கட்சித் தலைவர் தலைமறைவு: பின்னணியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி?

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவராக திருச்சியை சேர்ந்த பத்மாநாபன் என்கிற ராஜா நியமிக்கப்பட்டிருந்தார்.

Thalapathy Vijay
விஜய்

விஜய் மக்கள் இயக்கத்தை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், அண்மையில் அரசியல் கட்சியாக பதிவு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய், தனது அமைப்புக்கும் தந்தை தொடங்கிய அரசியல் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனது ரசிகர்கள் அக்கட்சியில் சேர வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.

பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிக்கை

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவராக திருச்சியை சேர்ந்த பத்மாநாபன் என்கிற ராஜா நியமிக்கப்பட்டிருந்தார். செயலாளராக எஸ்.ஏ.சி-யும், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபாவும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இதில் தனக்கு உடன்பாடில்லை என அக்கட்சியிலிருந்து விஜய்யின் தாய் ஷோபா உடனடியாக விலகினார். இந்நிலையில் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜா, பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தன்னை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவராக அறிவித்ததில் இருந்து தனக்கு பல்வேறு வகையில் பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது என்றும், குறிப்பாக தன் மீது எந்த வழக்கும் இல்லாத நிலையில் காவல்துறையினர் தன்னை கைது செய்ய முயற்சி செய்வதாகவும், தெரிவித்துள்ளார்.

Thalapathy Vijay, RK Raja Trichy
குடும்பத்தினருடன் ராஜா

’சூரரைப் போற்று சொல்லப்பட வேண்டிய கதை’ – மனம் திறந்த சூர்யா!

அதோடு, விஜய் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளராக உள்ள புஷி ஆனந்தின் தூண்டுதலின் பேரில் போலீசார் தன்னை தேடுவதாகவும், தனக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அதற்கு காரணம் புஷி ஆனந்த் தான் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thalapathy vijay party state leader raja sa chandra sekar

Next Story
எந்தெந்த ஊர்களில் மழை? வானிலை அறிக்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com