/tamil-ie/media/media_files/uploads/2023/07/fe-delhi-rain6.jpg)
Tamil News
சென்னையின் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், கிண்டி, சைதை, அசோக்நகர், மத்திய கைலாஷ், அடையாறு, திருவான்மியூரில் இரவு முதல் இடி, மின்னலுடன் மழை தொடர்கிறது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம்
நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம் விதிப்பு சிக்னலை மதிக்காமல் விஜய் கார் சென்றதால், போக்குவரத்து காவல்துறை அபராதம் இன்று 234 தொகுதி பொறுப்பாளர்களையும் சந்திக்க சென்றபோது போக்குவரத்து விதிமீறல்.
ஏரிகளின் நிலவரம்
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,272 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 132 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 386 மில்லியன் கனஅடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 23:32 (IST) 12 Jul 2023சென்னை திரும்பினார் ஆளுநர்
டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார்..
- 23:31 (IST) 12 Jul 2023டிஎன்பிஎல் - கோப்பையை வென்றது கோவை அணி
டிஎன்பிஎல் - கோப்பையை வென்றது கோவை அணி டிஎன்பிஎல்-நெல்லை அணியுடனான இறுதிப்போட்டியில் கோவை அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
- 23:29 (IST) 12 Jul 2023தக்காளியைப் பரிசாக வழங்கிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்
கோவையில் கணேஷ்குமார் - ஹேமலதா தம்பதிக்கு நடைபெற்ற திருமணத்தில், தக்காளியைப் பரிசாக வழங்கிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்! தக்காளி விலை உயர்வால், விவசாயிகளுக்கு நல்ல லாபத்துடன் பலனைக் கொடுத்ததைப் போல, புதுமண தம்பதிகள் வாழ்க்கையில் உயர்ந்து, நல்ல பலன்களை அடைய வேண்டுமென விவசாயச் சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் மணமக்களை வாழ்த்தினர்.
- 20:46 (IST) 12 Jul 2023சென்னை தாம்பரம் - ஜார்காண்ட் மாநிலம் தான்பாத் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்
சென்னை தாம்பரம் - ஜார்காண்ட் மாநிலம் தான்பாத் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம். வரும் 14ம் தேதி இரவு 10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 17ம் தேதி காலை தான்பாத்தை சென்றடையும். மறுமார்க்கமாக 18ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு 20ம் தேதி தாம்பரம் வந்தடையும்
- 19:47 (IST) 12 Jul 2023கோவை காந்திபுரத்தில் பிரபல வணிக நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
கோவை காந்திபுரத்தில் பிரபல வணிக நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் அலறி அடித்து வெளியேறினர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பாதுகாப்பு அதிகாரி விளக்கம் அளித்துள்ளனர்.
- 19:46 (IST) 12 Jul 2023நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் இருவர் கைது
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் நெல்லைகிளை இயக்குநர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
- 19:44 (IST) 12 Jul 2023லால் சலாம்' படப்பிடிப்பை முடித்த மொய்தீன் பாய்
லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து படக்குழவினர் கேக் வெட்டி கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
- 19:43 (IST) 12 Jul 2023விஜய்சேதுபதியின் 50வது படத்தின் போஸ்டர் வெளியானது
விஜய்சேதுபதியின் நடிக்கும் 50வது படத்திற்கு மகாராஜா என பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது
- 18:37 (IST) 12 Jul 202322 மாநிலங்களுக்கு ரூ.7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி விடுவிப்பு - மத்திய அரசு
22 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.7,532 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழ்நட்டிற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 450 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.1,420 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
- 18:35 (IST) 12 Jul 2023லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு
லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, படக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
- 18:15 (IST) 12 Jul 2023மே.வ பஞ்சாயத்துத் தேர்தல்; வன்முறையில் இறந்த 19 பேர் குடும்பத்துக்கு 2 லட்சம் இழப்பீடு - மம்தா பானர்ஜி
மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ. 2 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.
