TN Board HSE +2 Result 2019 Pass Percentage : இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 84.76% அரசுப் பள்ளிகளில் 100% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 1281 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதனால் மாணவ மாணவிகள் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகமும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
TN Board HSE +2 Result 2019 Pass Percentage : அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
திருவள்ளூர் - 76.14%
திருவாரூர் - 78.62%
வேலூர் - 79.31%
காரைக்கால் - 80.05 %
கிருஷ்ணகிரி - 80.29%
காஞ்சிபுரம் - 80.6%
கடலூர் - 80.85%
விழுப்புரம் - 81.15%
புதுச்சேரி - 81.21%
நாகை - 82.44%
திண்டுக்கல் - 83.62%
திருவண்ணாமலை - 83.95%
உதகை - 84.29%
அரியலூர் - 84.72%
தருமபுரி - 84.85%
சேலம் - 85.29%
மதுரை - 85.81%
தஞ்சை - 86.21%
தேனி - 87.39%
புதுக்கோட்டை - 87.43%
சென்னை - 87.54%
ராமநாதபுரம் - 88.09%
கோவை - 88.58%
திருச்சி - 88.6%
சிவகங்கை - 89.23%
தூத்துக்குடி - 89.36%
விருதுநகர் - 89.4%
திருநெல்வேலி - 89.8%
கரூர் - 90.57%
நாமக்கல் - 90.6%
திருப்பூர் - 91.51%
பெரம்பலூர் - 91.8%
ஈரோடு - 92.38%
கன்னியாகுமரி - 92.64%
அரசு பள்ளிகளில் 92.64% பேர் தேர்ச்சி பெற்று குமரி மாவட்ட மாணவ மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன. தமிழகத்தில் உள்ள 7,082 மேல்நிலைப்பள்ளிகளில், 1281 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது.
பாட வரிசைப்படி தேர்ச்சி விகிதம்
கணிதப் பாடப்பிரிவில் மாணாவர்கள் 96.25% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனை அடுத்து கணித அறிவியலில் 95.27% தேர்ச்சி பெற்றுள்ளனர். கணக்குப் பதிவியலில் 92.41% மாணவர்கள் தேற்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இயற்பியல் பாடப்பிரிவில் 93.89%, வேதியியல் பாடத்தில் 94.88% தேர்ச்சியும், உயிரியல் பாடப்பிரிவில் 96.05% தேர்ச்சியும், தாவிரவியலில் 89.98% தேர்ச்சியும் அடைந்துள்ளனர் மாணவர்கள்.
மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படுகிறது ?
நாளை முதல் 26ம் தேதி வரை மாணவர்கள் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 24 முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : Tamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி!
மாவட்ட ரீதியான தேர்ச்சி விகிதம்
திருப்பூர் - 95.37%
ஈரோடு - 95.23%
பெரம்பலூர் - 95.15%
கோவை - 95.01%
நாமக்கல் - 94.97%
கன்னியாகுமரி -94.81%
விருதுநகர் - 94.44%
திருநெல்வேலி - 94.41%
தூத்துக்குடி- 94.23%
கரூர்- 94.07%
சிவகங்கை - 93.81%
மதுரை - 93.64%
திருச்சி- 93.56%
சென்னை - 92.96%
தேனி - 92.54%
ராமநாதபுரம் - 92.03%
புதுச்சேரி - 91.22%
தஞ்சை - 91.05 %
உதகை - 90.67%
திண்டுக்கல் - 90.79%
சேலம் - 90.64%
புதுக்கோட்டை - 90.01%
காஞ்சிபுரம் - 89.09%
அரியலூர் - 89.68%
தருமபுரி - 89.62%
திருவள்ளூர் - 89.49%
கடலூர் - 88.45%
திருவண்ணாமலை - 88.03 %
நாகை - 87.45%
கிருஷ்ணகிரி - 86.79%
திருவாரூர் - 86.52%
விழுப்புரம் - 85. 85%
வேலூர் - 85.47%
காரைக்கால் - 84.47%
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.