சட்டப்பேரவை கூட்டம்: முதல்வர் உரையில் திருப்தியில்லை, திமுக வெளிநடப்பு

எந்த விவாதமும் நடத்தாமல், சபா நாயகர் தீர்மானத்தின் கோரிக்கையை நிராகரித்ததை ஒரு போதும் ஏற்க முடியாது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

MK Stalin walk out, TN Assembly
MK Stalin walk out, TN Assembly

CM Palanisamy Statement on CAA Protest: இன்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நேரமில்லா நேரத்தின் போது, குடியுரிமை திருத்தம் சட்டம் எதிராக நடைபெற்ற வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் போலிஸ் தடியடி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். முதல்வர் பதிலில் திருப்தி இல்லை என்று திமுகவும் பிற எதிர்க் கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை: கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை பழைய வண்ணாரப்பேட்டையில்  நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு தடுப்பை அமைத்து  காவல்துறையினர் அரணாக  இருந்தனர். அப்போது வெளியில் இருந்து வந்த போராட்டக்காரர்கள் காவல்துறையின் அமைதி தடுப்பை தள்ளிவிட்டு சாலை மறியல் செய்ய முற்பட்டனர். கைது செய்ய முற்பட்ட காவல்துறையினர் மீது கற்கள், சோடா பாட்டில்கள் மற்றும் செருப்புகளை போராட்டக்கார்கள்  வீசினார்கள்.

இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்கார்களை சுமார் 82 பேரை கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றிய போது, பேருந்துக்குள் ஏறியவர்கள் ரகளையில் ஈடுபட்டு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர்.

நூலகத்தை பற்றிய மாற்று சிந்தனைகள் தேவை

மேற்படி போராட்டக்காரர்கள், தண்டையார்பேட்டையில் உள்ள வாணிமகால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஆறு தெருக்கள் தாண்டி வாழ்ந்து வந்த 70 வயது நிரம்பிய முதியவர் நோயின் காரணமாக இயற்கை மரணம் அடைந்தார். ஆனால், அவர் காவல் துறையின் தடியடியில் இறந்தார் என உண்மைக்கு மாறான வதந்தி பரப்பப்பட்டது. அந்த வதந்தியை நம்பி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நேற்று எனது இல்லத்தில் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களை சந்தித்தேன். சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக அதிமுக அரசு அமைந்திருக்கும் என்பதை எடுத்துரைத்தேன். தற்போதும்,அந்தப் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சில விஷம சக்திகள் இதற்கு பின்னணியில் இருந்து செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்ப்பதற்காக அங்கே பாதுக்காப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது உரையில் கூறினார்.

திமுக வெளிநடப்பு: பழைய வண்ணாரப்பேட்டையில் பொது மக்கள் மீது காவல் துரையின் வன்முறை செயல் குறித்த முதல்வரின் உரையில் திருப்தியில்லை என்று திமுகவும், இதர எதிர் கட்சிகளும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ” குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சபா நாயகர் நிராகரித்து விட்டார். எந்த விவாதமும் நடத்தாமல், சபா நாயகர் தீர்மானத்தின் கோரிக்கையை நிராகரித்ததை ஒரு போதும் ஏற்க முடியாது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn assembly cm palanisamy statement on chennai caa protest dmk walk out

Next Story
வண்ணாரப்பேட்டை ‘ஷாகின் பாக்’ : மகாத்மா காந்தி கொள்ளுப் பேரன் பங்கேற்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express