tamil nadu weather report : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. வெப்பக்காடான தமிழகத்தில் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபனிப் புயலின் தாக்கத்தால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், புயல் பாதை மாறி ஒடிசா நோக்கி செல்கிறது. எனவே வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மழையை எதிர்பார்த்து மிகுந்த சந்தோஷத்தில் இருந்த தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், மக்களின் தாகத்தை தீர்க்க நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதே போல் வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சூறவாளி காற்றுடன் கனமழை பெய்தது.
அச்சுறுத்தும் ஃபனி.. 10 கோடி பேருக்கு அலெர்ட்!
ஈரோட்டில் பகல் நேரத்தில் 102 டிகிரி வெயில் பதிவான நிலையில் இரவு கனமழை வெளுத்து வாங்கியது.நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையில் மேட்டுப்பாளையம் மக்கள் குளிரில் நடுங்கியுள்ளன. திடீர் மழையால சுற்றுலா பயணிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழையின் அளவு குறித்து தமிழநாடு தேசிய மேலாண்மை பேரிடர் மீட்புக் படையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
#TamilNaduRainfall report for the last 24 hours on 1st May 2019 pic.twitter.com/xSwgXbEzhG
— TN SDMA (@tnsdma) 1 May 2019
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழக மாவட்டங்களில் பதிவான மழையின் அளவு.
அரியலூர் - 4 செ.மீ
சென்னை - 11 செ.மீ
கோயம்புத்தூர் - 14 செ.மீ
கடலுர் - 25 செ.மீ
தர்மதுரை - 15 செ.மீ
திண்டுக்கல் 10 செ.மீ
ஈரோடு -8 செ.மீ
காஞ்சிபுரம் - 14 செ.மீ
கன்னியாகுமரி - 16 செ.மீ
கரூர் - 12 செ.மீ
கிருஷ்ணகிரி - 12 செ.மீ
மதுரை - 20 செ.மீ
நாகப்பட்டினம் - 9 செ.மீ
நாமக்கல் - 10 செ.மீ
நீலகிரி - 17 செ.மீ
பெரம்பலூர் - 11 செ.மீ
புதுக்கோட்டை -25 செ.மீ
ராமநாதபுரம் - 16 செ.மீ
சேலம் - 15 செ.மீ
சிவகங்கை - 7 செ.மீ
தஞ்சாவூர் - 21 செ.மீ
தேனி - 12 செ.மீ
தூத்துக்குடி - 19 செ.மீ
திருச்சிராப்பள்ளி - 25 செ.மீ
திருநெல்வேலி - 13 செ.மீ
திரூப்பூர் - 9 செ.மீ
திருவள்ளூர் - 15 செ.மீ
திருவண்ணாமலை - 12 செ.மீ
திருவாரூர் - 9 செ.மீ
வேலூர் - 18 செ.மீ
விழுப்புரம் 42 செ.மீ
விருதுநகர் - 12 செ.மீ
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.