தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ வழக்கு விசாரனையை ஏன் சிபிஐ யிடம் ஒப்படைக்க உத்தரவிட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசிடம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை, சம்மந்தப்பட்ட காவல் துறையின் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கை நீதிமன்றம் கண்கானிப்பில் சிறப்பு புலான்வு விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி டி ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரனைக்கு வந்தது. அதில் சிபிஐ விசாரணை கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் டிஜிபி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்ப்பட்டது. அந்த பதில் மனுவில், ‘‘கடந்த மே 22ம் தேதி பனிமய மாதா கோவில் திரண்ட கிராமத்தினர் 20 ஆயிரம் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுப்பட்டனர். இந்த கூட்டத்தை கலைக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தது. இதனிடையே இன்னொரு பிரிவினர் ஸ்டெர்லைட் குடியிருப்புக்குள் நுழைந்து வாகனங்களுக்கு தீயீட்டனர்.
அங்கிருந்த 150 குடும்பத்தினருக்கு உயிருக்கு ஆபத்தான நிலை உருவானது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 277 ஊழியர்களை மீட்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுப்பட வேண்டிய நிலை உருவானது. ஏராளமான பொதுச்சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
தூத்துக்குடி பொதுப்பணி துறை செயற்பொறியாளரின் மதீப்பீட்டின் படி 28.12 லட்சம் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. போலிஸ் வாகனம், பூத்கள், டாஸ்மாக் கடைகள் கண்கானிப்பு கேமராக்கள் உட்பட 331 சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. 15 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிலானவை. தூத்துக்குடி காவல்துறையின் முன்னாள் எஸ் பி மகேந்திரன் கூட இதில் தாக்கப்பட்டு காயமடைந்தார். 259 பேருக்கு எதிராக 235 வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. மேலும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் சிபிசிஐடி மாற்றம் செய்யபட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை நியாயனான முறையில் நடைபெற்று வருகின்றது. எனவே சிபிஐ விசாரணைக்கு தேவையில்லை. துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கபட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 13 பேர்க்கு அரசு வேலை வழங்குவதாக அறிவிக்கபட்டுள்ளது. எனவே சிபிஐ விசாரணை கோரி சீமான் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கூறியிருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஏன் சிபிஐ விசாரணை நடத்த கூடாது மீண்டும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்வதாகவும், வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்வதாகவும் அனுமதி கோரப்பட்டது.
இதை கேட்ட தலைமை நீதிபதி துப்பாக்கி சூடு சம்பந்தமாக அனைத்து ஆவணங்களையும், விடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை என்ற பெயரில் வீடுகளுக்குள் நுழைந்து காவல்துறையினர் பொதுமக்களை துன்புறுத்துவதாக தெரிவித்தார். அதை கேட்ட நீதிபதிகள் காவல்துறையின் விசாரணையில் நீதிமன்றம் தலையிடாது. மேலும் யார் சட்டத்தை மீறியிருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவான புகார்களுக்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என்றனர்.
மேலும் மதுரை கிளையில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் எற்கனவே விசாரிக்கப்பட்டு இடைக்கால உத்தரவுகள் பிறபிக்கப்பட்டதால் சென்னைக்கு மாற்றம் செய்ய முடியாது என்பதையும் தெரிவித்தனர். சிபிஐ விசாரணை கோரிய இந்த வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை 9 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதே கேள்வியை சென்னை உயர்நீதிமன்றம் முன்பு எழுப்பியதை படிக்க