Advertisment

Tamil News Updates: சென்னை வானிலை மையத்தில் உள்ள வசதிகள் உலகத் தரத்திற்கு ஒப்பானது: இந்திய வானிலை மையம் விளக்கம்

Tamil news updates- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Weather Updates: சென்னையில் இன்னும் வெப்பம் அதிகரிக்கும்! - சென்னை வானிலை மையம்

Tamil news Today

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates                                          

சிதம்பரம் தலைமையில் குழு 

வரும் 2024 மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, காங்கிரஸ் சார்பில் 16 போ் கொண்ட தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளராக டி.எஸ். சிங் தேவ் செயல்படுவார். காங்கிரஸ் மூத்த தலைவா்களான சித்தராமையா, பிரியங்கா காந்தி, ஆனந்த் சா்மா, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூா், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட 14 போ் உறுப்பினா்களாக செயல்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Dec 23, 2023 21:50 IST
    சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை

    இந்திய வானிலை மையத்தில் பயன்படுத்தப்படும் கருவில் உலகத்தரமானவை. அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கை கோள் வசதிகள் ரேடார்கள் உள்ளன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா வானிலை ஆய்வு மையத்தின் கட்டமைப்பு, முன்னெச்சரிக்கைகளை உலகத்தரம் வாய்ந்தது என்று, உலக வானிலை அமைப்பு பாராட்டியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.



  • Dec 23, 2023 20:49 IST
    முன்னாள் தலைமைச் செயலாளர் மரணம் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைவெய்தினார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவரது துணைவியாருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணியாற்றிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்



  • Dec 23, 2023 20:48 IST
    தனியார் மருத்துவமனையின் 6வது மாடியில் பயங்கர தீ விபத்து

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத் குடிமல்காப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் 6வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு! தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்!



  • Dec 23, 2023 20:42 IST
    கப்பல் மீது தாக்குதல் : இந்திய கடற்படை புதிய தகவல்

    இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து புதிய தகவல். கப்பலில் உள்ள 22 பேரில் 21 இந்தியர்கள், வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒருவர் இருந்துள்ளனர்.  காலை 10 மணி அளவில் மின்னஞ்சல் வழியாக கப்பலின் ஏஜென்ட் மூலம் உதவி கோரப்பட்டது. தாக்குதல் காரணமாக கப்பலில் உள்ள மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.



  • Dec 23, 2023 19:59 IST
    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு : கேரள பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதனால் கேரள பகுதிக்கு 2ம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Dec 23, 2023 19:01 IST
    கனமழை பாதிப்பு; பள்ளி சான்றிதழ்களை பெற ஏற்பாடு

    கனமழையில் பள்ளி சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் கட்டணம் இல்லாமல் மறுபடிவ சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு அந்தந்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்



  • Dec 23, 2023 18:49 IST
    தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது; மு.க.ஸ்டாலின்

    தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தலைமைச் செயலாளரும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Dec 23, 2023 18:29 IST
    நிர்மலா சீதாராமன் கருத்துக்கு கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

    வெள்ள நிவாரணமாக ரூ.21,000 கோடியை தமிழ்நாடு அரசு கேட்ட நிலையில் மத்திய அரசு இதுவரை ரூ.21 கூட தரவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்



  • Dec 23, 2023 18:03 IST
    கட்டணமின்றி கல்லூரி சான்றிதழ் நகல் பெறலாம்; உயர் கல்வித்துறை

    கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை பெற https://www.mycertificates.com/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. அதே இணையதளத்தில் தென்மாவட்ட கல்லூரி மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து நகல் பெறலாம்.



  • Dec 23, 2023 17:58 IST
    பரனூர் சுங்கசாவடியில் 2 கிலோ மீட்டருக்கு  அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

    கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை நோக்கி வாகனங்கள் செல்வதால் செங்கல்பட்டை அடுத்துள்ள பரனூர் சுங்கசாவடியில் 2 கிலோ மீட்டருக்கு  வாகனங்கள் அணிவகுத்து நிற்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



  • Dec 23, 2023 17:56 IST
    பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

    மழை காலங்களில் களத்தில் பணியாற்றிய 400 பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!



  • Dec 23, 2023 17:38 IST
    ஸ்ரீவைகுண்டம் தண்டவாள பராமரிப்பாளருக்கு பாராட்டு

    தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் உரிய நேரத்தில் திருச்செந்தூர் ரயிலை நிறுத்தி 800 பயணிகள் உயிரை காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளருக்கு பாராட்டு குவிகிறது. தண்டவாள பராமரிப்பாளர் செல்வக்குமாருக்கு ரூ.5,000 அறிவித்து ரயில்வே துறை கவுரவப்படுத்தியுள்ளது



  • Dec 23, 2023 17:15 IST
    கேரள சகோதரர்களின் அன்புக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு கேரள அரசின் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கேரள சகோதரர்களின் அன்புக்கு நன்றி என X பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்



  • Dec 23, 2023 16:56 IST
    இஸ்ரேல் கச்சா எண்ணெய் கப்பல் மீது இந்தியக் கடலில் தாக்குதல்

    இஸ்ரேல் கச்சா எண்ணெய் கப்பல் மீது இந்திய கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கப்பலில் இருப்பவர்களை மீட்க கடலோர காவல் படையின் விக்ரம் கப்பல் விரைந்துள்ளது. கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் கப்பலை நோக்கி போர்க்கப்பலும் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது



  • Dec 23, 2023 16:40 IST
    சாலைகளை சீரமைக்க நடவடிக்கை – கனிமொழி

    தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 85% பகுதிகளில் மின் விநியோகம் சீரானது என எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்



  • Dec 23, 2023 16:40 IST
    சாலைகளை சீரமைக்க நடவடிக்கை – கனிமொழி

    தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 85% பகுதிகளில் மின் விநியோகம் சீரானது என எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்



  • Dec 23, 2023 16:21 IST
    'விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி வட்டியில்லா கடன்' - அமைச்சர் பெரியகருப்பன்

     

    ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.1,500  கோடி வட்டியில்லா கூட்டுறவு கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். வேளாண் கடன் அட்டை (KCC) திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும் 



  • Dec 23, 2023 15:37 IST
    ஐ.பி.எல் - பாண்டியா பங்கேற்பது சந்தேகம்!

     

    ஐ.பி.எல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பங்கேற்க வாய்ப்புகள் குறைவு என்றும், கணுக்கால் காயத்தில் இருந்து பாண்டியா முழுமையாக குணம் அடைய அதிக மாதங்கள் ஆகக் கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    ஒருவேளை பாண்டியா பங்கேற்க முடியாவிட்டால் ரோகித் மீண்டும் கேப்டன் ஆக செயல்பட வாய்ப்பு உள்ளது. 



  • Dec 23, 2023 14:50 IST
    அலங்காநல்லூர் ஜல்லிகட்டு - 'வழக்கமான இடத்திலேயே நடைபெறும்': மதுரை கலெக்டர் அறிவிப்பு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெறாது என்றும், இந்த ஆண்டு வழக்கமான இடத்திலேயே அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நடைபெறும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். 



  • Dec 23, 2023 14:26 IST
    ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

     

    பட்டா மாற்றம் செய்து தரக் கோரிய மனுவை ஆறு மாதங்களாக பரிசீலிக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Dec 23, 2023 14:24 IST
    கிறிஸ்துமஸ் - வந்தே பாரத் சிறப்பு ரயில்

     

    டிச.25ல் சென்னை சென்ட்ரல் - கோழிக்கோடு இடையே காலை 4.30 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    டிச.25ல் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     



  • Dec 23, 2023 13:47 IST
    நிவாரண நிதி வழங்கிய திமுக எம்.எல்.ஏ.க்கள் 

     

    மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய திமுக எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர். மொத்தம் ரூ 1.27 கோடிக்கான காசோலை புயல் நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் முதல்வரிடம் நிதியை வழங்கினர்.



  • Dec 23, 2023 13:24 IST
    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைப்பு

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைப்பு.

    வரும் 27ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தனி இணை ஆணையர் அழைப்பு விடுத்து கடிதம்.

    ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்தி அகவிலைப்படி உயர்வை வழங்கவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை



  • Dec 23, 2023 13:11 IST
    சென்னையில் 8000 போலீசார் பாதுகாப்பு

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

    சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு

    கிறிஸ்துவ தேவாலயங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவு.



