அரேபிய கடலில் உருவாகவுள்ள புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பருவமழை ஜூன் 9 அல்லது 10ம் தேதி தொடங்கலாம் (அதற்கு ஒரு நாள் முன்னதாக தொடங்குவதாக கூட அதிகாரப்பூர்வ ஏஜென்சி அறிவிக்கலாம்). கேரளா மற்றும் கர்நாடக கடலோர மற்றும் மலைத் தொடர் பகுதிகளில் ஜூன் 9ம் தேதியில் இருந்து கடும் மழையை எதிர்பார்க்கலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி, நெல்லை, கோவை, தேனி மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளும் நல்ல மழையைப் பெறும்.
மேலும் படிக்க - சென்னையை மட்டும் ஏமாற்றும் மழை! பின்னால் இருக்கும் பகீர் காரணத்தை போட்டுடைத்த சென்னை வெதர்மேன்
அரேபிய கடலில் புயல் உருவாவது குறித்து பயப்படத் தேவையில்லை. இந்திய கடல் பகுதிகளையோ அல்லது தமிழ்நாடு கடல் பகுதிகளையோ அது பாதிக்காது. அதுமட்டுமின்றி, அரேபிய கடலில் உருவாகக் கூடும் புயல், பருவமழையையும் பாதிக்காது.
கேரளாவைப் பொறுத்தவரை இந்த ஜூன் சிறப்பாக இருக்கப் போகிறது. ஆகஸ்ட் 2018ல் அவர்கள் சந்தித்த மிகப்பெரிய வெள்ளத்துக்கு பிறகு அங்கு நீண்ட வறண்ட வானிலையே நிலவியது. ஆனால், பருவமழையின் முதல் சுற்றில் வெள்ளம் குறித்து பயப்படத் தேவையில்லை. வெள்ளம் குறித்து யார் என்ன வதந்திகளை பரப்பினாலும், அதனை உதாசீனம் செய்து விடுங்கள். கேரளாவுக்கு இப்போது கண்டிப்பாக மழை வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.