TN HSC Plus One Result 2018, TN 11th +1 Result 2018 Live Updates: தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு - 11-ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தொடர்பான ‘லைவ்’ செய்திகள் இங்கே :
TN HSC Plus One Result 2018 Live Updates: தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு 2018, கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 16 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் இன்று (மே 30) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகம் மூலமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருக்கின்றன.
தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு 2018 முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவ, மாணவிகள் பார்க்கலாம்! மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை பார்க்க, ஹால் டிக்கெட் தேவை!
TN HSC Plus One Result 2018: IN Tamil - Simple 4 steps to check your marks, click here
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான tnresults.nic.in என்ற பக்கத்தில் தேர்வு முடிவுகளை கல்வித்துறை வெளியிடுகிறது. பிளஸ் ஒன் தேர்வு முடிவுகளை அறிய மேற்படி இணையதளத்தில் TNDGE Class 11th Results 2018 அல்லது TNDGE HSC +1 Examination Results என்கிற ‘லிங்க்’கை கிளிக் செய்யவும். உங்கள் பதிவு எண்ணை அதில் பதிவு செய்யவும். பிறகு உங்கள் ரிசல்டை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
TN HSC Plus One Result 2018, TN 11th +1 Result 2018 Live Updates: தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு - 11-ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தொடர்பான ‘லைவ்’ செய்திகள் இங்கே
10:45AM : திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், ‘பல தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ப்ளஸ் ஒன் சேர்க்கையின்போது, பெற்றோர்களிடம் நீட் பயிற்சி என்ற பெயரில் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் கட்டணம் வசூலித்து வருகின்றன. மறுக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு சீட் மறுக்கப்படுகிறது.’ என குறிப்பிட்டிருக்கிறார்.
10:30 AM: தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வில் 61,369 பேர் 401 முதல் 425 வரை மதிப்பெண் பெற்றவர்கள். 48,560 பேர் 425 முதல் 450 வரை மதிப்பெண் பெற்றவர்கள். 30,380 பேர் 500 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்கள். 64,817 பேர் 451 முதல் 500 வரை மதிப்பெண் பெற்றவர்கள்.
10:00 AM : தமிழ்நாடு பிளஸ் ஒன் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் அச்சமடையத் தேவையில்லை. அவர்கள் மறு தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை 12-ம் வகுப்பை தொடரலாம் என கல்வித்துறை தெளிவு படுத்தியிருக்கிறது.
9:35 AM: தமிழ்நாடு பிளஸ் ஒன் பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் 97.3% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றது.
9:20 AM : பிளஸ் 1 பொதுத்தேர்வில் 188 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன!
9:15 AM: மொத்தமாக 91.3 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதில் மாணவிகள் 94.6 சதவீதம் தேர்ச்சியும், மாணவர்கள் 87.4 சதவீதம் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள்.
8.58 AM : எதிர்பார்த்த நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக பிளஸ் ஒன் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை வெளியிட்டது. 91.3 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
8:50 AM : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர்.
8:30 AM : வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வெழுதினர்.
8.15 AM: காலை 9.30 மணிக்கு அதிகாரபூர்வ இணையதளமான tnresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.