- 18:09 (IST) 12 Jul 2023மீனவர்களின் படகு, வலைகள் சேதம் - ஐகோர்ட் வேதனை
கச்சத்தீவை மீட்கக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மீனவர்களின் விலைமதிப்பற்ற படகுகள், வலைகள் இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது; உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில், இந்திய மீனவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
- 18:06 (IST) 12 Jul 2023எதற்கு ரூ.1,000 நோட்டு செல்லாது அறிவித்தார்கள்? பா.ஜ.க-வினருக்கு உதயநிதி கேள்வி
“ரூ.15 லட்சமும் தரவில்லை, கருப்புப் பணத்தையும் மீட்கவில்லை பின்பு எதற்கு ரூ.1,000 நோட்டு செல்லாது அறிவித்தார்கள்? 9 ஆண்டுகளாக ஆட்சியில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்..?” என பா.ஜ.க-வினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
- 17:38 (IST) 12 Jul 2023மாவீரன் படத்தில் ஐ.ஜே.கே. கொடியை காட்டக்கூடாது - ஐகோர்ட் உத்தரவு
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில், மாவீரன் படக் காட்சிகளை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாவீரன் படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என்ற பொறுப்பு துறப்பு திரையரங்குகளில் வெளியிட வேண்டும். கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே, ஓ.டி.டி. மற்றும் சேட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும் என ஐ.ஜே.கே பொதுச் செயலாளர் பி. ஜெயசீலன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 17:32 (IST) 12 Jul 2023இ.பி.எஸ் மீதான தேர்தல் குற்றச்சாட்டு வழக்கை விசாரிக்க தடை - ஐகோர்ட் உத்தரவு
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இ.பி.எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம். சேலம் மாநகர குற்றப்பிரிவுக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- 17:30 (IST) 12 Jul 2023ஊழல் செய்த அரசு அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதலில் ஐகோர்ட் முக்கிய உத்தரவு
ஊழல் செய்த அரசு அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யப் பின்பற்றப்படும் நடைமுறைகளை அனைத்து ஊழல் வழக்குகளிலும் பின்பற்ற வேண்டும்; தேவைப்பட்டால் தற்காலிகமாகச் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் அரசு ஊழியர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது தொடர்பாக 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, 24 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள சட்ட மசோதாவை நிறைவேற்றுவது குறித்து நாடாளுமன்றம் சிந்திக்க வேண்டும் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
- 16:59 (IST) 12 Jul 2023மதுக்கடைகளின் நேரம் மாற்றப்படாது; அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்
டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றும் திட்டம் இல்லை. டெட்ரா மது பாக்கெட் குறித்து முடிவெடுக்கவில்லை என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்
- 16:34 (IST) 12 Jul 2023செந்தில் பாலாஜி வழக்கு வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைப்பு
அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, வழக்கு ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- 16:33 (IST) 12 Jul 2023ஐசிசி-ன் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் 'ஹசரங்கா'
இலங்கை அணியின் பந்து வீச்சாளர் 'ஹசரங்கா' ஐசிசி-ன் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார்
- 16:14 (IST) 12 Jul 2023செந்தில்பாலாஜிக்கு ஜூலை 26 வரை காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வரும் 26 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் காவல் முடிவடைந்த நிலையில் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்
- 15:41 (IST) 12 Jul 2023நடிகர் விஜய் 2வது நாளாக நிர்வாகிகளுடன் ஆலோசனை
சென்னை, பனையூர் அலுவலகத்தில் நடிகர் விஜய் 2வது நாளாக 234 தொகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சுமார் 300க்கும் மேற்பட்டோரை சந்தித்து நடிகர் விஜய் ஆலோசிக்க உள்ளார்
- 15:29 (IST) 12 Jul 2023இ.பி.எஸ் வெளியிட்ட அறிவிப்பு, ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலாவுக்கு மட்டும் பொருந்தாது – ஜெயக்குமார்
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு, ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலாவுக்கு மட்டும் பொருந்தாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
- 15:13 (IST) 12 Jul 2023விரைவில் ’வேட்டையாடு விளையாடு 2’
வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை நடிகர் கமலிடம் கூறியுள்ளேன், படப்பிடிப்பின் பணிகளை விரைவில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்
- 14:57 (IST) 12 Jul 2023சொத்து குவிப்பு வழக்கு - தீபா மனு தள்ளுபடி
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த சொத்துகளை உரிமை கோரி தீபா, தீபக் தாக்கல் செய்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- 14:54 (IST) 12 Jul 2023துரைமுருகன் கடிதம்
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய சட்ட ஆணையத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார்.
முழு செய்தியும் படிக்க
https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-oppose-uniform-civil-code-durai-murugan-ucc-721594/
- 14:47 (IST) 12 Jul 2023விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம்
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15ம் தேதி முதல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம்
ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்க முடிவு
ஆசியரியர்களை தேர்வு செய்ய மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தல்
- 14:38 (IST) 12 Jul 2023தள்ளுபடி விலையில் தக்காளி, மத்திய அரசு அறிவுறுத்தல்
தக்காளியை கொள்முதல் செய்து அதிகம் நுகரப்படும் மையங்களுக்கு விநியோகம் செய்ய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்புக்கு மத்திய அரசு அறிவுறுத்தல
கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட உள்ளது
டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் சில்லறை விற்பனை மையங்கள் மூலம் தள்ளுபடி விலையில் தக்காளி விற்கப்படும் எனவும் அறிவிப்பு
- 13:49 (IST) 12 Jul 2023தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் தி.மலை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:49 (IST) 12 Jul 2023மகளிர் உரிமைத் தொகை; கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்
அனைத்து நியாய விலை கடைகளிலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்; திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும்போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்.
ஜூலை 17ம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்யத் துணை ஆணையர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு.
- 13:49 (IST) 12 Jul 2023லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது
கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றத்திற்காக ரூ.10,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலு கைது செய்யப்பட்டார்.
ஒகையூர் கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் பட்டா மாற்றத்திற்காக விண்ணப்பித்த போது லஞ்சம் வாங்கிய பாலு பிடிபட்டார்
- 13:48 (IST) 12 Jul 2023பியூஷ்கோயலுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்தக்கோரி மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- 13:19 (IST) 12 Jul 2023யாத்திரை சென்று சிக்கிய தமிழர்கள்; செஞ்சி மஸ்தான் பேட்டி
வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் அமர்நாத் யாத்திரை சென்று சிக்கிய 25 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்;
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் 96000 23654 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்- அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
- 13:18 (IST) 12 Jul 2023செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறை வாதம்
கைது நடவடிக்கை சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் 2005ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் புலன் விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில், 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் அமலாக்கத்துறை தரப்பில் வாதம்
- 13:18 (IST) 12 Jul 20232ஜி வழக்கு
2ஜி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஆக.10ம் தேதிக்கு தள்ளிவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 12:51 (IST) 12 Jul 202321 தமிழக யாத்ரீகர்கள் பனி மலையில் சிக்கி தவிப்பு
அமர்நாத் யாத்திரைக்கு சென்ற 21 தமிழக யாத்ரீகர்கள் பனி மலையில் சிக்கி தவிப்பு
பனிமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் முழுவதும் சேதம்
தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ வெளியீடு
- 12:50 (IST) 12 Jul 2023அபாய அளவை எட்டிய டெல்லி யமுனை நதி
அபாய அளவை எட்டிய டெல்லி யமுனை நதி
நதியின் கரையோரம் இருந்த குடிசைகள் நீரில் மூழ்கியதால் மக்கள் கடும் அவதி
கரையோரம் வசித்த 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
- 12:42 (IST) 12 Jul 2023பொது சிவில் சட்டம்: மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும்- திமுக
பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது.
இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம்
திமுகவைப் பொறுத்தமட்டில் பொது சிவில் சட்டமே நிறைவேற்றக் கூடாது என்பதுதான் இறுதியான, தீர்க்கமான கொள்கை பிரகடனம்
பாஜகவின் ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு என்ற கொள்கையின் விளைவாக பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்துகிறது.
பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும்- அமைச்சர் துரைமுருகன்
- 12:41 (IST) 12 Jul 2023செந்தில் பாலாஜி வழக்கில் புலன் விசாரணை அவசியம்
செந்தில் பாலாஜி வழக்கு - அமலாக்கத் துறை முன் வைத்த வாதங்கள்
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம் தான்.
ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது.
புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது.
