/tamil-ie/media/media_files/uploads/2020/05/tasmac.jpg)
TASMAC shops will not be opened in Chennai Metro
TASMAC shops will not be opened in Chennai Metro : சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க : கொரோனாவால் நிரம்பிய மருத்துவமனைகள்: பராமரிப்பு மையங்களுக்கு மாற்றப்படும் நோயாளிகள்
சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 7ம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, தமிழக அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தலைவர்கள் தங்களின் கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க : சிறப்பு கொரோனா வரி: டெல்லியில் மதுபானம் விலை 70% உயர்வு
தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக்குகளில் போதுமான சமூக இடைவெளி பின்பற்றுவதற்கான வசதிகள் அற்று தான் இருக்கிறது. எனவே இந்த ஆலோசனையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : அம்மாடியோவ்… இப்டியே போனா நாடு தாங்காது! ரூ. 52, 841-க்கு மதுவாங்கிய பெங்களூரு நபர்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.