழு!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு வரும் 10ம் தேதி தமிழகம் வரவுள்ளது. 

11:29 (IST)04 Feb 2021

கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து!

உத்திரமேரூர் அடுத்த மதூர் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக தகவல் .ஜேசிபி இயந்திரம் மூலம் கற்களை உடைத்த போது விபத்து 

11:14 (IST)04 Feb 2021

அமைச்சர் காமராஜ் குணமடைந்தார்!

கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் குணமடைந்து வீடு திரும்பினார்

11:14 (IST)04 Feb 2021

எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தம்!

காசிப்பூர் எல்லையில் விவசாயிகளை சந்திக்கச் சென்ற எதிர்கட்சி எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தம் .எல்லைப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், எம்.பி.க்களால் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை. 

10:42 (IST)04 Feb 2021

டாப்ஸி ட்வீட்!

“ஒரு ட்வீட் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

10:03 (IST)04 Feb 2021

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு!

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

09:47 (IST)04 Feb 2021

மாநிலங்களவை கூட்டத்தொடர் !

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 5வது நாளான இன்று மாநிலங்களவை தொடங்கியது .குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மாநிலங்களவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது . 

09:38 (IST)04 Feb 2021

இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீர்: ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

Today Live : லவ் ஜிகாத் தடுப்பு சட்டங்களுக்கு எதிராக மனு – விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நேற்றைய செய்திகள்

அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கம் .கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம். கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கம் – அதிமுக தலைமை

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live tn assembly farmers protest sasikala jayalalitha memorial sachin tweet

Next Story
ராஜீவ் காந்திக்கு திமுகவில் புதிய பதவி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express