- 12:16 (IST) 12 Jul 2023நீட் கவுன்சிலிங்- விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இந்நிலையில் கவுன்சிலிங்-க்கு விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. நீட் கவுன்சிலிங் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
முன்னதாக ஜூலை 10-ம் தேதி கடைசி நாள் அறிவிப்பட்ட நிலையில், 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. tnmedicalselection.net என்ற தளத்தில் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- 11:59 (IST) 12 Jul 2023பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்
மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்
கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும் - முதல்வர்
சில உணவுப் பொருட்கள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
உற்பத்தி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும் - முதல்வர்
- 11:52 (IST) 12 Jul 2023வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.96 கோடி ஊக்கத்தொகை
தேசிய, பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.96 கோடி ஊக்கத்தொகை
சென்னை, தலைமை செயலகத்தில் ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 11:50 (IST) 12 Jul 2023மதுவை ஒழிக்கும் வகையில் தான் மதுவிலக்கு துறை செயல்பட வேண்டும்
மதுவை ஒழிக்கும் வகையில் தான் மதுவிலக்கு துறை செயல்பட வேண்டும்
மதுவிலக்கு தேவை என வலியுறுத்தும் நிலையில், மதுவை குறைத்து விற்பனை செய்வதா?
விற்பனை குறைவாக இருக்கும் மதுக்கடைகளை தான் மூடியுள்ளனர் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
- 11:18 (IST) 12 Jul 2023போக்குவரத்து அலுவலர் குழு அதிரடி ஆய்வு
சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழு அதிரடி ஆய்வு
பள்ளி மற்றும் தனியார் வாகனங்கள் உரிய அனுமதி பெற்று இயங்குகிறதா என ஆய்வு
பள்ளி வேன் கவிழ்ந்து 13 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக ஆய்வு
- 11:03 (IST) 12 Jul 2023திமுக கவுன்சிலர் தேவிபிரியா குடும்பத்துடன் தற்கொலை
நாமக்கல், ராசிபுரம் 13வது வார்டு திமுக கவுன்சிலர் தேவிபிரியா(31) குடும்பத்துடன் தற்கொலை . கணவன், மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை - மகள் விஷம் அருந்தி தற்கொலை . 3 பேரின் உடல்களையும் மீட்டு ராசிபுரம் போலீசார் தீவிர விசாரணை .
- 10:51 (IST) 12 Jul 2023சென்னை உயர் நீதிமன்றத்தில் 3வது நீதிபதி முன் விசாரணை தொடங்கியது
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு . சென்னை உயர் நீதிமன்றத்தில் 3வது நீதிபதி முன் விசாரணை தொடங்கியது . அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்கிறார்
- 10:46 (IST) 12 Jul 2023முன்னாள் இயக்குனர் விஜயராகவன் மீது வழக்கு
முன்னாள் இயக்குனர் விஜயராகவன் மீது வழக்கு . உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் விஜயராகவன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு . 12 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு
- 10:30 (IST) 12 Jul 2023தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ₨144 உயர்வு . தங்கம் ஒரு கிராம் ரூ. 5,500க்கும், ஒரு சவரன் ரூ. 44,000க்கும் விற்பனை
- 10:29 (IST) 12 Jul 2023ஆன்லைன் மூலம் அபராதத்தை செலுத்தினார் விஜய்
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்தினார் நடிகர் விஜய். இசிஆர் சாலை, அக்கரை பகுதி சிக்னலில் விஜய்யின் கார் நிற்காமல் சென்றதாக அபராதம் ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் அபராதத்தை செலுத்தினார் விஜய்
- 10:29 (IST) 12 Jul 2023300 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை
தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை. ஏற்கனவே 82 ரேஷன் கடைகளில் விற்கப்பட்ட நிலையில் கூடுதலாக விற்பனை. ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ. 60க்கு விற்பனை
- 09:37 (IST) 12 Jul 2023தீபாவளி முன்பதிவு-டிக்கெட்கள் விற்று தீர்ந்தன
தீபாவளி முன்பதிவு-டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் ஆர்வம் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 5 ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.
- 08:22 (IST) 12 Jul 2023தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
கும்பகோணம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் . வேலை நேரம் குறைப்பு, சம்பளம் அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்
- 08:21 (IST) 12 Jul 2023வருமான வரித்துறை சோதனை நிறைவு
கரூரில் 3வது கட்டமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு . அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 12 இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
- 08:20 (IST) 12 Jul 2023செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு இன்றும் விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு. சென்னை உயர் நீதிமன்றத்தில் 3வது நீதிபதி முன் இன்றும் விசாரணை தொடருகிறது
- 08:18 (IST) 12 Jul 2023தீபாவளி : ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம் . அடுத்த 3 நாட்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.