’மனுஸ்மிரிதி சட்ட புத்தகம் அல்ல’ திருமாவளவன் மீதான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்!

”இங்கு அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது” என்று நீதிபதிகள் எம். சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் கூறினர். 

By: November 10, 2020, 10:33:29 AM

மனுஸ்மிருதி ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே படிக்க வேண்டிய ஒரு சட்ட புத்தகம் அல்ல. இது 2,000 ஆண்டுகள் பழமையான நூல். இதை விளக்க முடியும் என்ற, சென்னை உயர் நீதிமன்றம், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவனை நாடாளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்ய மறுத்துவிட்டது.

இவ்ளோ நன்மை இருக்கு… இஞ்சித் துவையல் இப்படி செய்து பாருங்க!

“திருமாவளவன் மனுஸ்மிருதியை தனது வழியில் விளக்கியுள்ளார். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இங்கு அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது” என்று நீதிபதிகள் எம். சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் கூறினர்.

“சட்ட ரீதியான ஏற்பாட்டின் மீறல் என்றால் என்ன? நெறிமுறைகள் சட்டரீதியானவை அல்ல. அதை விதிக்க முடியாது” என்று நீதிபதிகள் மனுதாரரின் ஆலோசகர் ஆர்.சி.பால் கனகராஜிடம் கேட்டனர்.

சிதம்பரம் தொகுதி எம்.பி.யான திருமாவளவன், பெண்களுக்கு எதிராக மோசமான கருத்துக்களை தெரிவித்ததாகவும், எம்.பி.யாக பதவியேற்றபோது அவர் எடுத்த சத்தியப்பிரமாணத்திற்கு எதிரான மனுஸ்மிருதியை அவர் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், பொது நலன் ரிட் மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.

மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லை என வாதிட்ட பால் கனகராஜ், ஆனால் எம்.பி. அதற்கு தடை கோருகிறார், என்றார். சட்டம் ஒழுங்கு மாநிலத்தின் முக்கிய விஷயமாகும் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், “தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் செயல்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நாங்கள் என்ன செய்ய முடியும்? அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. இது ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டால், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்” என்று நீதிமன்றம் கூறியது.

அகன்ற திரை… பெரிய பேட்டரி… குறைந்த விலை: சாம்சங் F41 மாஜிக்

மனுதாரர் கூற்றுப்படி, செப்டம்பர் மாதம் திருமவளவன் ஐரோப்பிய ஒன்றிய பெரியார் அம்பேத்கர் தோழர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஒரு வெபினாரில் உரையாற்றினார். அதில் பெரியார் மற்றும் இந்திய அரசியல் குறித்து உரை நிகழ்த்தினார். இது உலகளாவிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டிருந்தது. இதன் வீடியோக்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டன.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Thirumavalavan manusmriti not a law book chennai high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X