Advertisment

ஈஷா, காருண்யாவுக்கு எதிராக கோவையில் ஆர்ப்பாட்டம்: அணிவகுத்த சர்வ கட்சிகள்

யானை வழித்தட ஆக்கிரமிப்பு; ஈஷா மற்றும் காருண்யா நிறுவனங்களுக்கு எதிராக கோவையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

author-image
WebDesk
New Update
ஈஷா, காருண்யாவுக்கு எதிராக கோவையில் ஆர்ப்பாட்டம்: அணிவகுத்த சர்வ கட்சிகள்

யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள ஈஷா மற்றும் காருண்யா நிறுவனங்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலிருந்து விலக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பெரியாரீய, அம்பேத்கரீய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

Advertisment

publive-image

ஈஷா மற்றும் காருண்யா நிறுவனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனம் சார்ந்த யானை வழித்தடங்கள் அமைந்துள்ள நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள், இயற்கை ஆர்வலர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையும் படியுங்கள்: பொது வாழ்வில் பெண்கள் வளர உதவும்… வானதி சீனிவாசன் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்மிருதி இரானி பேச்சு

இந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலிருந்து விளக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

publive-image

வழக்கு எண் WP467/2022

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விலக்கு அளிக்கக்கூடாது, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விலக்கு அழிக்காமல் இருக்க உறுதியுடன் வாதாட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் டெஸ்ட் லிபெரேஷன், ஆதி தமிழர் பேரவை, மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலை கழகம், திராவிட தமிழர் கட்சி, மே 17 இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, சி.பி.ஐ எம் எல் ரெட் ஸ்டார், தமிழ் சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோவை ஆழாந்துறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

publive-image

publive-image

ஆர்ப்பாட்டத்தில் ஈஷா மற்றும் காருண்யா நிறுவனங்கள் கட்டியுள்ள கட்டிடங்கள் மீது மாநில அரசு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ஈஷா மையம் பழங்குடி மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலங்களை ஆக்கிரமித்துள்ளது, அவற்றை அவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும். ஒன்றிய அரசு பயிற்சி என்பதன் பெயரால் ஈஷா மையத்திற்கு வழங்கி வரும் மானியங்கள், உதவித்தொகைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நன்செய் நிலங்களை புன்செய் நிலங்களாக வருவாய் துறை மாற்றி தரக்கூடாது, தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்களை ஈஷா மையத்திற்கு குத்தகைக்கு விடக்கூடாது, குளங்களில் பழங்குடியின மக்கள் மீன்பிடிப்பதை தடுக்கக் கூடாது, ஒன்றிய அரசு பெரும் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை ஈஷா பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது, புகழ்பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் உள்ள மலையில், அதனை விட உயரத்தில் ஈஷா மையம் எந்த அடையாளத்தையும் ஏற்படுத்த அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment