/tamil-ie/media/media_files/uploads/2019/10/mk-stalin.jpg)
Tamil Breaking News : சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் வீடு வீடாக பரிசோதனை அவசியம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கடந்த 24 மணிநேரத்தில் 4,776 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து, இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 303-க அதிகரித்தது. நாட்டில் குணம் அடைவோர் சதவிகிதம் 48.31சதவீதமாக உள்ளது. தற்போது, கொரோனா பாதிக்கப்பட்ட 1,01,497 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்போர் 2.80 சதவீதமாக உள்ளது.
வெளிநாட்டுத் தொழிலதிபர்கள், வெளிநாட்டு சுகாதார நிபுணர்கள், சுகாதார ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் டெக்னீசியன்கள், வெளிநாட்டு தொழில்நுணுக்க நிபுணர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகிய பிரிவின் கீழ் உள்ளவர்கள் இந்தியாவுக்கு வருவதை அனுமதிப்பதற்கான விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளில் உள்துறை அமைச்சகம் தளர்வை அறிவித்தது.
கொல்கத்தா துறைமுகத்தின் பெயரை சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today Updates: இந்தியா மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்
மால்கள், ஹோட்டல்கள், வழிபாட்டு தலங்களுக்கான வழிகாட்டுதல் முறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அனைத்து நுழைவு வாயில்களிலும் சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் வைக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது. அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் 7 கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. பணிக்காலத்தில் இறந்த செவிலியர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. மேலும், செவிலியர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரிக்கை ஏற்கபட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பாதிப்பை விட சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதை அரசு உணர்ந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்னையின் 5 மண்டலங்களைக் காப்பதில் அரசு முழுச் சிந்தனையையும் பயன்படுத்த வேண்டும் என்றும் சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த என்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை சென்னை காவல் துறையை சேர்ந்த 401 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் துறையை சேர்ந்த 140 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.
நடிகர்கள் டேனியல் பாலாஜி, ஜெயபிரகாஷ் நடித்துள்ள இணைய தள தொடர் காட்மேன். இந்த தொடர் வெளியாவதற்கு முன்பே முன்னோட்ட காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினரை கொச்சைப்படுத்துவதாக கொடுக்கப்பட்ட புகாரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இருவரும் ஜூன் 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் விசாரணைக்கு வராததால் காட்மேன் இயக்குனர், தயாரிப்பாளருக்கு 2-வது சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் 6-ம்தேதி காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு பொதுவார்டில் சிகிச்சை அளிக்க தொகுப்பு கட்டணமாக ரூ. 5,000-மும், அனைத்து வசதிகளுடன் கூடிய ஐசியூ தீவிர சிகிச்சை பிரிவுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீதம் படுக்கைகளை காப்பீடு திட்ட கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும்.
மேலும், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பயனாளிகள், எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை. முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் ஏற்கனவே பயனாளிகளாக உள்ள அனைவருக்கும் புதிய அறிவிப்பு பொருந்தும். முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் கட்டணத்தை அரசே செலுத்தும்.
- முதல்வர் பழனிசாமி
மணப்பாறை அருகே கள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செவிலியரின் குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை செவிலியருக்கு உறுதியானதை தொடர்ந்து, அவரது குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர்கள் வசிக்கும் தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளிப்பட்டி கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குகான ஹால்டிக்கெட் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.மேலும் இன்று பிற்பகல் முதல் பள்ளித்தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் ஹால் டிக்கெட் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பட அதிபர் கேயார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியேட்டர் திறந்தால், முதல் படமாக விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனோவின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், இந்த படம் வெளியானால் விஜய்க்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என கேயார் தெரிவித்துள்ளார் பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர்பாதுகாப்பை கருத்தில் கொண்டு முதலமைச்சர் முடிவு எடுக்க வேண்டும் என அவர் கேட்டக்கொண்டுள்ளார். மேலும், பட அதிபர்களுக்கான விதிக்கப்படும் 26 சதவீத ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு கேயார் வேண்டுகோள் விடுத்தள்ளார்.
ரயில் முன்பதிவு கட்டணங்களை திரும்ப பெற நாளை முதல் முன்பதிவு மையம் திறப்பு
சென்னையில் குறிப்பிட்ட முன்பதிவு மையங்கள் திறக்க முடிவு. கொரோனா காரணமாக ஜூன் 30 வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. கவுன்டர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். கவுன்டர்களில் முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்பப் பெற ரயில்வே ஏற்பாடு - தெற்கு ரயில்வே
சென்னையில் கொரோனா உள்ளவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும்
* தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காதவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர்
* தனிமைப்படுத்துதல் ரத்து என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறிய நிலையில் ராதாகிருஷ்ணன் விளக்கம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகன் தனது தாயுடன் போனில் பேசுவதில் என்ன பாதுகாப்பு பிரச்னை?
வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் சிறைக் கைதிகள் பேச விதிகள் அனுமதிக்கவில்லை - தமிழக அரசு
* முருகன் தொடர்பான வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது
- பேராசிரியர் சந்திரசேகரனை நியமித்ததை பாராட்டி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ரஜினிகாந்த் கடிதம்
.@rajnikanth@PonnaarrBJP நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி (@narendramodi) அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம்.
#EKBharatShreshthaBharatpic.twitter.com/GLetgCrAhq— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 4, 2020
வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து. வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் 15 % பேர் கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை. தேவையான அளவுக்கு படுக்கை வசதி உள்ளதால் அங்கு அனுமதிக்க முடிவு. கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்களை இனி அரசின் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு. கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் முகாமில் தங்கவைத்து வீட்டிற்கு அனுப்பப்படுவர் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் இனி அரசு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோதி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸனுடன் இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இருநாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி அரசு சிறப்பாக செயல்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் தேர்வுக்கான அனுமதிச் சீட்டைப் பெறலாம். http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அனுமதிச் சீட்டை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்யும் முறை
dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்
இணையதளத்தின் முகப்புப்பக்கத்தில், HALL TICKET என்ற பிரிவை தெரிவு செய்யவும்
பின்வரும் திரையில், தேர்வு எண்ணை பதிவிடவும்
அடுத்த கட்டத்தில் பிறந்த தேதியை பதிவிடவும்
பின் சப்மிட் பட்டனை அழுத்தவும்
பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் அறிகுறிகள் காட்டிய பின்பு, கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும், விவரங்களுக்கு: முதல் முறையாக நாட்டின் உயரிய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மதுரை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 5 லட்சத்தில் நல திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி பிரதமர் அவர்களால் பாராட்டு பெற்ற மாணவியை வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் சால்வை அணிவித்து பாராட்டினார்.#TamilNadu#Corona#StaySafe#COVID19#TN#Maduraipic.twitter.com/0f6j37rvFg
— AIR News Chennai (@airnews_Chennai) June 4, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 5 லட்சத்தில் நல திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி பிரதமர் அவர்களால் பாராட்டு பெற்ற மாணவியை வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் சால்வை அணிவித்து பாராட்டினார்
கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் யாரும் இல்லாமல் நடந்தது.#Corona#Temple#TamilNadu#COVID19#TN#Thiruchendurpic.twitter.com/eh5XH0V90w
— AIR News Chennai (@airnews_Chennai) June 4, 2020
கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் யாரும் இல்லாமல் நடந்தது.
சுகாதாரக் கட்டமைப்பைப் பொறுத்தவரை நாட்டில், தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மட்டும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள 952 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 166332 தனிப்படுக்கைகளும், 21,393 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும், பிராணவாயு உதவி கொண்ட 72762 படுக்கைகளும் உள்ளன. மேலும், கொரோனா சிகிச்சைக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட 2391 சுகாதார மையங்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 945 தனிப்படுக்கைகளும், 11027 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும், பிராணவாயு வசதிகொண்ட 46 ஆயிரத்து 575 படுக்கைகளும் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துமனையின் கட்டண விவரங்களை இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
பரிந்துரையில்,
லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் கட்டணம் - ரூ.2,31,820.
தீவிர சிகிச்சை பெறும் நோயாளிக்கு 17 நாட்கள் சிகிச்சை கட்டணம் - ரூ.4,31,411
சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றுக்கு தினமும் ரூ.9,600 வசூலிக்கலாம்.
புதுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழிலை தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி உமா மகேஸ்வரி நடைபெற்றது தொழில் பாதிப்பு அடைந்த தொழில் அதிபர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள் ஆகியோர்கள் அதிகாரிகளை அழைத்து ஆட்சியர் பேசினார் pic.twitter.com/kMbjGN7bIY
— AIR News Chennai (@airnews_Chennai) June 4, 2020
புதுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழிலை தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. தொழில் பாதிப்பு அடைந்த தொழில் அதிபர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள் ஆகியோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வந்தே பாரத் திட்டத்தின்கீழ் அமெரிக்கா, கனடாவுக்கு 75 விமானங்கள் இயக்கப்படுகிறது. ஜூன் 5-ஆம் தேதி முன்பதிவு தொடங்கும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
சமீபத்திய தகவல்:
பாதிப்பு எண்ணிக்கை 2,07,615லிருந்து 2,16,919ஆக அதிகரிப்பு
குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,303லிருந்து 1,04,107ஆக உயர்வு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,815லிருந்து 6,075ஆக அதிகரிப்பு
மருத்துவ கண்காணிப்பில் இருப்போர் 1,06,737 பேர்
கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம். மலப்புரத்தில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். வெடி பொருளை சாப்பிட வைத்து கொல்வது இந்திய கலாச்சாரம் அல்ல - என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
கடந்த 24 மணிநேரத்தில் 4,776 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து, இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 303-க அதிகரித்தது. நாட்டில் குணம் அடைவோர் சதவிகிதம் 48.31சதவீதமாக உள்ளது. தற்போது, கொரோனா பாதிக்கப்பட்ட 1,01,497 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்போர் 2.80 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருபத்தி ஐந்தாயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 208 ஆக உயர்ந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights