Tamil Nadu - Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
IND VS AUS Final: மகுடம் வெல்லப் போவது யார்?
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்
வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக அறிக்கை!
இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு யாகம்
உத்தரப் பிரதேசம்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி, வாரணாசியில் சிறப்பு யாகம் செய்த ரசிகர்கள்!
கார்த்திகை தீபம் - டாஸ்மாக் கடைக்கு விடுமுறை
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் திருவண்ணாமலை மற்றும் வேங்கிக்கால் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்!
ஆர்.பி.ஐ முன்னாள் கவர்னர் மறைவு; ஸ்டாலின் இரங்கல்
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் எஸ்.வெங்கிடரமணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
700 லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை; தனி நீதிபதி உத்தரவு ரத்து
10 சக்கரத்திற்கு மேற்பட்ட 700 லாரிகளில் தினமும் கனிமங்கள் கொண்டு செல்லலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி விதித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் கனிமங்கள் கொண்டு செல்வதால் சுற்றுச்சூழல் மட்டுமின்றி சாலைகளும் பாதிக்கிறது என அரசு தரப்பு தெரிவித்ததையடுத்து, தனி நீதிபதி விதித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீடு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை - நீதிமன்றம் பாராட்டு
பிற மாநிலங்களின் மருத்துவக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க தமிழக அரசு பாராட்டத்தக்க நடவடிக்கை எடுக்கிறது, கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை தமிழகத்தில் கொட்டுபவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும். என தென்காசி, ஆலங்குளம் எஸ்.ஐ. சார்பில் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைப்பு
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
நவ.22ல் காணொளி வாயிலாக ஜி20 மாநாடு
இந்தியாவின் சார்பில் நவம்பர் 22 ஆம் தேதி ஜி20 நாடுகளின் மாநாடு காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
திருமணமான மகன் சொத்தில் தாய்க்கு உரிமை இல்லை; சென்னை ஐகோர்ட்
இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா நடைபெற்று வருகிறது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளில் ஏராளமான போலீசாரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பல இடங்களில் பெரிய LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் எம்.எல்.ரவி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் மனுதாக்கல் செய்துள்ளார்.
திருவாரூரில் வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு வரும் நவ.24ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்தார்.
ஜெயலலிதா மீன்வள பல்கலை. - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
"2020 ஜன.9ம் தேதி மீன்வள பல்கலை கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது. இது தொடர்பான மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஓராண்டு காலம் இந்த மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.
2023 ஏப்.1ல் பல்கலை துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதா நிறைவேற்றம். ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட மசோதாக்களில் மீன்வள பல்கலைக் கழக மசோதாவும் ஒன்று.
"ஜெயலலிதா மீன்வள பல்கலை. தொடர்பான மசோதா இன்று மீண்டும் நிறைவேற்றம். அ.தி.மு.க-வினர் புரிந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளனர்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம். மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு வைக்கப்பட்ட ஜெயலலிதா பெயர் மாற்றப்பட்டதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம். சட்டமுன்வடிவுகள் பிரிவு வாரியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது - சபாநாயகர்
தீர்ப்பு வருவதற்கு முன் ஏன் சிறப்புக் கூட்டம்? - இ.பி.எஸ்
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பு ஏன் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும். ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பு சிறப்புக் கூட்டம் கூட்டுவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
ஆளுநர் பதவி விலக வேண்டும்
சட்டமுன்வடிகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பிய ஆளுநர் பதவி விலக வேண்டும்- சதன் திருமலைகுமார்.
ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்
ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஆளுநர் குழந்தைத்தனமாக பேசி வருகிறார். அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டு செயல்படும் ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.
முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன் பேச்சு
பேரவையில் இருந்து பா.ஜ.க வெளிநடப்பு
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் இருந்து பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு. பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதாக்கள் மீதான விவாதத்தில் ஆளுநருக்கு எதிரான எம்.எல்.ஏக்கள் பேச்சை கண்டித்து பா.ஜ.க வெளிநடப்பு
ஆளுநர் வகுப்பெடுக்கிறார், விதண்டாவாதம் பேசுகிறார்: ஸ்டாலின்
ஆளுநர் யாரையாவது அழைத்து வகுப்பெடுக்கிறார் அல்லது விழாக்களுக்கு சென்று விதண்டாவாதம் பேசுகிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. மசோதாக்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசிடம் ஆளுநர் விளக்கம் கோரலாம். மசோதா தொடர்பாக ஆளுநர் கோரிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்காமல் இருந்தது இல்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்பு
தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வரவேற்கிறேன். ஆளுநருக்கு கடுமையான கண்டனத்தை பதவு செய்கிறேன். பொறுப்புக்கு வந்ததில் இருந்து அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்- பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு
சபாநாயகர் அப்பாவு உரை
ஒரு புள்ளி கூட மாறாமல் இந்த சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது - பேரவையில் சபாநாயகர் அப்பாவு
ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி
ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சட்டமன்றத்திற்கு எதிரானதாகவும், இறையாண்மைக்கு எதிராகவும் உள்ளது. ஒன்றிய அரசுக்கு அவருக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தமிழ்நாடு அரசுக்கு நிதியை பெற்று தரலாம்
ஆளுநர் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படலாம். ஆனால், மாநில அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்- பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார்.
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் அவசர அவசரமாக இந்த சட்ட மசோதாக்களுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் உரை
இந்தியாவில் மக்களாட்சி மாண்பை உயர்த்தும் சட்டமன்றமாக உருவாகியது நம் சட்டப்பேரவை.
ஜனநாயக மாண்புகளை காப்பது மற்றும் சமூக நல திட்டங்களை கொண்டு வருவதில் இந்திய ஒன்றியத்திற்கு எடுத்துக்காட்டாக நம் சட்டப்பேரவை உள்ளது- பேரவையில் மு.க.ஸ்டாலின் உரை
இரங்கல் தீர்மானம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவு;
விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா மறைவிற்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது
#Live: சட்டமன்ற உரைhttps://t.co/cBTVotk9xf
— M.K.Stalin (@mkstalin) November 18, 2023
காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை விஜய சாந்தி
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்த நடிகை விஜய சாந்தி, தெலங்கானா மாநில பரப்புரைக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்
செந்தில் பாலாஜிக்கு 2 ஆவது நாளாக எம்ஆர்ஐ பரிசோதனை
செந்தில் பாலாஜிக்கு 2 ஆவது நாளாக எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
நேற்று நடந்த பரிசோதனையில் பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2வது பரிசோதனையிலும் பிரச்சினைகள் கண்டறியப்படும் பட்சத்தில் சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படும்- மருத்துவ குழு
போதைப் பொருள் புழக்கத்திற்கு உடந்தையாக இருந்த போலீசார்
சென்னையில் கஞ்சா, குட்கா போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்ட்ரல் – அரக்கோணம் இடையே 103 புறநகர் ரயில்கள் ரத்து
அம்பத்தூர், பட்டாபிராம் பகுதியில் பரமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே இயக்கப்படும் 103 புறநகர் ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது.
முழு செய்தியும் படிக்க: இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை 103 புறநகர் ரயில்கள் ரத்து
செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு நிறுத்தி வைப்பு
அண்ணா பல்கலை. உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு
பழைய தேர்வு கட்டணத்தையே வசூலிக்கவும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி தர உத்தரவு
தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. இதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.
விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து
செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வங்கதேசம் அருகே கரையை கடந்தது ‘மிதிலி’ புயல்
வடமேற்கு வங்கக் கடலில் உருவான மிதிலி புயல் இன்று அதிகாலை வங்க தேசம் அருகே கரையைக் கடந்தது.
மேலும் மிதிலி புயல் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா- வங்கதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.