வண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு

துசார் காந்தி: மக்களின் மனதில் விஷமத்தைக் கலந்துவிட்டனர், இது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒன்று,அந்த விஷமத்தை நாம் எதிர்க்க வேண்டும்

By: February 17, 2020, 12:47:48 PM

பாசிசத்திற்கு எதிரான மக்கள் தளம் ( People’s Platform Against Fascism (PPAF) என்ற அமைப்பு குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் 2.0 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துஷார் காந்தி சிஏஏ, என்பிஆர், என்சிஆர் இன்டியாவிற்கான  உண்மையான ஆபத்து என்று தெரிவித்தார்.

துசார் காந்தி  மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனும் , காந்தி அடிகளின் மகன் மணிலால் காந்தியின் பேரனும் , அருண் காந்தியின் மகனும் ஆவார்.

குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போராட்டம் இஸ்லாமியர்களுக்கானது மட்டுமல்ல என்று கூறிய துசார் காந்தி, கட்டுக்கடங்காத வெறுப்புகள் சமூகத்திற்குள் உருவாகுவதை நினைத்து கவலை கொண்டார்.

சென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை: ஷிப்ட் முறையில் தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்தம் சட்டம் அதிகாரபூர்வமாக மதத்தின் பெயரால் பாகுபாடை உறுதிபடுத்துகிறது. இதனால் தேசிய மக்கள் பதிவேடு,தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற செயல்முறைகள் உண்மையான ஆபத்தாக அமைந்துவிடும் என்றார்.


தான் இந்திய நாட்டின் குடிமகன் என்பதை நிரூபிக்க  ஒவ்வொரு மக்களும் அரசு அதிகாரிகள் பின்பு ஓட வேண்டும். ஒவ்வொரு அரசு அதிகாரியையும் திருப்தி படுத்த வேண்டும். யோசித்து பாருங்கள்……. இந்த செயல்முறையால் யார் பாதிக்கப் படுவார்கள்? பணக்கார்களா? இல்லை  கிராமப்புறத்தில் வாழும் ஏழை மக்களும், படிக்காத பாமர மக்களும் தான்? என்று எடுத்துரைத்தார்.

மனுஷ்ய புத்திரன் கவிதை: ஒன்றல்ல நூறு அடிகள் விழுந்துவிட்டன, வீதிக்கு வாங்க ரஜினி

இது இஸ்லாமியர்களுக்கான போராட்டமா? இல்லை ஒவ்வொரு குடிமக்களின் அடிப்படை போராட்டம் என்று துசார் காந்தி தெரிவித்தார். எனவே, குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கான போராட்டத்தை கிராம புறங்களில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் துசார் காந்தி தெரிவித்தார்.

அவர்கள் (குறிப்பாக எந்த பெயரையும் சொல்லாமல்) இந்திய மக்களின் ஒற்றுமையை எவ்வளவு நுட்பமாகப் பிரிக்கின்றனர் என்பதை பாருங்கள்?  நாட்டில் நடந்து வரும் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தைக் கூட இந்து மக்களுக்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டம் என்ற கோட்பாட்டில் சித்தரித்து வருகின்றனர்.

மக்களின் மனதில் விஷமத்தைக் கலந்துவிட்டனர், “இது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒன்று, அந்த விஷமத்தை நாம் எதிர்க்க வேண்டும் “என்று தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Thusar gandhi joined caa protest in chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X