Advertisment

Rain in Tamil Nadu: தமிழகத்தில் கனமழை காத்திருக்கு! அடுத்த நான்கு நாட்களுக்கான வெயில், மழை நிலவரம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu weather rain in tamilnadu chennai weather, Chennai weather today Tamil Nadu southwest monsoon latest updates

tamilnadu weather rain in tamilnadu chennai weather

Tamil Nadu Weather Updates : தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கான மழை மற்றும் வெயில் நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisment

மே.25 - கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. 

அதேசமயம், உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியம் வெப்பநிலை அதிகரிக்கும்.

மேலும் படிக்க - Rain in Tamil Nadu: 'தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு' - இந்திய வானிலை மையம்

மே.26 - தமிழகத்தில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. 30-40 கி.மீ. வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும். உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியம் வெப்பநிலை அதிகரிக்கும்.

மே.27 - தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியம் வெப்பநிலை அதிகரிக்கும்.

மே.28 - வட மாவட்டங்களின் உள்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். காற்றின் வேகம் 40-50 கி.மீ. வேகத்தில் இருக்கும்.

மே.29 - வட மாவட்டங்களின் உள்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். காற்றின் வேகம் 40-50 கி.மீ. வேகத்தில் இருக்கும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மேகமூட்டம் காணப்படும். குறைந்த பட்சம் 29 டிகிரி செல்சியல் வெப்பநிலையும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் வெப்பநிலையும் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment