பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு காரணமான காங்கிரஸ் கட்சிக்கு பாரத் பந்த் நடத்த உரிமை இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாரத் பந்த் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி:
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், பாஜக தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. தமிழகத்தில் தேர்தல் வேலைகள் மற்றும் கட்சி வளர்ச்சிக்கு தலைமை நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்ததாக கூறினார்.
மேலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுவருவபவர்களின் விடுதலை குறித்து மாநில அரசு நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கதக்கது என்று தெரிவித்தார். இது தொடர்பாக குடியரசு தலைவர் சட்ட விதிகள் பொறுத்து முடிவு எடுப்பார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மேலும், தமிழகத்தில் மாநில அரசாக திமுக இருந்தபோது ஏன் இந்த 7 பேரின் விடுதலை குறித்த தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பிய தமிழிசை சவுந்தரராஜன், திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றும் கூறினார்.
நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் வட மாநிலங்களில் வன்முறை வெடித்தது
பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் காங்கிரஸ் தான் காரணம். எனவே பந்த் நடத்த எந்தவிதமான உரிமையும் எதிர் கட்சிகளுக்கு இல்லை என்றும், ஊழல் மட்டுமே விதைத்து சென்றது காங்கிரஸ் என தெரிவித்தார். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர மாநில அரசுகள் ஒத்துழைப்பு தர வேண்டும். திமுகவுக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக முற்பட்டதில்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.