/tamil-ie/media/media_files/uploads/2019/05/z655.jpg)
News in Tamil : Latest, Breaking, and Live News Updates
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவுடன் பேசி வருவது உண்மை தான் என பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க - Tamil Nadu Latest News Live Updates
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பாஜக – காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த கே.சி.ஆர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தொடர்ந்து அப்பாயிண்ட்மென்ட் கேட்டு வந்தார். ஏற்கனவே, காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக, தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு கட்சியின் தலைவரை எப்படி சந்திக்கும் என்று ஐயம் எழுந்த நிலையில், எந்தவித நெருடலும் இன்றி சந்திர சேகர் ராவ்-ஐ சந்திக்க ஒப்புக் கொண்டார் மு.க.ஸ்டாலின்.
இதனால் தேசிய அளவில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று(மே.13) ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்திற்கு நேரடியாக சென்று கே.சி.ஆர். சந்தித்தார்.
சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின் முடிவில், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கே.சி.ஆர். கைக் குலுக்கிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
தொடர்ந்து, திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மு.க.ஸ்டாலின் – சந்திர சேகர் ராவ் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது நிறம் மாறிக் கொண்டிருக்கிறார். முதலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். நேற்று சந்திரசேகர் ராவிடமும் பேசுகிறார், மறுபுறம் மோடியுடனும் பேசுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.