பாஜகவுக்கு எதிராகக் கோஷமிட்ட மாணவி சோபியா விவகாரம் தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் தமிழிசை சவுந்தரராஜன்.
சோபியா விவகாரம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி:
“நான் நேற்று 10.20 மணிக்கு தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றேன். தூத்துக்குடியில் விமானம் தரையிறங்கியது. எனது இருக்கை எண் 8, சோபியாவின் இருக்கை அரை எண் 3. அவரின் இருக்கையைக் கடந்து என் இருக்கைக்குச் செல்லும்போது தனது கைகளை உயர்த்தி பாஜக பாசிச ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டார்.
சோபியா
நாகரீகம் கருதி, விமானம் உள்ளே பயணிகள் அமைதியாகப் பயணிக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் எதுவும் பேசவில்லை. முதலில் சின்ன பெண் சத்தம் போடுகிறார் என்று கடந்து சென்றேன் ஆனால் அவர் திரும்பத் திரும்ப அதையே கூறினார்.
சரி விமானம் விட்டு வெளியே வந்ததும் அவரிடம் கேட்கலாம் என்று நின்றிருந்தேன். அப்போது வெளியே வந்த அவர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே சென்றார். நான் அவரிடம் விமானம் உள்ளே இப்படி கோஷமிடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் எனது பேச்சுரிமை என்றார்.
சோபியாவுக்கு வழங்கப்பட்ட நிபந்தனையற்ற ஜாமின் குறித்த செய்திக்கு
பேச்சுரிமையென்றால் மேடை போட்டு பேசுங்கள். நானும் விவாதிக்கிறேன், நீங்களும் விவாதிக்கலாம். ஆனால் பொதுமக்கள் பயணிக்கும் தளத்தில் இப்படிக் கத்துவது சரியா எனக் கேட்டேன். அவர் மீண்டும் அதே வார்த்தையைக் கூறினார். அத்துடன் சொல்ல தவிர்க்கக் கூடிய வார்த்தைகளைக் கூறினார். ஒரு பெண் தலைவராகக் கருத்து அல்லது புகார் தெரிவிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. அதைத் தான் நான் செய்தேன்.
நிபந்தனையற்ற ஜாமீனில் வெளிவந்தார் சோபியா
போலீஸ் விசாரணை செய்யட்டும். அதுவும் அவர் நடந்துகொண்ட விதம், கைகளைத் தூக்கி கோஷம் எழுப்பியது எல்லாம் பார்த்த பிறகு அவர் ஏதோ ஒரு அமைப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும், சாதாரண பெண் கோஷம் இடுவது போல் இல்லை என்று சந்தேகித்தேன். அதன் பின்னர் விமான நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தேன்.
இந்திய அளவில் ட்ரெண்டான ”பாஜக பாசிச ஆட்சி ஒழிக” - சோபியாவிற்கு ஆதரவாக களம் இறங்கிய நெட்டிசன்கள்
அவர்கள் இதனை விசாரணை செய்யட்டும். சோபியாவின் பின்னணி குறித்து தெரிந்துகொள்ளட்டும். இல்லை விடுதலை செய்தாலும் செய்யட்டும் ஆனால் முறையான விசாரணை நடைபெற வேண்டும்.” என்றார்.
மேலும், மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த கருத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார் தமிழிசை.