இந்தியாவில் முதல்முறை! திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி! - கனிமொழி பெருமிதம்
Local Body Election Result Transgender Riya wins: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி பெற்றிருக்கிறார்
TN Local Body Election Result Updates 2019: நாமக்கல் மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றிப் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
Advertisment
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுவில் 14 வார்டுகள் உள்ளன. இதில் இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி எஸ்.சி. பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் 5,000 வாக்குகள் உள்ளன. கருவேப்பம்பட்டி ஊராட்சியை உள்ளடக்கிய இந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக திருநங்கை ரியாவை (30) மாவட்ட திமுக தேர்வு செய்தது. அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன் - சின்னபாப்பா தம்பதியினர், ரியாவின் பெற்றோர் ஆவர். இதையடுத்து திருநங்கை ரியா, கடந்த டிச.3-ம் தேதி திமுக சார்பில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார்.
இந்நிலையில், திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டரில், "நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். திருநங்கைகளுக்கு இதுபோன்ற சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். திருநங்கைகளுக்கு இதுபோன்ற சமூக அங்கீகாரங்கள் தொடர வேண்டும். #LocalBodyElectionspic.twitter.com/QUV33lOKDH