சென்னை - மதுரை இடையேயான, அதிவேக சொகுசு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை ஜனவரி 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் துவக்கி வைக்க உள்ளார்.
சென்னை எழும்பூர் - மதுரை இடையே, அதிநவீன தேஜஸ் ரயில் சேவை, கடந்த டிசம்பர், இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளதாக, தகவல் வெளியானது. ஆனாலும், துவக்கப்படவில்லை. இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக, கேரளா மாநிலம், திருச்சூருக்கு வரும் 27ம் தேதி பிரதமர் மோடி வரவிருக்கிறார்.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்கம்
அன்று, தமிழகத்தில், மதுரையில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும், சென்னை - மதுரை இடையேயான, அதிவேக, தேஜஸ் ரயில் போக்குவரத்து துவக்க விழாவும், அன்றே நடத்தப்பட உள்ளது.
இந்த ரயில் குறித்த பிற விவரங்களுக்கு : அலுங்காம குலுங்காம மதுரை போகணுமா? இதோ வந்தாச்சு சொகுசு ரயில்
இந்த விழாக்களில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது, தேஜஸ் ரயிலின் இயக்கத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடக்கி வைக்கிறார். மேலும் சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையேயான, மெட்ரோ ரயில் போக்குவரத்தையும் துவக்கி வைக்கிறார்.