Tamil News today live updates Pongal 2020 special bus : பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதற்கான முன்பதிவுகள் இன்று துவங்கியது. அதனை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் முன்பதிவு மையங்களிலும் ஆன்லைனிலும் சொந்த ஊர் செல்பவர்கள் முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்துகள் குறித்த தகவல்கள் பெறவும் புகார்களை அனுப்பவும் 94450-14450, 94450-14436 எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத்தினர் போராட்டம்
நேற்று நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர் தொழிற்சங்கத்தினர். 13 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்குபெற்றவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
தர்பார் கொண்டாட்டம்
இன்று காலை ரஜினி நடிப்பில் உருவான தர்பார் வெளியானது. இந்த படத்தின் முதல்நாள் முதல் ஷோவை பார்க்கச் சென்ற ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திரையரங்குகளை மூழ்கடித்துள்ளனர். படம் எப்படி உள்ளது? முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பது குறித்து முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
Live Blog
Tamil News today updates Pongal 2020 special buses, tn politics, tn weather : இன்று தமிழகம் மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அளிக்கப்பட்டு வந்த 'Y' பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது
'Y' பிரிவில் பாதுகாப்பு வழங்கி வந்த 8 சிஆர்பிஎப் வீரர்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், வழக்கமான தமிழக காவல்துறை பாதுகாப்பு தொடரும் என அறிவிப்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, இன்று (09-01-2020) மதுரையில் பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரான ஸ்ம்ரிதி ராணி கலந்து கொண்டார். பேரணியில் பேசிய ஸ்ம்ரிதி ராணி,"வரலாற்றுப் பிழைகளை சரி செய்யும் வகையில் தான் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றார். திமுக ஏன் பாகிஸ்தானை ஆதரிக்கிறது? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டமாக அறிவிக்கக் கோரும் மனு மீதான விசாரணையின் போது, உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி, “பலவிதங்களில் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாடு கடினமான காலங்களில் சென்று கொண்டிருக்கிறது, நமது முயற்சி அமைதிக்காக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் மறுத்துவிட்டார்.
பொங்கல் சிறப்புபேருந்துகள் முன்பதிவுமையங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் MR.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார் கோயம்பேடு தாம்பரம் பூந்தமல்லி முன்பதிவு மையங்களிலும் ஆன்லைனிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
9445014450, 9445014436 என்ற எண்களில் சிறப்பு பேருந்துகள் குறித்த தகவல்களையும் , புகார்களைகளையும் தெரிவிக்கலாம்
மும்பையில் அமைந்திருக்கும் இந்தியா கேட் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணி நடைபெற்று வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் துவங்கி வைத்துள்ளார். இந்த பிரச்சார பேரணி மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்கள் வழியாக செல்கிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்றும், வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டில் 2% கூடுதலாக தமிழகத்தில் மழை பெய்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 407 கோடி செலவில் 11 மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் முதல் நகரமாக சென்னை விளங்குகிறது என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு. தேவைப்படும் இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ரூ. 2582 கோடியில் 34,871 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் சி.ஏ.ஏவுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் கைவிடப்பட்டால்மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
நிர்பயா வழக்கு - 22ம் தேதி குற்றாவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் குற்றவாளிகள். வினய் சர்மா சார்பில் இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலின் மறைமுக தேர்தல்களை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்துள்ளது. 11ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் திமுக இந்த கோரிக்கையை வைத்துள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றம் பதில்
சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் அதன் தாக்கம் இந்தியாவிலும் தெரிய துவங்கியுள்ளது. சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் 8 காசுகள் அதிகரித்து ரூ. 78.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 16 காசுகள் அதிகரித்து ரூ. 72.85க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அணைகளின் நீர்மட்டம்
Tamil News today updates : மேட்டூர் அணையினர் நீர்மட்டம் 114.3 அடியாக உள்ளது. நீர் இருப்பு 84.7 டி.எம்.சியாகும். நீர் வரத்து 1168 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 10,600 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. 30ம் தேதி வரை திறக்கப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாக உள்ளது, நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும், நீர்வரத்து 341 கனஅடியாகவும் உள்ளது, நீர் வெளியேற்றம் 300 கனஅடி ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights