Tamil Nadu Weather Updates : தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கான மழை மற்றும் வெயில் நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மே.25 - கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேசமயம், உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியம் வெப்பநிலை அதிகரிக்கும்.
மேலும் படிக்க - Rain in Tamil Nadu: 'தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு' - இந்திய வானிலை மையம்
மே.26 - தமிழகத்தில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. 30-40 கி.மீ. வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும். உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியம் வெப்பநிலை அதிகரிக்கும்.
மே.27 - தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியம் வெப்பநிலை அதிகரிக்கும்.
மே.28 - வட மாவட்டங்களின் உள்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். காற்றின் வேகம் 40-50 கி.மீ. வேகத்தில் இருக்கும்.
மே.29 - வட மாவட்டங்களின் உள்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். காற்றின் வேகம் 40-50 கி.மீ. வேகத்தில் இருக்கும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மேகமூட்டம் காணப்படும். குறைந்த பட்சம் 29 டிகிரி செல்சியல் வெப்பநிலையும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் வெப்பநிலையும் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.