Tamilnadu latest news today : பாஜகவின் தேசிய ஜனநாயக் கூட்டணி மக்களவைத் தோ்தலில் 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடியின் இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் கலந்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் இன்று டெல்லி செல்கின்றனர்.
காந்தி, வாஜ்பாய், போர் நினைவுச் சின்னம் ஆகிய இடங்களில் பிரதமர் மோடி அஞ்சலி
Blog
Tamilnadu latest news today live: அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸ், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் டெல்லி பயணம்.
News today : மக்களவைத் தோ்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியான நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மேலும் பாஜக மட்டும் தனிக் கட்சியாக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் மத்திய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சி உறுப்பினா்களும் இடம் பெறுவாா்கள் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழையை வரவேற்க காத்திருக்கும் தமிழகம்!
இன்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளாா். பதவியேற்பு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த பாஜக சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணைஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.
Highlights
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ராஷ்டிரபதி பவன் வருகை.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் புறப்பட்டு சென்றனர்.
”ஆந்திர மக்களுக்கு சேவை செய்வதில் உங்கள் தந்தையின் வழிநடத்துதலை நீங்கள் பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன் ” என்று ஆந்திரா முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி நீடிக்க வலியுறுத்தி சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியயதாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிககள் 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் ஜூலை 2வது வாரத்தில் முடிய வாய்ப்பு எனவும் தகவல்.
கடவுள் ஆசிர்வாதத்தில் தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்க வேண்டும் - என்று ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் ஜெகன் மோகன் ரெட்டி இத்தகைய கருத்தை கூறியுள்ளார்.
துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும், தேனி தொகுதியின் எம்பியான ரவீந்தர்நாத் குமார் மத்திய அமைச்சராக தேர்வு ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து ரவீந்தர்நாத்துக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார் YSR காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திரா அரசியலில் கேம் சேஞ்சராக செயல்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜாவுக்கு மின்சாரத் துறை அமைச்சர் பதவி வழங்க இருப்பதாக தகவக் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சரவை உத்தேச பட்டியல் : அதிமுக ரவீந்திரநாத் குமார் அல்லது வைத்திலிங்கம், லோக்ஜன் சக்தி - ராம் விலாஸ் பாஸ்வான், சிவசேனா - அரவிந்த் சாவந்த், ஐக்கிய ஜனதா தளம் - ஆர்சிபி சிங், அகாலிதளம் - ஹர்சிம்ரத் பாதல் தேர்வு முறை குறித்து கடைசி நேர ஆலோசனை நடைப்பெற்று வருகிறது.
கூட்டணி கட்சிகளில் இருந்து ஒவ்வொரு கட்சியிலும் ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக சஞ்சய் ராவத் தகவல்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் விஜயவாடா புறப்பட்டனர்..
மோடி பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்காதது சந்தர்பவாதம் என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.