மோடி, அமித்ஷா பற்றி சர்ச்சை பேச்சு: நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு
அவரின் பேச்சு ஒரு நல்ல விமர்சனத்திற்கு உட்பட்டதல்ல. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமையையும் தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் உள்ளது.
அவரின் பேச்சு ஒரு நல்ல விமர்சனத்திற்கு உட்பட்டதல்ல. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமையையும் தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் உள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு தொடர்பாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் குறித்த நெல்லை கண்ணன் பேச்சு தர்போது சர்ச்சையாகியுள்ளது. தமிழ் எழுத்தாளரான நெல்லை கண்ணன், சொற்பொழிவின் மூலம் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Advertisment
பாஜக கட்சியின் பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் நெல்லை கண்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில காவல்துறை இயக்குனருக்கு புகார் மனு அளித்துள்ளார். 'நெல்லை கண்ணன் பேச்சு தேசிய ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் தீங்கு வழிவகுக்கும் வகையில் பேசியுள்ளதாக கே.எஸ்.நரேந்திரன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜகவும் தமிழ் எழுத்தாளர் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை கோரி தனியாக போலீஸில் புகார் அளித்தது.
கூட்டத்தில், "குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு மூலகாரணம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தான் , முஸ்லிம்கள் ஏன் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் இன்னும் எதுவும் செய்யவில்லை" என்பது போல் நெல்லை கண்ணன் பேசியுள்ளார்.
இத்தகைய கருத்துக்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்றும், இது தெரிந்தே வன்முறையைத் தூண்டும் முயற்சி என்பதால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
அவரின் துஷ்பிரயோகமான பேச்சு ஒரு நல்ல விமர்சனத்திற்கு உட்பட்டதல்ல. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமையையும் தூண்டி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் உள்ளது என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நெல்லை கண்ணன் மீது குற்றம் செய்ய தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதல் உண்டாக்கும் வகையில் பேசுதல் என இந்திய தண்டனை சட்டம் 504,505,505(2) என மூன்று பிரிவின் கீழ் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.