TN Local Body Election Result Updates: ஊராக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை இரவு வரை தொடரும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இநிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் ஏ.தரைக்குடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மூதாட்டி கா.தங்கவேலு(73) என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட 60 வாக்குகள் கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றார். இவர் மொத்தம் பதிவான 1049 வாக்குகளில் 661 வாக்குகள் பெற்றுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a34-300x223.jpg)
அத்கேபோல், காட்டிநாயக்கன்தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய் சந்தியா ராணி வெற்றி பெற்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a35-300x200.jpg)
ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய்சந்தியா ராணி, கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜெயசாரதி, ஏற்கனவே கே.என்.தொட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்த லைவ் அப்டேட்ஸ்களை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
தவிர, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய பெண் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் பஞ்சாயத்தில் அரசு ஊழியராக துப்புரவு பணி செய்து வந்தார் சரஸ்வதி. இவர் மக்கள் சேவையில் நாட்டம் ஏற்பட்டதால் கான்சாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எண்ணினார்.
இதற்காக தனது அரசுப் பணியை ராஜினாமா செய்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a36-300x168.jpg)
கடந்த முறையே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் கடந்த முறை அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் போனது. இதனால் தனது அரசு வேலையை பறிகொடுத்து ஏமாற்றத்தில் இருந்துவந்தார். அதன்பின்னர், சரஸ்வதி பஞ்சாயத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்தியாவில் முதல்முறை! திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி! - கனிமொழி பெருமிதம்
இருந்தபோதும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தனது ஆர்வத்தை குறைக்காமல் தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடட் நிலையில் கான்சாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரஸ்வதி 1113 வாக்குகள் வாங்கி 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.