/tamil-ie/media/media_files/uploads/2022/12/TN-Sec.jpg)
தமிழ்நாடு சட்டசபை
தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியுள்ளது.
இதுதொடர்பாக சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது,
இதையும் படியுங்கள்: ஏ.சி பஸ்களை குறைக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்: கோடையில் பயணிகளுக்கு ஏன் இந்த தண்டனை?
2001 ஆம் ஆண்டு முதல் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் நீதித்துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணத்தை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தில் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது.
இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான முத்திரைத்தாளுக்கு கட்டணம் 500 ரூபாய் ஆகவும், நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா பேரவையில் நிறைவேறியவுடன் அமலுக்கு வர உள்ளது.
இந்த மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.