போலீஸ் கான்ஸ்டபிள் பவித்ரா (வயது 22) செவ்வாய்க்கிழமை பிற்பகல் காமராஜர் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, டேங்கர் மோதியதில் இறந்தார். இதனைத் தொடர்ந்து லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். புதுப்பேட்டையிலுள்ள ஆயுத ரிசர்வ் பிரிவில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பவித்ரா பணியாற்றிக் கொண்டிருந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்
சாந்தோம் பகுதியில் நேற்று பணியில் இருந்தார். பணி முடிந்து அவர், காமராஜர் சாலை, பாரதி சாலை சந்திப்புப் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். காமராஜர் சாலைக்கு வலதுபக்கமாக பவித்ரா திரும்பினார். அப்போது மேடவாக்கத்திலிருந்து பாமாயில் ஏற்றிக்கொண்டு தண்டையார்பேட்டைக்கு லாரி ஒன்று சென்றது. பவித்ராவின் பைக், லாரியின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. அதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த பவித்ரா சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அதைப்பார்த்தவர்கள் சத்தம் போட்டனர். சிறிது தூரத்துக்குப்பிறகு லாரியை டிரைவர் நிறுத்தினார். தலையில் படுகாயமடைந்த பவித்ரா உயிருக்குப் போராடினார். தகவலறிந்த போலீஸார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் பவித்ராவின் சடலம், ஓமந்தூரார் சிறப்பு அரசு மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர் (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
மிஸ் பண்ணாதீங்க… இப்போதும் விண்ணப்பிக்கலாம்: வருடம் ரூ6000 மத்திய அரசு உதவி
பவித்ராவின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம், செட்டியார் கல்லூரணி, ராமசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர். 2017-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். சென்னையில் விடுதியில் தங்கி வேலை செய்து வந்த பவித்ராவுக்கு 3 தங்கைகள் உள்ளனர். அவர்களது படிப்பு செலவோடு, குடும்ப சுமையையும் பவித்ரா சுமந்து வந்தது தெரிய வந்துள்ளது.