ராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து ராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து இன்று பேசுகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவளித்தது. இதையடுத்து அவர்களின் விடுதலை பரிந்துரை தீர்மானத்தை அதிமுக சட்டபேரவையில் நிறைவேற்றியது. இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை குறித்து நேற்று அற்புதம்மாளை சந்தித்து பேசினார் ஆளுநர் புரோஹித். நேற்று நடந்த சந்திப்பில், பேரறிவாளன் உள்பட 7 பேரை […]

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து ராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து இன்று பேசுகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவளித்தது. இதையடுத்து அவர்களின் விடுதலை பரிந்துரை தீர்மானத்தை அதிமுக சட்டபேரவையில் நிறைவேற்றியது.

இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை குறித்து நேற்று அற்புதம்மாளை சந்தித்து பேசினார் ஆளுநர் புரோஹித். நேற்று நடந்த சந்திப்பில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோருவது குறித்து விரைவில் கவனிக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

அற்புதம்மாள் சந்திப்பு குறித்த செய்திக்கு :

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஏற்குமாறு வலியுறுத்தினேன் என்று அற்புதம்மாள் பேட்டியளித்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடன் சந்திப்பு :

1991ம் ஆண்டு நடந்த வெடிகுண்டு சம்பவத்தில், ராஜிவ் காந்தியுடன் சேர்த்து சுற்றி இருந்தவர்களும் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டோரின் உறவினர்கள் 7 பேர் விடுதலைக்கு எதிராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஆளுநர் புரோஹித் இன்று மதியம் 12 மணிக்கு சந்திப்பு நடத்துகிறார். இந்த சந்திப்பில், பேரறிவாளர் உட்பட 7 பேர் விடுதலை குறித்து உறவினர்கள் தரப்பு கருத்தும் கேட்கவுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn governor banwarilal purohit to meet family of demised during rajiv gandhi murder

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com