scorecardresearch

’துணிவு’ படத்தின் இரவு ஒரு மணி காட்சி ரத்து; புதுச்சேரியில் தியேட்டர் கண்ணாடிகளை உடைத்த ரசிகர்கள்

துணிவு படம் ஒரு மணி காட்சிக்கு பதிலாக விடியற்காலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும் என திரையரங்கு நிர்வாகம் கூறியது. ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கம் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தனர்

’துணிவு’ படத்தின் இரவு ஒரு மணி காட்சி ரத்து; புதுச்சேரியில் தியேட்டர் கண்ணாடிகளை உடைத்த ரசிகர்கள்

புதுச்சேரியில் அஜித், விஜய் நடித்த படங்கள் ஓடும் தியேட்டர்கள் மீது இன்று விடியற்காலை கல் வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

நடிகர் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய திரைப்படங்கள் புதன்கிழமை அதிகாலை முதல் திரையிடப்பட்டுள்ளது. முன்னதாக விஜய், அஜித் ரசிகர்கள் தங்கள் பலத்தை காண்பிக்கும் விதமாக புதுச்சேரியில் பிரம்மாண்டமான பேனர்கள் வைத்துள்ளனர். புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள முருகா தியேட்டரில் 2 படங்களும் மாறி மாறி திரையிடப்பட்டிருக்கிறது. இந்த தியேட்டரில் விஜய், அஜித் ஆகிய இரண்டு பேரின் ரசிகர்களும் பேனர்கள் வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: Thunivu Movie Review : இதுதான் பொங்கல் பரிசு: இதுதான் தல ஆட்டம்: ரசிகர்கள் கொண்டாட்டம்

நள்ளிரவு ஒரு மணி அளவில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் திரைப்படம் திரையிடப்படும் என அறிவித்திருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் இரவு 10 மணி முதலே தியேட்டர் முன்பு குவிந்து ஆட்டம்பாட்டம், பால் அபிஷேகம் மற்றும் குத்தாட்டம் போட்டு கொண்டிருந்தனர்.

அப்போது தியேட்டர் நிர்வாகம் சார்பில் திடீரென அஜித் நடித்த துணிவு படத்தின் இரவு ஒரு மணி காட்சி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகத்தால் ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஒரு மணி காட்சிக்கு பதிலாக விடியற்காலை 4 மணிக்கு இந்த காட்சி ஒளிபரப்பாகும் என திரையரங்கு நிர்வாகம் கூறியது.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கம் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணாடி உடைக்கப்பட்டதால் ரசிகர்கள் ஓட துவங்கினர். இது குறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அந்த தியேட்டர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Thunivu movie show cancel fans broke theatre glasses at puducherry

Best of Express