திருப்பூரில் உள்ள பிரீமியர் நைட்ஸ் அப்பரல் லிமிடெட் (ஆடை நிறுவனம்) நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் பெண்களுக்கு உதவுமாறு அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூரில் பணிபுரியும் 200 பெண்களுக்கும் உடனடியாக உதவுமாறு கேட்டுக் கொண்ட சோரன், நிறுவனத்தின் முதலாளிகள் பெண்களை மனிதாபிமானமற்ற முறையில் கொடுமைப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
கொரோனா நிவாரணம்: கிள்ளிக் கொடுக்கிறதா கோலிவுட்?
ஜார்கண்ட் சாய்பாசாவைச் சேர்ந்த அந்த பெண்கள், திருப்பூரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வலுக்கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்படுவதாக ஜார்ஜண்ட் முதல்வருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு தாக்கப்படுவதாகவும், ஆகையால் அவர்களுக்கு உடனடியாக உதவும்படியும், தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டார்.
சாய்பாசா கமிஷனரையும் டேக் செய்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ட்விட்டரில் தகவல் கொடுத்திருந்தார், ஹேமந்த் சோரன். அதற்கு பதிலளித்த, தமிழக முதல்வர், 'ஜார்கண்ட் பெண்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எங்கள் குழு உடனடியாக அவர்களை தொடர்பு கொள்ளும். இத்தகைய நடத்தைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என பதிலளித்திருந்தார். அதோடு, இந்த விவகாரத்தை உடனடியாக சரிசெய்யும்படி, திருப்பூர் கலெக்டர் விஜய் கார்த்திகேயனுக்கும் உத்தரவிடப்பட்டது.
சற்று நேரத்தில் ட்விட்டரில் முதல்வருக்கு பதிலளித்த, திருப்பூர் மாவட்ட ஆட்சியர், விஜய் கார்த்திகேயன், ”தமிழக முதல்வரின் வழிமுறைகளை உடனடியாக பின்பற்றினோம். ஏற்கனவே வருவாய் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வார்டனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். விவகாரத்தை விசாரித்து பெண்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கியுள்ளோம்” என்றார். தற்போது அந்த 200 பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.