tamilnadu weather man post : காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வரும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம், 16ம் தேதி மதியம் 1 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி மற்றும் கோவை மாதவட்டங்களில் இன்று (16ம் தேதி) மற்றும் நாளை (17ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்பு
கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 18ம் தேதிக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 19 மற்றும் 20ம் தேதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு
மழைப்பதிவு
16ம் தேதி காலை 08.30 மணியளவில் முடிந்த 24மணிநேரத்தில் பதிவான மழையளவு
தாமரைப்பாக்கம் - 10 செ.மீ
போளூர் - 8 செ.மீ
ஆரணி - 7 செ.மீ
தாம்பரம் - 5 செ.மீ
கோத்தகிரி, புழல் - 4 செ.மீ
பூந்தமல்லி, தரமணி, திருப்பத்தூர் - 3 செ.மீ
சென்னை விமானநிலையம், செம்பரம்பாக்கம், அரக்கோணம், கொளப்பாக்கம், காவேரிப்பாக்கம், குடியாத்தம், கேளம்பாக்கம் - 2 செ.மீ
கேட்டி, பொன்னேரி, விருத்தாசலம், சோழவரம் - 1 செ.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பதிவு
சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இரவு பெய்த மழைக்கு தான் இன்று காலை முதலே உச்சி வெயில் மண்டையை பொளக்க தொடங்கி விட்டது. அவ்வளவு தான் மழையா? இனிமே இல்லையா? என ஏக்கத்துடன் கேட்கும் சென்னைவாசிகளுக்கு மழை குறித்த அப்டேட்டை தந்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
சென்னையில் நேற்று இரவு 8 மணிக்குத் தொடங்கிய மழையானது நள்ளிரவு வரை தொடர்ந்தது. அடையாறு, வேளச்சேரி, வடசென்னை பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
வெப்பச் சலனம் காரணமாக நேற்று பல இடங்களில் மழை பெய்ததாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், ஈரோடு, திண்டிவனம், தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tamil Nadu news today live updates
KTC Rain Update - 3rd spell on the way. Lets hope Northern suburbs gets rains this time. Its that sort of night with 3rd spell building up, though the storms are mature near Arakonnam, steering winds looks good and might sustain till Chennai. pic.twitter.com/JBsW1oN2Gr
— TamilNadu Weatherman (@praddy06) 15 July 2019
வானிலை குறித்த தனது தனிப்பட்ட ஆர்வத்தில் தகவல்களைச் சேகரித்து வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வானிலை குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில், “காற்று பலமாக வீசும். தூறலைத் தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்களுக்கு மழை பெய்யும். மழையை நேசியுங்கள். கடந்த இரண்டு நாட்கள் மழை வரவில்லை என்ற அதிருப்தியை இன்று தூக்கியெறியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். “மழை தற்போது தெற்குப் புறநகர் பகுதிகளான ஓஎம்ஆர், ஈசிஆருக்குத் திரும்பியுள்ளது." என கூறினார்.
அதனைத்தொடர்ந்து, அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு பதிவில், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு என குறிப்பிட்டிருக்கிறார். அதே போல், மேகமூட்டங்கள் மெதுவாக சென்னை பக்கம் நகர தொடங்கியுள்ளன. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரலாம். வேலூர்,திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு அதிக வாய்ப்பு. கன்னியாகுமரி, நீலகிரி போன்ற தென் மாவட்டங்களிலும் மழையை நிச்சயம் எதிர்நோக்கலாம்” என்று கூறியுள்ளார்.
read more.. சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை... இன்று இரவும் வான வேடிக்கை உண்டு...
நேற்று இரவு பெய்த கனமழையால், சென்னை மற்று அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதிவான மழையின் அளவை தமிழ்நாடு வெதர்மேன் விவரித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.