தமிழக சுகாதாரத் துறைக்கு உடல்நலக்குறைவு என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் விமர்சித்துள்ளார்.
திமுக உறுப்பினர்கள் ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் திறமையின்மை மற்றும் தவறான நிர்வாகத்திற்கு அதிமுகவை குறை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் சாதனைகளுக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்ற சுகாதாரத் துறையை சர்ச்சைக்குரிய ஒன்றாக மாற்றியதற்காக திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை கண்டனம் தெரிவித்தார்.
சுகாதார சீர்கேடு நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் இது கண்டிக்கத்தக்க ஒன்று என்றும் தெரிவித்தார்.
திமுக உறுப்பினர்கள் ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் திறமையின்மை மற்றும் தவறான நிர்வாகத்திற்கு அதிமுகவை குறை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சுகாதாரத் துறையை நடத்த முடியாமல் திணறுவது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது. தற்போதைய ஆட்சியின் கீழ் உள்ள சுகாதாரத் துறை தங்கள் உயிரைக் காப்பாற்றுமா அல்லது ஆபத்தில் வைக்குமா என்று மக்கள் யோசிக்கிறார்கள்.
சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 17 வயது கால்பந்து வீராங்கனை இறந்ததது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடலூர் அரசு மருத்துவமனையில் ஒரு சிறுமிக்கு ரேபிஸ் தடுப்பூசி தவறாக செலுத்தப்பட்டது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்களையும் அறிக்கையில் எடப்பாடி பட்டியலிட்டுள்ளார்.
"தமிழக மக்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் மட்டுமல்ல, புத்திசாலித்தனமும் கூட" என்று கூறிய அவர், விரைவில் கொடுங்கோலர்களை அதிகார பீடத்திலிருந்து விரட்டியடிப்பார்கள் என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“