கனவில் பாம்பு வருவதற்கு பரிகாரமாக ஜோதிடர் சொன்னதுபோல், நாகக் கோயிலுக்குச் சென்று, பாம்பிடம் நாக்கைக் காட்டிய விவசாயி, நாக்கில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் ஈரோடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த 54 வயது விவசாயி தனது கனவில் அடிக்கடி பாம்பு வந்ததால், பயந்துபோய் ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: வீடியோ: தென்னந் தோப்பில் புகுந்த மலைப் பாம்பு; கோவை வனத் துறையிடம் ஒப்படைப்பு
அந்த ஜோதிடர் ஒரு பாம்பு கோயிலுக்குச் சென்று, கெட்ட கனவுகளிலிருந்து விடுபட சில சடங்குகளைச் செய்ய பரிந்துரைத்துள்ளார். அதாவது, அந்த கோவிலில் பூசாரி ஒருவர் பாம்புகளை வளர்த்து வருகிறார். அந்த பாம்பு முன் நாக்கை நீட்டி பரிகாரம் செய்தால், கனவில் இனி பாம்பு வராது என்று தெரிவித்திருக்கிறார்.
ஜோதிடரின் ஆலோசனையின்படி, விவசாயி அந்தக் கோவிலுக்குச் சென்று, அந்த பூசாரியை சந்தித்துள்ளார். பூசாரி அவரை பாம்பு முன் அழைத்துச் சென்று பரிகாரம் செய்யச் சொல்லியுள்ளார். பரிகாரத்தின் முடிவில் விவசாயி பாம்பு முன் தனது நாக்கை மூன்று முறை நீட்டியபோது பாம்பு அவரைக் கடித்துள்ளது.
பாம்பு கடித்த பின் மயங்கி விழுந்தவரைக் கண்ட கோவில் பூசாரி உடனடியாக அவரது நாக்கை அறுத்து, பின்னர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து விவசாயியைக் காப்பாற்றியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil