No desk thumping : தமிழகத்தில் 16வது சட்டமன்ற தேர்தல்கள் நிறைவடைந்து திமுக ஆட்சி அமைத்தது. மே 7ம் தேதி முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க அவர் தலைமையில் அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள். இந்நிலையில் இன்று 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் துவங்கியது.
பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இன்று மாநில ஆளுநர் தன்னுடைய உரையை ஆற்றினார். 52 நிமிடங்களுக்கும் மேலாக பேரவையில் அவருடைய உரை நிகழ்த்தப்பட்டது. எப்போதும் ஆளுநர், ஆளுங்கட்சியை பாராட்டும் விதமாக பேசும் போது எதிர்கட்சி உறுப்பினர்கள் பலமாக மேசையை தட்டுவார்கள்.
ஸ்டாலினுக்கு ஆலோசனை கூற ரகுராம் ராஜன் உள்ளிட்ட 5 பொருளாதார நிபுணர் குழு: ஆளுநர் உரை ஹைலைட்ஸ்
ஆனால் இன்று திமுக ஆட்சி குறித்து ஆளுநர் பேசும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவரும் மேசையை தட்டவில்லை. 52 நிமிடங்கள் அனைவரும் மௌனமாக உரையை கேட்டுள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற கூட்டத் தொடரில் இருந்து இது மிகவும் வித்தியாசமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 24ம் தேதி அன்று சட்டமன்றத்தில் பதிலுரை வழங்குகிறார் முதலமைச்சர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil