Tamil News Today us election results : ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு முடிவு செய்துள்ளது” என ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவியை நெருங்கும் பைடன். 248 இடங்களில் வெற்றி.
சென்னை சிறப்பு புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க கூடுதலாக பலருக்கும் வசதி.தனியார் நிறுவன ஊழியர்களும் பயணிக்க அனுமதி. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல். கல்வி நிறுவனம், தொண்டு நிறுவனம், பத்திரிகை, டி.வி.-யில் பணியாற்றுபவர்களும் பயணம் செய்ய அனுமதி.
பாரதிய ஜனதா நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க என மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது .ஏற்கெனவே ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிக்கிம் மாநிலத்திலும் தடை .
அர்ணாப் கோஸ்வாமியை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது மும்பை போலீஸ்
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Tamil News Today us election results : பள்ளிகள் திறப்பு 9ம் தேதி கருத்துக்கேட்பு .பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிபு.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு. ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு அமித்ஷா கண்டனம் .
Web Title:Tamil news today live us election results us president donlad trump covid19 mk stalin tamil news
தமிழக அரசு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தொடர்ந்துள்ள 3 அவதூறு வழக்குகளில், அவரை டிசம்பர் 3-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 28 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 நாட்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் ஜோ பிடென் 264 இடங்களைப் பெற்று வெற்றியை நெருங்கி வரும் நிலையில், அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.
பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவினர் ஒருபோதும் சட்டத்தை மீறுபவர்கள் அல்ல. என்ன நடந்தாலும் துள்ளிவரும் வேல் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
144 தடை அமலில் உள்ளதால் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியதையடுத்து, நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட பாஜகவின் வேல் யாத்திரையை தமிழக காவல்துறை தடை செய்துள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் பழனிசாமி, “ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் வகையில் விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.
விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை. இந்தியா ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்கு ரூ.2,000 வழங்க உள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவிய நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ, “குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்கு ரூ.2,000 வழங்கும் திட்டம் ஏதுமில்லை. ரூ.2,000 வழங்கப்படும் என்பது வதந்தி” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறுகிறது. விஜய் கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
கிராமசபை கூட்டங்களைக் கூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. நேரு வழக்கு தொடுத்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் தனி மனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என கூற அரசுக்கு எங்கே அதிகாரம் உள்ளது? என்றனர். எம்.எல்.ஏ. நேரு மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பட்டாசு விற்பதற்கும் வெடிப்பதற்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி அம்மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்!
தமிழகத்தில் தீபாவளியன்று காலை ஆறு மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன், இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பழி போடும், பழிவாங்கும் அரசியல் அல்ல எங்களுடையது; வழிகாட்டும் அரசியல் தான் எங்களுடையது. நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வியூகம். ஊழலை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. ரஜினிக்கு அவர் உடல்நலன் தான் முக்கியம்; அரசியல் பிரவேசம் குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அவருடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். ரஜினியிடம் ஆதரவு கேட்போம். வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது. வேலை வாங்கிக் கொடுப்பதே எனது வேலையாக இருக்கும். நான் எங்கு போட்டியிடுவேன் என்பது தேர்தல் நேரத்தில் தெரிய வரும். சட்டமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் கண்டிப்பாக ஒலிக்கும்” என்றார்
வேல் யாத்திரையால் கொரோனா அதிகமாக பரவும். பாஜக வேல் யாத்திரையை கைவிட வேண்டும். மிறீனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்; எழுவரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும்!" என்று சு.வெங்கடேசன் எம்.பி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி. தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் காணொளி காட்சி மூலம் முதல்வர் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல்.
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்போவதில்லை என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி என விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை முதல் ஏறுமுகத்தில் உள்ளன.
திரைப்பட வசூலில் 50% பங்கு தந்தால் விபிஎப் கட்டணத்தை ஏற்கிறோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம் எனசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், தடை கோரிய மனு மீதும் அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை.
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது. கொரோனா 2ஆவது மற்றும் 3ஆவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி .சென்னை நொளம்பூர், பெரம்பலூரில் கட்டப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் முழுவீச்சில் எண்ணப்பட்டு வரும் நிலையில், ட்ரம்ப் - பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.