  • Dec 23, 2023 13:01 IST
    டெல்லி இ.டி அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர் 

    விசா மோசடி வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆஜர். குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில் இ.டி விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். 



  • Dec 23, 2023 12:57 IST
    ஜூஜுவாடி தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

    தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள். ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஜூஜுவாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல். சுமார் 3 கிமீ தூரத்திற்கு மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.



  • Dec 23, 2023 12:41 IST
    நாகூரில் தர்காவில் ஆளுநர் ஆர்.என் ரவி வழிபாடு

    அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனை; கந்தூரி விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி; புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் வழிபாடு செய்த பின் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வருகை பதிவேட்டில் குறிப்பு



  • Dec 23, 2023 12:32 IST
    தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதத்திற்கு ஏற்ப நிதி

    2015-ம் ஆண்டு முதல் பேரிடர்களால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமா மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிய மொத்த தொகை ரூ.1,27,655.80 கோடி. இதில் ஒன்றிய பா.ஜ.க அரசால் ரூ.5884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.  இது 4.61 விழுக்காடு மட்டுமே. அதாவது பா.ஜ.க தமிழ்நாட்டில் வைத்திருக்கும் வாக்கு சதவீதத்திற்கு ஏற்ப நிதி ஒதுக்குவார்கள் போலும்- அமைச்சர் தங்கம் தென்னரசு



  • Dec 23, 2023 12:32 IST
    ஸ்ரீவைகுண்டத்தில் நகரும் செல்போன் டவர்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டத்தில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு

    ஒரு நகரும் செல்போன் டவர் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிர்வாகம் தகவல்

    நகரும் 2 செல்போன் டவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன

    ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்



  • Dec 23, 2023 12:31 IST
    யாரையும் தவறாக பேசவில்லை- உதயநிதி ஸ்டாலின்

    மரியாதை குறைவாக பேசவில்லை

    பேரிடருக்கான நிதியை தான் கேட்டேன்; யாரையும் தவறாக பேசவில்லை. 

    எனக்காக எதையும் நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்காகவே கேட்டேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்



  • Dec 23, 2023 11:53 IST
    கொரோனா பாதிப்பு 500-ஐ தாண்டியது

    கொரோனா பாதிப்பு 500-ஐ தாண்டியது. கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் - தினசரி பாதிப்பு 500-ஐ தாண்டியது.

    கடந்த 24 மணி நேரத்தில் 565 பேருக்கு பாதிப்பு உறுதி. இருவர் கொரோனாவால் உயிரிழப்பு.



  • Dec 23, 2023 11:47 IST
    பொன்முடியுடன் மு.க.அழகிரி சந்திப்பு

    3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் மு.க.அழகிரி சந்திப்பு

    நேற்று முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்திய பொன்முடியை அவரது இல்லத்தில் சந்தித்தார் மு.க.அழகிரி



  • Dec 23, 2023 11:47 IST
    வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் தங்க தேரோட்டம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது,,
    பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு.



  • Dec 23, 2023 11:46 IST
    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: பயணிகள் புகார்

    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு

    விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்

    ஆம்னி பேருந்து கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு.



  • Dec 23, 2023 11:12 IST
    325 சுகாதார நிலையங்கள் பாதிப்பு: மா.சுப்பிரமணியன் 

    மழை வெள்ளத்தால் மருத்துவமனைகளுக்கு பெரிய பாதிப்பில்லை

    வெள்ளம் பாதித்த 4 தென் மாவட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது, 

    நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாகவும் மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்



  • Dec 23, 2023 10:50 IST
    தனித்தீவான பழைய காயல் கிராமம்

    இந்த கிராமங்களில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரகணக்கான மக்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. வெள்ளநீர் முழுவதும் வடிந்து சாலை இயல்பு நிலைக்கு திரும்பினால் மட்டுமே மறுபகுதிக்கு செல்ல முடியும். இங்கு விவசாய நிலங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன.

     முழுமையாக படிக்க: வானத்துல இருந்து வெள்ளம் கொட்டுச்சு.. தனித்தீவான பழைய காயல் கிராமம்



  • Dec 23, 2023 10:49 IST
    TNPSC வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதிக்கு 263 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

    TNPSC இல் சூப்பர் வேலை வாய்ப்பு; 263 உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க

    முழுமையாக படிக்க: TNPSC வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதிக்கு 263 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!



  • Dec 23, 2023 10:28 IST
    நெல்லையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

    பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    4 தென் மாவட்டங்களில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 261 துணை சுகாதார நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 315 சுகாதார நிலையங்கள் பாதிப்பை சந்தித்துள்ளது;

    கனமழையால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த ஆய்வு அறிக்கையை  விரைவில் சமர்பிப்பார்கள். பாதிப்படைந்துள்ள மருத்துவமனை மற்றும் அனைத்து சுகாதார நிலையங்களிலும் விரைவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்- நெல்லையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  பேட்டி



  • Dec 23, 2023 10:21 IST
    சதுரகிரிக்கு செல்ல தடை

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை முதல் 27ஆம் தேதி வரை, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு- வனத்துறை அறிவிப்பு



  • Dec 23, 2023 10:17 IST
    ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக சித்தராமைய்யா அறிவிப்பு

    கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா அறிவிப்பு!

    எந்த உடை அணிவது, எந்த உணவு சாப்பிடுவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதை நான் ஏன் தடுக்க வேண்டும்? உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள்- சித்தராமையா



  • Dec 23, 2023 09:57 IST
    ரூ. 47,000த்தை தொட்ட தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47 ஆயிரத்துக்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,875க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



  • Dec 23, 2023 09:57 IST
    தூத்துக்குடியில் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Dec 23, 2023 09:57 IST
    எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு நிவாரணம்

    மிக்ஜாம் புயல் - மழையால் சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணமாக வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு

    மீனவ கிராமங்களைச் சேர்ந்த 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500, மீன்பிடி  படகுகளை சரிசெய்ய படகு ஒன்றிற்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வழங்கப்படும்.



  • Dec 23, 2023 09:32 IST
    இந்நாள் அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு: ஜனவரி 2 முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை

    எம்.பி,. ஏம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளையும், முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை எடுத்த வழக்குகளையும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளார்.

    முழு செய்தியும் படிக்க: முன்னாள்- இந்நாள் அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு: ஜனவரி 2 முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை



  • Dec 23, 2023 09:24 IST
    சிவ்தாஸ் மீனா தூத்துக்குடியில் நேரில் ஆய்வு

    தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்து வருகிறார்.



  • Dec 23, 2023 08:49 IST
    திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் 5 நாட்களுக்கு பின் பேருந்து சேவை தொடங்கியது.

    பெருமழை வெள்ளத்தால் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் உடைப்பு ஏற்பட்ட இடங்கள் சரிசெய்யப்பட்டு, 5 நாட்களுக்குப் பிறகு நேர் வழியில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    மேலும், திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் செல்லும் பேருந்துகள் குரும்பூர் சென்று, அங்கிருந்து நாசரேத், பால்குளம் வழியாக ஆழ்வார் திருநகரி சென்று, திருநெல்வேலிக்கு இயக்கப்படுகின்றன.

    திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவிலுக்கும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.



  • Dec 23, 2023 08:42 IST
    குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

    வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாட்களாக குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இன்று முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



  • Dec 23, 2023 08:41 IST
    வயல்ல சரி பண்ணவே ஒரு லட்சம் ஆகும்.. அரசாங்கம் தான் எங்களை காப்பாத்தணும்- ஆழ்வார்கற்குளம் விவசாயிகள் வேதனை



  • Dec 23, 2023 08:02 IST
    ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

    3 நாட்களுக்கு பிறகு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது

    மழை காரணமாக ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்பட்டது.



  • Dec 23, 2023 07:44 IST
    இன்று வைகுண்ட ஏகாதசி- சொர்க்கவாசல் திறப்பு

    இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைஷ்ணவ ஸ்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது.

    கடுங்குளிரிலும் பெருமாள் கோயில்களில் குவிந்த திரளான பக்தர்கள் - நள்ளிரவு முதல் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment