Advertisment

Tamil News Today : ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; கே.எஸ்.அழகிரி கைது

Tamil News Today : தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

author-image
WebDesk
New Update
Tamil News Today : ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; கே.எஸ்.அழகிரி கைது

Tamil News Today unlock5 : தமிழகத்தில் “ஒரே நாடு-ஒரே ரேசன்” திட்டத்தை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

Advertisment

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சா‌ப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மதுபான பார்கள், திரையரங்குகள் திறக்க அனுமதியளித்து புதுச்சேரி அரசு உத்தரவு. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது .குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

குடியரசு தலைவரின் வளமான பார்வையும், அறிவும் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து என புகழாரம்.

ஹாத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காணொலி மூலம் பேசினார். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil News Today : முக்கியத் தகவல்களை உடனுக்குடன் இந்தத் தளத்தில் நீங்கள் காணலாம். அரசியல், சமூகம், விளையாட்டு, வானிலை உள்பட அத்தனை அப்டேட்களுடன்!














Highlights

    21:46 (IST)01 Oct 2020

    தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து

    தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    21:45 (IST)01 Oct 2020

    பெரும்பாலான மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து

    தூத்துக்குடி, திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    21:43 (IST)01 Oct 2020

    ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; கே.எஸ்.அழகிரி கைது

    உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி. போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனைக் கண்டித்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் சென்னை சத்தியமூர்த்தி பவன் வாயில் முன்பு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    21:24 (IST)01 Oct 2020

    பெரும்பாலான மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து

    ஈரோடு, ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    21:22 (IST)01 Oct 2020

    பெரும்பாலான மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து

    பெரும்பாலான மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    21:13 (IST)01 Oct 2020

    அக்.3 முதல் ராகுல் காந்தி கிசான் யாத்ரா மேற்கொள்வார் - காங். தலைவர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

    மக்களின் உரிமைகளுக்காக போராடும் காங்கிரஸ் கட்சியை பாஜகவால் தடுத்து நிறுத்த முடியாது. விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அக்டோபர் 3 முதல் பஞ்சாப் முதல் டெல்லி வரை ராகுல் காந்தி கிசான் யாத்ரா மேற்கொள்வார் என்று காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    21:10 (IST)01 Oct 2020

    ஹத்ராஸ் கூட்டு பாலியல் கொலை; லக்னோ நீதிமன்றம் விசாரணை

    உத்தரப் பிரதேசம், ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் ஆதிக்க சாதி ஆண்களால் கூட்டு பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற கிளை லக்னோ நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. மாநில அரசு, காவல்துறை அக்டோபர் 12ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    20:39 (IST)01 Oct 2020

    உ.பி முதல்வரால் அரசாங்கத்தை நடத்த முடியவில்லை; ஜனாதிபதி ஆட்சி தேவை பீம் சேனா தலைவர் கோரிக்கை

    ஆசாத் சமாஜ் கட்சி தலைவரும் பீம் சேனா தலைவருமான சந்திரசேகர் ஆசாத், தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உ.பி மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரங்கள் தோல்வியுற்றதாகக் குற்றம் சாட்டினார். அதனால், உ.பி.யில் கவர்னர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    சஹரன்பூரில் உள்ள தனது வீட்டில் ஒரு தர்ணா ஒன்றைத் தொடங்கியுள்ளதாக ஆசாத் கூறினார். அங்கு அவர் வீட்டுக் காவலில் வைக்க உள்ளூர் போலீஸாரால் புதன்கிழமை உத்தரவிடப்பட்டது.

    “என் வீட்டில் நான் ஒரு தர்ணாவில் அமர்ந்திருக்கிறேன். அநீதியை பொறுத்துக் கொள்ள முடியாது. உத்தரபிரதேசத்தில் தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. குற்றவாளிகளைப் பாதுகாத்து, மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்து வரும் ஹத்ராஸின் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் மற்றும் எஸ்.எஸ்.பி. இதுபோன்ற தகுதியற்றவர்களிடமிருந்து ஒருவர் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும்” என்று சந்திரசேகர் ஆசாத் ட்வீட் செய்துள்ளார்.

    20:31 (IST)01 Oct 2020

    ராகுல் காந்தியை உ.பி. போலீஸ் தடுத்து வைத்திருப்பதற்கு பினராயி விஜயன் கண்டனம்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி.யில் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்றபோது தடுத்த உ.பி காவல்துறையையும் பாஜக அரசின் நடவடிக்கையையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டித்துள்ளார்.

    “ராகுல் காந்தி ஹத்ராஸ் செல்வதற்கான அனைத்து ஜனநாயக உரிமையும் அரசியலமைப்பு சுதந்திரமும் உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்கச் செல்வதைத் தடுப்பது அனைத்து ஜனநாயகக் கொள்கைகளுக்கும் எதிரானது.

    "இதை ஒரு ஜனநாயக சமூகம் அனுமதிக்க முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று விஜயன் தெரிவித்துள்ளார்.

    20:27 (IST)01 Oct 2020

    ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

    ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். நீர் மேலாண்மையை பெண்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

    20:24 (IST)01 Oct 2020

    கேரளாவில் ஹத்ராஸ் பாலியல் படுகொலை சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

    உத்தரப் பிரதேசம், ஹத்ராஸில் கூட்டு பாலியல் தாக்குதல் மூலம் 19 வயது தலித் பெண் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் காங்கிரஸ் தொண்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். ஹத்ராஸ் கூட்டு பாலியல் படுகொலையைக் கண்டித்து முழ்க்கமிட்டனர்.

    19:58 (IST)01 Oct 2020

    திருநெல்வேலி மாவட்டத்துக்கு தூய்மை இந்தியா திட்டத்திற்கான சிறப்பு விருது அறிவிப்பு

    திருநெல்வேலி மாவட்டத்துக்கு தூய்மை இந்தியா திட்டத்திற்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் நடைபெறும் விழாவில் நாளை விருது வழங்கப்படுகிறது.

    19:28 (IST)01 Oct 2020

    கள்ளச்சாராய ஒழிப்பு: சிறப்பாக செயல்பட்ட 5 காவல் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது

    கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தினத்தன்று விருதுடன் பரிசுத் தொகையாக ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் ரூ.40,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    18:36 (IST)01 Oct 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,688 பேருக்கு கொரோனா; 66 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 66 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:24 (IST)01 Oct 2020

    குரூப் 1 முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு; 2021 ஜனவரி 3ஆம் தேதி தேர்வு - டி.என்.பி.எஸ்.சி

    குரூப் 1 முதல்நிலை தேர்வு 2021 ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

    18:03 (IST)01 Oct 2020

    குவைத் மன்னர் ஷேக் மறைவு; 4ம் தேதி நாடு முழுவதும் அரசு துக்கம் அனுசரிப்பு - மத்திய அரசு

    குவைத் மன்னர் ஷேக் மறைவயொட்டி அக்டோபர் 4ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு மத்திய அரசு அறிவித்துள்ளது.

    17:41 (IST)01 Oct 2020

    உ.பி.யில் ராகுல் காந்தி கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

    உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தி கைது சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “அகில இந்தியத் தலைவர் என்றும் பாராமல் பிடித்துத் தள்ளி மரியாதைக் குறைவாக நடத்துவது மனித உரிமைகளுக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது. உ.பி.யில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ளதையே காட்டுகிறது. ராகுல்காந்தி கைது சம்பவத்துக்கு உ.பி. முதலமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.” என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    17:25 (IST)01 Oct 2020

    ராகுல், பிரியங்கா கைதைக் கண்டித்து சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் - கே.எஸ்.அழகிரி

    உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

    17:00 (IST)01 Oct 2020

    நெல்லை காங்கிரஸ் போராட்டம்

    உத்தரப்பிரதேசம் ஹத்ரஸ் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் நிலை தடுமாறி கீழே விழுந்தார் ராகுல். அவர் தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

