scorecardresearch

கருணாநிதி, ஸ்டாலின் பற்றி அவதூறு: சென்னை நபரை கைது செய்த தஞ்சை போலீஸ்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறு பதிவு; சென்னையைச் சேர்ந்த ஜான் ரவியை கைது செய்த தஞ்சாவூர் போலீஸ்

ARREST-1-5-3
கோவை; வடமாநில தொழிலாளி கொலை.. கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக ட்வீட் செய்த சென்னையைச் சேர்ந்த ஜான் ரவி என்பவரை தஞ்சாவூர் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜான் ரவி சமூக ஊடகங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். பா.ஜ.க ஆதரவாளரான ஜான் ரவி தி.மு.க அரசை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

இதையும் படியுங்கள்: டி.ஜி.பி-யை சந்தித்த திருமாவளவன்: அண்ணாமலை மீது புகார்

இந்தநிலையில், பிப்ரவரி 21 அன்று ஒரு ட்வீட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பதிவிட்டார். இதனையடுத்து ஜான் ரவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள குருச்சியைச் சேர்ந்த தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜசேகர் பந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பந்தநல்லூர் போலீசார் ஜான் ரவியை கைது செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Thanjavur police arrest chennai man for defame cm stalin

Best of Express