Tirunelveli prime care centers were provided cloth masks : கொரோனாவுக்கான தடுப்பு பணிகளில் மருத்துவர்கள், காவல்துறையினர் என பலதரப்பட்ட மக்கள் முன்னணியில் நின்று போரிட்டு வருகின்றனர். பல்வேறு நாடுகளில் மூலப்பொருட்கள் பற்றாக்குறையால், குப்பை சேகரிக்கும் பைகளில் பாதுகாப்பு உடைகள் செய்து பயன்படுத்திய அவல நிலையும் ஏற்பட்டது.
மேலும் படிக்க : பாதுகாப்பு ஆடைகள் இல்லை… குப்பை பைகளை பயன்படுத்தும் ஸ்பெயின் டாக்டர்கள்
கொரோனா நோய் தமிழகத்தில் தீவிரமாக பரவிவருகிறது. போதுமான பாதுகாப்பு கவசங்கள் உடைகள் இல்லாமல் மருத்துவத்துறை மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் தவித்து வருகின்றனர் என்ற புகார்கள் ஆங்காங்கே எழுந்து வருகிறது.
மேலும் படிக்க : கிருமிநாசினியை உடலில் செலுத்தினால் கொரோனா அழியுமா? ட்ரெம்ப் ; அதிர்ச்சியில் லைசால்
இந்நிலையில் நெல்லையில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கு துணியாலான முக கவசங்கள் வழங்கபட்டுள்ளது. அதன் புகைபடத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கதில் பதிவிட்ட தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர் செந்தில்குமார் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் ஆகியோரை டேக் செய்து மருத்துவ பணியாளர்களுக்கான என்.95 மற்றும் மூன்று அடுக்கு முக கவசங்கள் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மருத்துவ ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என்று அவர் இந்த ட்வீட்டினை பதிவு செய்துள்ளார். மக்களை காக்க தங்களின் உயிர்களை பணயம் வைக்கும் மருத்துவர்களுக்கு போதுமான வசதிகளை செய்து தர வேண்டும் என பலமுறை தன்னுடைய கருத்தினை பதிவு செய்துள்ளார் தருமபுரி எம்.பி. செந்தில் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.