    16:33 (IST)01 Oct 2020

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை வழக்கு

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது

    15:45 (IST)01 Oct 2020

    ராகுல்காந்தி கைது

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்க்கு நடைபயணமாக சென்ற ராகுல்காந்தி கைது எனத் தகவல். உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது இது நடந்துள்ளது. காவல்துறை தடையை மீறி சென்றதால் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதாகவும் தகவல்

    14:44 (IST)01 Oct 2020

    போலி சான்றிதழ் மூலம் 91 பெட்ரோல், கேஸ் விற்பனை நிலையங்கள்

    தமிழகத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் 91 பெட்ரோல், கியாஸ் விற்பனை நிலையங்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் பதில். 

    14:26 (IST)01 Oct 2020

    ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

    உத்தரபிரதேசம் செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், யமுனா நெடுஞ்சாலையில் அவர்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்கள். 

    13:51 (IST)01 Oct 2020

    திமுக புதிய பொறுப்பாளர்கள்

    தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம், தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமனம்

    13:50 (IST)01 Oct 2020

    பாலியல் வன்கொடுமைக்கான பூமியா இந்தியா

    ‘பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது இந்தியா! புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 

    12:45 (IST)01 Oct 2020

    மாவட்டங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என!

    அடுத்த 48 மணி நேரத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தகவல். 

    12:37 (IST)01 Oct 2020

    ஒரே நாடு ஒரே ரேஷன்!

    தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது . தூத்துக்குடி, தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், வரும் 16ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது இத்திட்டம் மூலம், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். 

    12:00 (IST)01 Oct 2020

    அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

    செங்கல்பட்டு பணிமுனையில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் குறைவாக இருப்பதால், விதிகளை மீறி பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்ற நிர்பந்திப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், ஓட்டுநர் நடத்துனர்களுக்கு பணி வழங்க இயலாமல், வருகைப்பதிவேட்டில் விடுப்பு என பதிவேற்றம் செய்வதாக குற்றம்சாட்டினர். போராட்டம் காரணமாக, விழுப்புரம் கோட்ட பேருந்துகளை தவிர்த்து, சென்னை மாநகர பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. 

    11:15 (IST)01 Oct 2020

    பிஎட் படிப்பு!

    தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பிஎட் சிறப்புக் கல்விக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது. 

    11:14 (IST)01 Oct 2020

    காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு காவலர் முருகன், தாமஸ், பி. ரான்சிஸ் , முத்து ராஜா ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி * வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி பாரதிதாசன் உத்தரவு

    11:13 (IST)01 Oct 2020

    பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனு!

    வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் . தலைமை நீதிபதியை விமர்சித்த வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு . பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனையாக 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    11:13 (IST)01 Oct 2020

    ஓபிஎஸ், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை!

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் விழா .  சென்னை அடையாறு மணிமண்டபத்தில், சிவாஜி கணேசன் படத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

    11:12 (IST)01 Oct 2020

    முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!

    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து . மலர் கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார் . குடியரசு தலைவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், தேசத்திற்கு நீண்ட நாள் சேவையாற்ற வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து. 

    10:04 (IST)01 Oct 2020

    உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    சாத்தான்குளத்தில், தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சி.பி.ஐ.-ன் நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    09:31 (IST)01 Oct 2020

    கிராம சபைக் கூட்டம்!

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு!

    09:30 (IST)01 Oct 2020

    ரேஷன் பொருட்கள்!

    நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தடையின்றி பாமாயில் வழங்கப்படும்!

    09:30 (IST)01 Oct 2020

    புதிய ஊரடங்கு அமல்!

    தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, உணவகங்கள், தேநீர் கடைகள், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும், பார்சல் சேவை இரவு 10 மணி வரை நடைபெறலாம் என்றும் தெரிவிக்கப்படுள்ளது

    Tamil News Today unlock5 : பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்து சமுபாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

    நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க

    இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதோடு, இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் ராம.கோபாலன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். உடலில் லேசான மாற்றங்கள் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவர்களை அணுக அறிவுறுத்துகிறார்கள்.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment