Advertisment

தைப்பூச தினத்தில் ஜோதி தரிசனத்தைக் காண வடலூருக்கு படையெடுக்கும் பக்தர்கள்!

வள்ளலார் முக்தி அடைந்த பூச நட்சத்திரத்தன்று மாதந்தோறும் சத்திய ஞானசபையில் திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vadalur Vallalar Jyothi

Vadalur Vallalar Jyothi

இந்துக்கள் பின்பற்றும் முக்கிய நாட்களுள் தைப்பூசமும் ஒன்று. தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த இந்த தைப்பூச தினத்தை மலேசியா உள்ளிட்ட வெளிநாடு வாழ் முருகன் பக்தர்களும் விமர்சையாகக் கொண்டாடுவார்கள். அதன் படி இந்த ஆண்டின் தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முருகன் மற்றும் சிவன் கோயில்களில் சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். அதில் பக்தர்கள் கலந்துக் கொண்டு, முருகனின் அருளை பெற்று செல்வார்கள். தவிர, வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழாவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

Advertisment

ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!

இந்தியா vs நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி லைவ்

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். வள்ளலார் என போற்றப்பட்ட அவர், திருவருட்பா எழுதினார். இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவிய அவர், ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தர்மச்சாலையையும் நிறுவினார். அன்று முதல் இன்று வரை அங்கே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

Rasi Palan 8th February 2020: இன்றைய ராசிபலன்

வள்ளலார் முக்தி அடைந்த பூச நட்சத்திரத்தன்று மாதந்தோறும் சத்திய ஞானசபையில் திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசமும் அங்கு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 149-வது தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத்தை முன்னிட்டு இன்று ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி இந்த ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment