Advertisment

இதெல்லாம் தேவையா! ஹீலர் பாஸ்கர் மீது பாயும் நடவடிக்கை

COVID-19 Updates : கோவை மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், கோவிட் 19 வைரஸ் தொடர்பாக தவறான தகவலை பரப்புவதாக ஹீலர் பாஸ்கர் மீது மாவட்ட ஆட்சியர் கே ராஜாமணியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona Virus, Healer Baskar

Corona Virus, Healer Baskar

Corona Virus: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்திவரும் நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசு தீவிரமாக செயல்படுத்திவருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்ற வீடியோ மூலம் பிரபலமடைந்த ஹீலர் பாஸ்கர், தற்போது கொரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அந்த வீடியோவில், “இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதிதான் கொரோனா . நம்முடைய மக்கள் தொகையை குறைக்கவே இவ்வாறு பரப்புகின்றனர். அரசாங்கம் தான் பள்ளி, வணிக வளாகங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. நாம் நன்றாகத்தான் இருக்கிறோம். இலுமினாட்டிகள்தான் நம் அமைச்சர்களுக்கு எதை செய்யவேண்டும் என்கிற தகவலை தருகின்றனர்.

“கை சுத்திகரிப்பான் அவசியம் இல்லை; கைகளை சோப்பு போட்டு கழுவினாலே போதும்” - அமைச்சர் விஜயபாஸ்கர்

நோய் பாதிப்பு இல்லாதவர்களை கூட்டிச்சென்று ஊசி போட்டு கொலை செய்யப்போகின்றனர். இந்த வினாடியில் இருந்து அனைத்து அரசு அதிகாரிகளும் மேலதிகாரிகள் சொல்லும் விஷயத்தை செய்யக்கூடாது. நமக்கு நல்லது என்று தெரிந்தால் மட்டுமே செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தவறான தகவலை ஹீலர் பாஸ்கர் பரப்புகிறார் எனவும் அரசாங்க அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவதில் இருந்து தடுக்க முயற்சி செய்கிறார் எனவும் பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், தவறான தகவல்களை பரப்பும் இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், கோவிட் 19 வைரஸ் தொடர்பாக தவறான தகவலை பரப்புவதாக ஹீலர் பாஸ்கர் மீது மாவட்ட ஆட்சியர் கே ராஜாமணியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொடர்பாக பாஸ்கர் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதாக சுகாதாரத் துறை கூறுகிறது.

கொரோனா வைரஸ் : மாணவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் “சபாஷ்” டீச்சர்கள்!

இதற்கிடையில், ஆடியோ கிளிப்பை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாஸ்கரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வாய்ப்புள்ளது.

சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜி.ரமேஷ் குமார் கூறுகையில், "தவறான தகவல்களை பரப்புவதற்கும், பீதியை ஏற்படுத்துவதற்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.

தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 54, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் இது குற்றச் செயல் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பும் ஹீலர்பாஸ்கர் என்பவருக்கு எதிராக உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment